இந்த மலையைப் பார்த்துப் பேசு SPEAK TO THIS MOUNTAIN சான்ஜோஸ், கலிபோர்னியா, அமெரிக்கா 59-11-23 1. உங்களுக்கு நன்றி. நீங்கள் உட்காரலாம். காலதாமதமாக வந்ததற்காக வருந்துகிறேன், ஆனால் நான் வந்து கொண்டிருந்த போது, ஒரு அவசர அழைப்பு வந்தது, அவர்கள் இங்கே வெளியே முற்றத்தில் இருந்தனர். மனநோயால் பாதிக்கப்பட்டு நம்பிக்கை இழந்த நிலையில் ஒரு மருத்துவமனையில் இருந்து வந்திருந்த ஒரு அன்பான நபருக்கு சற்று முன்பு தான் ஊழியம் செய்து கொண்டிருந்தேன். அது தன்னுடைய குழந்தையை இழந்தது முதற்கொண்டு அதிர்ச்சியான நிலைக்குள் போயிருந்த ஒரு சிறு தாயாராயிருந்தது. அவர்கள் அவளை சற்று முன்பு தான் மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்திருந்தனர், அவள் ஏறத்தாழ மிகவும் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தாள், நான் ஒரு முறை அவளிடம் போக வேண்டியிருந்தது. சற்று முன்பு ஜெபித்த ஜெபத்தை தேவன் கேட்டார் என்ற நிச்சயமுடையவனாயிருக்கிறேன், அவள் சரியாகி விடுவாள். பரிதாபமான சிறு கணவனார் மிகவும் நடுக்கமுற்றவராகக் காணப்பட்டார், அது என்னவென்று எனக்குத் தெரியும்; நானே அவைகள் அநேகவற்றினூடாகக் கடந்து சென்றிருக்கிறேன். நான் என்னுடைய குடும்பத்தை இழந்த நிலையில் இருந்தேன், எனக்குத் தெரியும் - அது எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியும். பில்லியின் தாய்... அவைகள் உண்மையாகவே உங்களுக்கு எப்படியிருக்கும் என்பதை உணர்ந்து கொள்வதற்காக, நீங்கள் இந்தக் காரியங்களினூடாகப் போயாக வேண்டும். நீங்கள்... இந்தக் காரியங்களினால் துன்பப்படுபவர்கள் தான், மற்றவர்களோடு எவ்வாறு பரிவிரக்கம் கொள்வது என்பதை அறிவார்கள். 2. எனவே இப்பொழுது, இவ்விதமாக எந்த நேரமும் ஒரு அவசர அழைப்பு வரலாம், நல்லது, ஞாபகம் கொள்ளுங்கள், நாம் அதில் கவனம் செலுத்தும்படிக்கு முயற்சி செய்கிறோம். கூட்டத்தில் சிறிது நேரம் உட்காரவோ அல்லது நிற்கவோ முடிகிற மற்றவர்களிடமும் நாம் பேச முயற்சிக்கிறோம். அவர்களைச் சுற்றிலும் விசுவாசம் கட்டப்படுவதற்காக, நாம் அவர்களிடம் பேச முயற்சி செய்கிறோம். சற்று கவனியுங்கள், என்னுடைய கூட்டங்களிலிருந்து எனக்கு வருகிற சாட்சிகளில் ஒரு பெரும் பகுதியானது கூட்டத்திற்கு வெளியே சுகமடைந்த ஜனங்களிடமிருந்து வரும் சாட்சிகளாயிருக்கிறது. இங்கே மேடையில் என்னிடம் ஜெபிப்பதற்காக அநேகர் வருவதில்லை. நான் ஜனங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறேன்; அதுவே என்னுடைய ஊழியமாயுள்ளது. ஆனால் தனிப்பட்ட முறையில் நான் ஜெபித்தவர்கள் மிக அநேகராயிருக்கவில்லை, ஆனால் அது பரிசுத்த ஆவியாயுள்ளது, அவர்கள் சுகமடையும்போது, அங்கே வெளியிலிருக்கும் அவர்களுடைய விசுவாசமானது அதிகரிக்கிறது. 3. ஆராதனைகளுக்குப் பிறகு, அநேக இடங்களிலிருந்து நூற்றுக்கணக்காக கடிதங்கள் வந்து குவிந்துள்ளன என்று என்னுடைய அலுவலகமானது உங்களிடம் கூற முடியும். குருடாயிருக்கும் ஜனங்கள் ஒருக்கால் கூட்டத்தில் இருந்து, அதன்பிறகு வீட்டிற்குச் சென்று, அதைக் குறித்து அப்படியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு வாரம் கழித்து தங்களுடைய பார்வையைப் பெற்றுக் கொள்வார்கள். அல்லது தெருவினூடாக நடந்து போய்க் கொண்டிருப்பார்கள், அப்பொழுது ஏதோவொன்று சம்பவிக்கிறது; முடமான ஒருவர் ஒரு சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பார், அப்பொழுது திடீரென்று எழுந்து ஓடத் தொடங்குவார். நீங்கள் பாருங்கள், அது அப்படியே... நீங்கள் இந்த ஆசீர்வாதத்தை வேண்டிக்கொள்வீர்களானால்... 4. தேவனால் சில நேரங்களில் தானாகவே பதிலளிக்க முடியாது. எத்தனை பேருக்கு அது தெரியும்? ஞாபகம் கொள்ளுங்கள், தானியேல் ஜெபித்திருந்தான், தூதன் அவனிடம் வந்து சேருவதற்கு இருபது, இருபத்தொன்று நாட்கள் அல்லது அவ்விதமாக ஏதோ நாட்கள் ஆனது என்று நம்புகிறேன். ஆனால் கடைசியாக அவன் தானியேலிடம் வந்து சேர்ந்தான்; அப்படியே - அப்படியே அதைத் தனியே விட்டு விடுங்கள். அவ்விதமாக சம்பவித்த அநேக நூற்றுக் கணக்கான, நூற்றுக் கணக்கான காரியங்களைக் குறித்த சாட்சிகளை நம்மால் கூற முடியும். 5. இப்பொழுது, நம்மால் கூடுமானவரை சிறந்த முறையில் இந்த எழுப்புதலை நாம் கொண்டிருக்க முயற்சி செய்கிறோம். நாம் எண்ணுகிறபடி, தெய்வீக சுகமளித்தலை நாம் முக்கியத்துவப்படுத்துவதில்லை (ம்ஹத்ர்ழ்), ஏனென்றால் தெய்வீக சுகமளித்தல் ஒரு முக்கியத்துவமற்ற சிறிய காரியம் (ம்ண்ய்ர்ழ்) தான். ஒரு சிறிய முக்கியத்துவமற்ற காரியத்தை உங்களால் முக்கிய பிரதானமான காரியமாக ஆக்க முடியாது; நமக்கு அது தெரியும். எந்த எழுப்புதலிலும், முதலாவது நாம் தேடி நாடிக் கொண்டிருக்கிற பெரிய காரியம் என்னவென்றால், இழக்கப்பட்ட ஆத்துமாக்களை கிறிஸ்துவிடம் கொண்டு வருவது தான்; அடுத்தது சபையை அது எவ்வாறு இருக்க வேண்டுமோ, அப்படிப்பட்ட ஒரு ஆவிக்குரிய நிலைக்கு மீண்டும் உயிர்மீட்சியடையச் செய்து, அதை தேவனோடு நெருக்கமான ஐக்கியத்துக்குள் கொண்டு வருவது தான். மூன்றாவது செய்ய வேண்டியது என்னவென்றால், சபைகளுக்கிடையே ஐக்கியத்தைக் கொண்டு வருவதாகும்; நான்காவது தான் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதாகும். அதுதான் - அதுதான் நம்முடைய நோக்கமாகும், அதைத்தான் நாம் முயற்சி செய்கிறோம், முதலாவது பாவிகள், அடுத்தது சபைகளோடு ஐக்கியம், அடுத்தது சபையானது தேவனோடு நெருங்கி நடப்பது, அதன்பிறகு வியாதியஸ்தருக்காக ஜெபம் செய்வது. 6. இன்றிரவு திங்கள் கிழமை இரவாக இருக்கிறது, இங்கேயிருக்கும் இந்த ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கு பேரை நான் எதிர்பார்க்கவில்லை என்று உங்களிடம் கூறுகிறேன். அது உண்மை. இருநூறு அல்லது முந்நூறு பேருக்கு மேல் வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை. வழக்கமாக திங்கட்கிழமை இரவு நேரங்களில், கிழக்குப் பகுதியில், நல்லது, கூட்டங்கள் ஏறத்தாழ மந்தமாக இருக்கும். ஆனால் நேற்று பிற்பகல் அங்கே கலந்து கொண்டவர்களைக் காட்டிலும், இன்றிரவு இங்கே அதிகமான பேர் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். 7. எனவே, இன்றிரவில், ஒரு இரவு கூட நான் பேச விரும்புகிறேன் என்றும், இதை நான் பிரதிஷ்டையின் இரவு (consecration night) என்று அழைக்க விரும்புகிறேன் என்றும் நேற்று பிற்பகல் நான் கூறினேன். நான் உள்ளான காரியங்களுக்குள் போக விரும்பினேன், அப்போது என்னுடைய சொந்த ஜீவியத்தில் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு இடைபடுகிறார் என்பதைக் குறித்து நீங்கள் சிறிது அறிந்து கொள்வீர்கள். அவ்வாறு செய்வதன் மூலமாக, அது உங்களை முன்னேற்றமடையச் செய்யும் என்றும், அது உங்களை தேவனோடு நெருங்கி வரச் செய்யும் என்றும் நான் - நான் நம்புகிறேன். இப்பொழுது சபையில் அடுத்ததாக வரவிருக்கிற ஒரு தெய்வீக வரத்தைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன்... தேவன் செய்யப் போகிற எதுவாக இருந்தாலும், அதில் நாம் அனைவரும் ஆர்வமுள்ளவர்களாய் இருக்கிறோம் என்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. இதைப் போன்று இந்தியானாவிலுள்ள என்னுடைய சொந்த கூடாரத்தில் ஒரு முறை மட்டுமே கூறப்பட்டது. 8.அடுத்து, கடந்த சில நாட்களில் என்ன சம்பவித்தது என்பதை நான் இன்றிரவு உங்களிடம் கூற முயற்சிக்கப் போவதாயிருந்தேன். அது புதிதானதும், உற்சாகமூட்டுவதுமான காரியமாகும்; மேலும் நான் - அது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நினைத்தேன், இந்த வார கூட்டத்தின் துவக்கமாக, அதை இன்றிரவு தொடங்கலாம். நீங்கள் எனக்காகவும், சபைக்காகவும் ஜெபிக்க அது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும், தேவன் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருக்கிற இந்த மகத்தான காரியத்திற்குள் நாம் அனைவரும் கடந்து சென்றாக வேண்டும், இந்தக் கூட்டத்தில் நாம் அதற்குள் போக முடியும். அது சம்பவிக்கிறதை நான் காண வாஞ்சிக்கிறேன், இதுவோ மிக மோசமாக உள்ளது; கிறிஸ்துமஸ் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிற ஒரு சிறு பிள்ளையைப் போல நான் - நான் இருக்கிறேன், அது சம்பவிப்பதற்காக எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறேன். அது எனக்கு கடினமாக இருக்கும், நிச்சயமாக, ஆனால் சபைக்கு அது - அது ஒரு நல்ல காரியமாக இருக்கும். நான் அதில் தான் அக்கறை கொண்டுள்ளேன்: தேவனுடைய ஜனங்களுக்கு, தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருப்பதற்கும், அவர்கள் ஒரு புதிய நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதற்கும் அவர்களுக்கு உதவிபுரிகிற ஏதோவொன்றில் தான் நான் அக்கறை கொண்டுள்ளேன், அது சுகவீனமுள்ளவர்களுக்கும் கூட மகத்தான ஒரு காரியமாக இருக்கும். 9.நான் குறிப்பிட விரும்பும் இங்கேயுள்ள சில வேதவாக்கியங்களை நாம் வாசிப்பதற்கு முன்பு, நாம் ஜெபம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். பிறகு, நாளை இரவு விசேஷமாக இரட்சிப்பிற்கான ஒரு கூட்டத்தைக் கொண்டிருக்க நாம் வாஞ்சிக்கிறோம் என்பதையும் கூட நான் அறிவிக்க விரும்புகிறேன், அது நாளை இரவில் இருக்கும். உங்களால் கூடுமானால், நீங்கள் ஒவ்வொருவரும் நாளை இரவில் சில பாவிகளை உங்களோடு அழைத்து வர நாங்கள் விரும்புகிறோம். உங்களுக்குத் தெரிந்த சில பாவியான நபர்களை உங்களோடு வரும்படி அழையுங்கள், ஏனென்றால் நாளை இரவில் பாவிகள் வந்து கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களுக்காக ஒரு விசேஷமான முயற்சியை நாங்கள் எடுக்கப் போகிறோம். 10. நிச்சயமாக, ஒவ்வொரு இரவும், பரிசுத்த ஆவியானவர் இங்கேயிருக்கிறார். நீங்கள் எங்கே போனாலும், அவர் எப்போதுமே அங்கேயிருக்கிறார். நீங்கள் - நீங்கள் ஒருபோதும் அவரை விட்டு விலகிப் போக மாட்டீர்கள். தாவீது தன்னுடைய படுக்கையை எங்கு போட்டாலும், தேவன் அங்கே இருந்ததாக அவன் கூறினான் (சங்கீதம் 139:8). ஏனென்றால் தேவதூதர்கள் அவருக்குப் பயந்தவர்களைச் சூழ பாளையமிறங்குகிறார்கள் (சங்கீதம் 34:7). சற்று எண்ணிப் பாருங்கள், அவர்கள் பாளையமிறங்கி உங்கள் பக்கத்திலேயே இருந்து, எல்லா நேரமும் உங்களை காவல் காக்கிறார்கள். நம்முடைய தேசத்தில், தெற்கில், மிகவும் ஆவிக்குரியவர்களாகிய கறுப்பின ஜனங்கள் அநேகர் நமக்குண்டு. அவர்கள் சில சமயங்களில் என்னுடைய கூட்டத்திற்கு வந்து, வழக்கமாக ஒரு சிறு பாடலை எனக்காகப் பாடுவார்கள்... வழக்கமாக அங்கேயிருக்கிற ஒரு வயதான கறுப்பின சகோதரியை நினைவுகூருகிறேன், அவர்கள், ‘பகல் முழுவதும் இரா முழுவதும் தூதர்கள் என்னைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்ற பாட்டை பாடி, அவர்களால் ஜனங்கள் மத்தியில் தேவனுடைய ஆவியைக் கொண்டு வர முடியாமல் போகிறதா என்று (பாருங்கள்). ஓ, அவர்களால் அந்தப் பாடலைப் பாட முடியாமல் இருந்தால்... எனவே நான் எப்போதுமே - கூட்டத்தை சேதப்படுத்தும் (காரியங்களிலிருந்து) காத்துக் கொள்ள நான் சற்றேறக்குறைய என் கரங்களை கட்டிப் போட வேண்டியதாயிருந்தது, நான் அப்படியே மேலும் கீழும் துள்ளிக் குதித்து, சத்தமிட்டுக் கொண்டு, எல்லா இடங்களுக்கும் ஓடிக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது, நான் அவ்வாறு செய்தேன் என்று நீங்கள் நினைக்கவில்லை, அப்படித்தானே? ஆனால் நான் அவ்வாறு தான் செய்கிறேன். கூட்டத்தைப் பாழ்படுத்துகிற காரியங்களிலிருந்து நான் பாதுகாப்பதில்லை, ஆனால் எனக்குள் இருக்கிற அவரே அதைச் செய்கிறார். நான் உணருகிற விதமாய் யாராவது உணருவார்களானால், அவர்களும் அதே காரியத்தையே செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். அது வெறுமனே ஒரு அனுபவமாயுள்ளது. ஆம், ஐயா, நிச்சயமாக அவ்வாறு தான் உள்ளது. எனவே இப்பொழுது இந்த அறிவிப்புகளை நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது, நாம் அவருடைய விலையேறப்பெற்ற வார்த்தைக்குத் திருப்புவதற்கு முன்பு நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 11. அன்புள்ள கர்த்தாவே, எங்களுடைய சொந்த இரட்சகராக உம்மை அறிந்து கொண்ட சிலாக்கியத்திற்காகவும், நாங்கள் மரணத்தை விட்டு ஜீவனுக்குட்பட்டு விட்டதையும், பிறகு கிறிஸ்துவின் ஆவி எங்களுக்குள்ளும் எங்களைச் சுற்றிலும் எங்கள் மத்தியிலும் வாசம் பண்ணுவதையும் அறிந்து கொண்டதற்காகவும் நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், மேலும் நாங்கள் அவருடைய நாமத்தினால் அழைக்கப்பட்ட அவருடைய ஜனங்களாய் இருக்கிறோம். தூதர்கள் இரவும் பகலும் எங்களைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் விலகுவதில்லை; அவர்கள் பாளையமிறங்கியிருக்கிறார்கள். எங்களை காவல் காக்க வேண்டுமென்றும், எங்களை பாதுகாக்க வேண்டுமென்றும் தேவனால் கட்டளை பெற்ற தேவ தூதர்களின் பிரசன்னத்தின் நிமித்தமாக, தேவன் எந்த நேரமும் மிகவும் அதிகமான எதையும் செய்வார் என்று எங்களால் எதிர்பார்க்க முடிகிறது. 12. இப்பொழுதும், பிதாவே, இன்றிரவு தேவதூதர்கள் ஒவ்வொரு விசுவாசியின் பக்கத்திலும், கட்டிடம் முழுவதும் எல்லா இடங்களிலும் தங்களுடைய இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம், இந்தக் கூட்டமானது எங்களுடைய நினைவுகளிலும், எங்களுடைய இருதயங்களிலும் ஒரு - ஒரு - ஒரு அடையாளமாக இருக்கும்படியாகவும், இன்றிரவு தேவனுடைய மகிமையின் ஊற்றப்படுதலை எங்களுடைய ஜீவிய காலமெல்லாம் நினைவுகூரும்படியாகவும் ஏதோவொன்று சொல்லப்படுவதாக, அல்லது செய்யப்படுவதாக. 13. இங்கே அமர்ந்து கேட்டுக்கொண்டும், அவர்களால் கூடுமான ஒவ்வொரு முயற்சியைக் கொண்டு, ஜெபத்தினால் தாங்கிக் கொண்டும் இருக்கும் என்னுடைய ஊழியக்கார சகோதரர்களை ஆசீர்வதியும். இச்சகோதரர்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. நீர் அவர்களுக்கு அபிஷேகத்தையும் வல்லமையையும் கொடுத்தருள வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்களுடைய இருதயத்தின் வாஞ்சைகள் அவர்களுடைய ஜீவியத்தில் நிறைவேற்றப்படுவதாக. வெளியிலிருக்கிற சபையோராகிய மற்றவர்களுக்கும் அதேவிதமாக செய்யப்படுவதாக, பிதாவே. எங்களுடைய குறைபாடுகளை எங்களுக்கு மன்னியும், எங்களில் அநேக குறைபாடுகள் உண்டு. 14. நீர் இப்பொழுது உமது வார்த்தையை எடுத்து, அதை எங்களுடைய இருதயங்களுக்கு ஆசீர்வதித்துத் தர வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, நான் உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன், அது ஒருக்கால் ஜனங்கள் கொண்டிருக்கும் சிந்தனையாக இல்லாமல் இருக்கலாம், ஏனென்றால் நீர் எனக்குக் கொடுத்த ஒரு அனுபவத்தை நான் குறிப்பிட்டுக் கூறிக் கொண்டிருக்கிறேன், நான் சத்தியத்தைக் கூறிக் கொண்டிருக்கிறேன், கர்த்தாவே, அது ஒருவேளை தனிப்பட்ட விதமாக குறிப்பிட்டு கூறின கருத்தாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது நீர் உம்முடைய ஜனங்களுக்காக ஆயத்தமாக்கின காரியமாய் இருக்கிறது. யாவரும் களிகூர்ந்து கொண்டும் விசுவாசித்தும் கொண்டும் இருப்பார்களாக, அதன் மூலமாக யாவரும் நன்மையைப் பெறுவார்களாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். 15. இப்பொழுது, சில வருடங்களுக்கு முன்பு... நான் அநேக வருடங்களுக்கு முன்பு வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படி முதன்முதலில் மேற்கு கடற்கரைக்கு வந்த நேரத்தை ஞாபகம் வைத்துள்ளவர்கள் எத்தனை பேர் இன்றிரவு இக்கட்டிடத்தில் இருக்கிறீர்கள்? நான்... மிசிசிப்பிக்கு மேற்கில் எனக்கு கிடைத்த முதலாவது அழைப்பு சான் ஜோஸ் தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? சான் ஜோஸ், கலிபோர்னியா... அது யார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் செயின்ட் வைட்டஸ் டான்ஸ் என்ற கோளாறைக் கொண்டிருந்த (Saint. Vitus’ dance - இது முகம், கை, கால்களைப் பாதிக்கும் ஒருவகை கோளாறு – மொழிபெயர்ப்பாளர்.) ராபர்ட் டாகெர்ட்டி அவர்களின் சிறிய பெற்றி சுகமடைந்த பிறகு உடனடியாக சான் ஜோசுக்கு என்னை அழைத்த யாரோ ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது. நான் ஊழியக்களங்களில் தொடங்கின ஊழியத்தின் ஆரம்பமாக அது இருந்தது. 16. எனக்கு ஞாபகமிருக்கிறது, நான் அந்நாட்களில் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதை ஜனங்களாகிய உங்களில் அநேகரால் நினைவுகூர முடியும், நான் அவர்களைக் கரத்தால் பற்றிப் பிடித்தவாறு, அப்படியே அங்கே நின்று கொண்டிருப்பேன், அப்போது கர்த்தர் என்னிடம் பேசுவார் (நான் என்னுடைய சொந்த சிந்தனையை உபயோகப்படுத்த மாட்டேன்) அந்த நபரிடம் என்ன கோளாறு உள்ளது என்று கர்த்தர் கூறுவார். நான் கிரீன்ஸ் மில் என்ற இடத்தில் அவரை சந்தித்த அந்த இரவில், என்ன சம்பவிக்கும் என்று அவர் என்னிடம் கூறினபோது, அவர் என்னிடம் என்ன கூறினாரோ அது மிகச் சரியாக காம்ப் கூட்டத்தில் சம்பவித்தது. அப்போது, ‘அவர்களுடைய இருதயத்தின் இரகசியங்களை நீ அறிந்து கொள்வது சம்பவிக்கும்’ என்று அவர் என்னிடம் கூறினார். அது அவ்விதமாகவே சம்பவிக்கும் என்று நான் கூறினது உங்களுக்கு ஞாபகமிருக்கும். அது சம்பவிக்கும் என்று நான் கூறினது பழங்காலத்தவருக்கு ஞாபகமிருக்கும், எத்தனை பேர் அதை நினைவில் வைத்துள்ளீர்கள்? நல்லது, அது அவ்விதமாகவே சம்பவித்திருக்கிறது என்பதைப் பாருங்கள். 17. இப்பொழுது, அது மீண்டும் முன்னேற்றமடையும் என்று அவர் வாக்குப்பண்ணியுள்ளார். இப்பொழுது, இங்கே கடந்த வசந்த காலத்தின் போது, ஏதோவொன்று சம்பவிக்கப்போகிறது என்று உங்கள் எல்லாரிடமும் நான் கூறினேன். நான் நம்புகிறேன் நான் - நான் ஏறக்குறைய அதை அடைந்து விட்டேன் என்றும் அது மிகவும் சமீபமாயுள்ளது என்று உணருகிறேன் என்றும் நான் கூறின ஒலிநாடாக்களின் மூலமாக எனக்கு நன்றாக அது ஞாபகமுள்ளது. கடந்த வருடத்தில் அந்த கூட்டத்திலிருந்து எத்தனை பேர் அதைக் கேட்டீர்கள்? பாருங்கள்? நல்லது, அது எவ்வாறு முன்னேற்றமடைந்துள்ளது என்பதை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். அதைத்தான் நான் இன்றிரவு செய்ய விரும்புகிறேன். இதைக் கூறுவதற்கு முன்பு... தேவன் தாம் செய்ய விரும்புகிற எதையும் அவரால் செய்ய முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் தேவனாய் இருக்கிறார். ஆனால் அவர் செய்வது வேதாகமத்தில் அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும் என்று விசுவாசிக்கிற அப்படிப்பட்ட ஒரு வேதாகம விசுவாசியாக நான் இருக்கிறேன். வேதாகமம் அதை முதலாவது பேச வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா, அப்படியானால் நாம் சரியாக இருக்கிறோம் என்பதை அறிவோம், வேதாகமம்... (கூறும்) காலம் வரை. அது தேவனால் செய்யப்பட்ட ஒரு வாக்குத்தத்தமாயுள்ளது. 18. இப்பொழுது வார்த்தை தவறிப் போகாது என்பதைக் குறித்து சிறிது நேரம் நான் உங்களிடம் பேச விரும்புகிறேன். முதலாவதாக, தேவன் முடிவற்றவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். சம்பவிக்கப் போகும் யாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார் என்பதில் அவர் மிகவும் பரிபூரணமுள்ளவராயிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர் முடிவற்றவராக இருப்பாரானால், நாம் இன்றிரவு இங்கே அமர்ந்திருப்போம் என்பதை உலகம் உண்டாவதற்கு முன்பே அவர் அறிந்திருந்தார். அவர் முடிவற்றவராக இல்லையென்றால், அவர் தேவனல்ல. ஆகையால் அவர் முடிவுள்ளவராக இருப்பாரானால், நம்மைப் போலவே அவரும் இருக்கிறார். ஆனால் அவர் முடிவற்றவராயிருக்கிறார், அதை விளக்குவதற்கு எந்த வழியும் கிடையாது. தேவன் எதைக் கூறினாலும் அது பரிபூரணமாயுள்ளது; அவரால் அதைத் திருத்தவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாது. அது பரிபூரணமாயுள்ளது, ஏனென்றால் தேவன் பரிபூரணமாயிருக்கிறார், அவருடைய வார்த்தைகளும் பரிபூரணமாயுள்ளன. அவருடைய வாக்குத்தத்தங்கள் ஒருபோதும் தவறிப்போக முடியாது. இப்பொழுது, நீங்கள் வேதத்தை வாசிக்கும் போது, தேவனுடைய வாக்குத்தத்தங்களை விசுவாசிப்பதற்கு, நீங்கள் நிச்சயமாக அம்மாதிரியான விசுவாசத்தை தேவன் மேல் கொண்டிருக்க வேண்டும். அவர் பரிபூரணமாயிருக்கிறார் என்றும் அவருடைய வார்த்தைகள் பரிபூரணமாயிருக்கிறது என்றும் நீங்கள் நிச்சயமாக நினைவில் கொள்ள வேண்டும், அவைகள் ஒருபோதும் தவறிப்போக முடியாது; அவைகள் ஒருபோதும் திருத்தப்பட முடியாது; அவைகள் ஆரம்பம் முதலே பரிபூரணமாயுள்ளன. 19. இப்பொழுது, பத்து வருடங்களுக்கு முன்பு உருவாக்க முடிந்த காரைக் காட்டிலும் ஒரு சிறந்த காரை நம்மால் இன்றைக்கு உருவாக்க முடியும். நீங்கள் அநேகமாக இன்று ஒரு சிறந்த விமானத்தை உருவாக்க முடியும்; விஞ்ஞானிகளால் அதைச் செய்ய முடியும். காரணம் என்னவெனில் நாம் முடிவுள்ளவர்களாயிருக்கிறோம், நாம் அறிவின் விருட்சத்தில் முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறோம். ஆனால் தேவன் துவக்கமுதலே பரிபூரணமாயிருக்கிறார்; அவர் எதையாவது கூறும்போது, அது பரிபூரணமாயுள்ளது. அது ஒருபோதும் திருத்தங்கள் செய்யப்பட முடியாது. ஆகையால், தேவன் ஒரு வாக்குத்தத்தம் பண்ணும்போது, அந்த வாக்குத்தத்தமானது நித்தியமாக சரியாயுள்ளது. அது சரியாக இருப்பதைத் தவிர வேறெதாகவும் ஒருபோதும் இருக்க முடியாது. 20. நாம் இப்பொழுது அவருடைய வார்த்தையை வாசிக்கும்போது அதைக் குறித்து சிந்திக்க வேண்டுமென்று விரும்புகிறேன். என்னோடு மாற்கு 11ம் அதிகாரத்திற்குத் திருப்புங்கள், நாம் மாற்கு 11வது அதிகாரம் 20வது வசனத்திலிருந்து வாசிக்கத் தொடங்குவோம். நீங்கள் - நீங்கள் அந்த வேத பாகத்திற்குத் திருப்புவதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன், இந்தப் பாடத்தின் பின்னணியைக் குறித்து நான் உங்களிடம் கூறுவேன். இயேசு அப்போது தான் ஆலயத்திற்குப் போயிருந்தார். அவர் ஆலயத்திற்குப் போகும் அவருடைய வழியில், காசுக்காரராகிய ஜனங்களைத் துரத்தத் துவங்கினார்... காசுக்காரர்களையும் சரியில்லாத காரியங்களைச் செய்கிறவர்களையும் துரத்தத் துவங்கினார், தேவனுடைய வீடு ஜெப வீடாயிருக்கிறது என்று எழுதியிருப்பதாக அவர்களிடம் கூறினார். ஆனால் அவர்களோ அதைக் கள்ளர்கள், கொள்ளைக்காரர்களின் குகையாக்கியிருந்தார்கள், அவர்கள் தேவனுடைய வீட்டை தகாத வழியில் உபயோகித்துக் கொண்டிருந்தார்கள். பிறகு அடுத்த நாள் காலையில் அவர் போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு அத்தி மரத்தை அவர் கண்டார். அதில் இலை இருந்தது - அந்த மரத்தில் இலைகள் இருந்தன, ஒருவேளை அதில் சில அத்திப்பழங்கள் இருக்குமோ என்று நினைத்தார். எனவே கொஞ்சம் அத்திப்பழங்களைப் பறிக்கும்படிக்கு போனார். அது அத்திப்பழக்காலமாய் இராதபடியால், அதில் ஒரு அத்திப்பழமும் இல்லாதிருந்தது. அப்போது அவர் அந்த மரத்தைப் பார்த்து, ‘இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் (கனியைப்) புசியாதிருக்கக்கடவன்’ என்றார். (இதன் தொடர்ச்சியை) நாம் இருபதாம் வசனம் தொடங்கி இப்பொழுது வாசிக்கத் துவங்குவோம். (மாற்கு 11:20-24) மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப் போயிருக்கிறதைக் கண்டார்கள். பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான். இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். 21. கொஞ்ச காலத்திற்கு முன்பு நான் இதை வாசித்த போது, அது என்னை சிறிது திக்குமுக்காடச் செய்தது, ஏனெனில் பாவபரிகாரத்தின் மூலம் மாத்திரமே அல்லாமல், வேறெதன் மூலமாகவும் ஆசீர்வாதங்கள் வருவதில்லை என்று நான் எப்போதுமே போதித்து வருகிறேன், இன்றிரவும் அதையே போதிக்கிறேன். இயேசு எதற்காக மரித்தாரோ அதற்கான ஒவ்வொரு மீட்பின் ஆசீர்வாதங்களுக்காகவும், பாவபரிகாரமே வழியை ஏற்படுத்தினது. ஆகையால் இந்த வேதவாக்கியம் என்னைத் திகைப்படையச் செய்தது. இப்பொழுது, நான் கூட்டங்களில் அநேக தடவைகள் கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள், நான் இன்றிரவு மீண்டும் அதை மேற்கோள் காட்டுகிறேன், தெய்வீக சுகமளித்தல் என்பது தேவன் ஏற்கனவே செய்திருக்கிற ஏதோவொன்றாக உள்ளது. இரட்சிப்பு என்பது ஏற்கனவே கிரயம் செலுத்தப்பட்ட ஏதோவொன்றாக உள்ளது. இயேசு கிரயம் செலுத்தினார்... ‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்.’ அவர் கல்வாரியில் மரித்தபோது, அவர் பாவத்திற்கான கேள்வியையும், மனிதனின் மீட்பின் வரிசையிலுள்ள ஒவ்வொரு கேள்வியையும், உயிர்த்தெழுதல் மற்றும் எல்லாவற்றையும் கூட தீர்த்து விட்டார். அவருடைய உயிர்த்தெழுதலின் மூலமாக அவர் அதை நிரூபித்தார். ஆகையால், இப்பொழுது, ஒரு நபர், ‘நான் கடந்த இரவு இரட்சிக்கப்பட்டேன். நான் பத்து வருடங்களுக்கு முன்பு இரட்சிக்கப்பட்டேன்’ என்று கூறுவாரானால், அது அவ்வாறில்லை, நீங்கள் உண்மையாகவே 1900 வருடங்களுக்கு முன்பே இரட்சிக்கப்பட்டு விட்டீர்கள். நீங்கள் அதை கடந்த இரவிலோ அல்லது 10 வருடங்களுக்கு முன்போ ஏற்றுக் கொண்டீர்கள். பாருங்கள், அதற்காக ஏற்கனவே கிரயம் செலுத்தப்பட்டு விட்டது; அவர் உங்களுக்காக செய்துள்ளதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுகிற ஏதோவொன்றாக அது உள்ளது. அது நீங்கள் அவருடைய வார்த்தையிலிருந்து உரிமை கோருகிற ஆசீர்வாதத்தைக் கொண்டு வருகிற தேவனிடத்திலுள்ள உங்கள் விசுவாசமாக உள்ளது. சுவிசேஷம் பிரசங்கிக்கப்படக் கூடியதைப் போலவே அதுவும் அவ்வளவு உணரக்கூடியதும், முழுமையானதுமாய் உள்ளது என்று நம்புகிறேன், ஏனெனில் அதைத்தான் இயேசு நமக்காகச் செய்தார். நம்மால் செய்யக்கூடாதவற்றையும் கிறிஸ்து நமக்காகச் செய்தார், முடிக்கப்பட்ட அவருடைய கிரியையில் உள்ள நம்முடைய விசுவாசத்தினால் நாம் எதைக் கேட்கிறோமோ அந்த ஆசீர்வாதத்தை நமக்கு அது கொண்டு வருகிறது. 22. பரிசுத்த ஆவியானவர் அசைவாடி பகுத்தறிதலைத் துவங்கும்போது, இங்கே ஜெப வரிசையில் அவ்வாறு தான் நான் கூறுகிறேன், அதாவது தேவ பிரசன்னத்தை ஜனங்கள் மத்தியில் கொண்டு வரும்படிக்கு அவ்வாறு செய்கிறேன்; ஒரு துதிப்பாடலைப் பாடுவதைப் போன்றோ, சத்தமிடுவதைப் போன்றோ, அறியப்படாத பாஷைகளில் ஒரு செய்தி கொடுக்கப்படுவதைப் போன்றோ அல்லது ஏதோவொன்றைப் போன்றோ (ஏதாவது) செய்யப்படுகிறது, அது தேவனுடைய ஆவியை ஜனங்கள் மத்தியில் கொண்டு வருகிறது. ஆவியானவர் ஜனங்கள் மத்தியில் வந்து, அவர்கள் அப்படியே உரத்த சத்தமிடும் அளவுக்கு உங்கள் மேய்ப்பர் அநேக தடவைகள் வார்த்தையின் பேரில் பிரசங்கம் பண்ணுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அப்பொழுது அவர்களால் தங்களை அடக்கிக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் தேவனுடைய ஆவியானவர்... ‘மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.’ தேவ ஆவியானவர் தேவனுடைய வார்த்தையை எடுத்து சபையோருக்குக் கொண்டு வந்து, அவர்களை போஷிக்கிறார், அவர்கள் அந்த வார்த்தையில் ஆவிக்குரிய பிரகாரமாக வளருகிறார்கள். இப்பொழுது, அதுதான் சுவிசேஷம். 23. பிறகு, நான்... ஒருவிசை நரகத்தைக் குறித்து வேதாகமத்தில் வாசித்த போது, ‘நரகம்’ என்ற வார்த்தையானது பாதாளம் (hades) என்ற வார்த்தையிலிருந்து வருகிறது என்று வாசிக்கத் துவங்கினேன், அதற்கு ‘கல்லறை’ என்று அர்த்தமாகும். நான் மூன்று அல்லது நான்கு வருடங்களாக, நரகம் என்ற பாடத்தின் பேரில் பிரசங்கிக்கவேயில்லை, ஏனெனில் அது, ஒரு இடத்தில் எரிகிற அக்கினி போன்று காணப்படுகிறது; ஆனால் அடுத்த இடத்திலோ அது கல்லறை போன்று தோன்றுகிறது. நான் அதைக் குறித்த சத்தியத்தைக் கண்டுபிடிக்கும் வரையில், நான் அதைக் குறித்துப் பிரசங்கிக்கவேயில்லை. அதன்பிறகு அது என்னவென்று மிகச்சரியாக அறிய வேண்டியதாயிருந்த போது, கர்த்தருடைய தூதனின் ஒத்தாசையின் மூலமாக அது எனக்கு வெளிப்பட்டது, ஏனெனில் எனக்கு எந்த பள்ளிப்படிப்பும் கிடையாது, அவர் வந்து அதை எனக்கு வெளிப்படுத்தும் வரையில், நான் அப்படியே வேதவாக்கியத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு ஜெபித்து வேதவாக்கியங்களை ஆராய்ந்து கொண்டிருந்தேன். 24. நீங்கள் அந்தப் படத்தில் காண்கிற அந்த ஒளியில் அவர் என் முன்பாக நின்று, அதை வெளிப்படுத்தித் தருகிற போது, அது ஒவ்வொரு முறையும் வேதவாக்கியத்தோடு முற்றிலுமாக பரிபூரணமாயுள்ளது. அது கர்த்தருடைய தூதனானவர் என்று நான் அறிந்திருப்பதற்கு காரணம் அதுதான், ஏனெனில் அவர் தம்முடைய வார்த்தையைக் குறித்து சாட்சி கொடுக்கிறார். வேதவாக்கியத்தில் இல்லாத ஒரு காரியத்தை அந்த தூதன் என்னிடம் கூறுவாரானால், நான் அவரை விசுவாசிக்க மாட்டேன். அது முதலாவது வார்த்தையில் இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை நித்தியமாயுள்ளது. ஏனெனில் ஒரு தூதன் வந்து வேறு எதையாவது பிரசங்கித்தால், அது சரியானதல்ல என்று பவுல் கூறினான். ஆனால் அது தேவனுடைய வார்த்தையாக இருந்து, அது கர்த்தரிடத்திலிருந்து வந்த ஒரு உண்மையான தூதனாக இருக்குமானால், தேவனுடைய தூதனானவர் அந்த வார்த்தை சத்தியம் என்று ஒவ்வொரு முறையும் நிரூபிப்பார். அது அதற்கு மாறான எதுவாகவும் இருக்குமானால், அதற்கு உங்கள் கவனத்தை செலுத்த வேண்டாம். ஆனால் ஒரு தூதன் வந்து, சரியாக வார்த்தை கூறுவதையே பேசி, அதையே கூறுவாரானால், அத்தூதன் தேவனிடமிருந்து வந்த தூதனாகும். 25. இப்பொழுது, அதன்பிறகு இந்த வேதவாக்கியத்தின் பேரில் பிரசங்கம் பண்ணுவதற்கு நான் என்னைத்தானே நியாயப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எவ்வாறு... இயேசு இங்கே, ‘நீங்கள் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்தில் தள்ளுண்டு போ என்று சொல்லி, நீங்கள் சொன்னபடியே நடக்கும் என்று உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், நீங்கள் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்று கூறினதை நீங்கள் கவனித்தீர்களா? இப்பொழுது, அது சரியென்று காட்ட என்னால் முடியவில்லை, ஏனென்றால் என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு மனிதனாக நான் எதையாவது கூறினால், அது எப்படி (சம்பவிக்க) முடியும், அப்படியானால், எப்படி... அவருடைய வார்த்தையின்படி இல்லாத ஏதோவொன்றை நான் கூறி, அவருடைய வார்த்தையின்படி இல்லாத ஏதோவொன்றை நான் கேட்டால், அது சம்பவிக்க வேண்டியதாயுள்ளதே. ஏனென்றால் இயேசு, ‘நீங்கள் கூறினால்...’ என்றார், ‘நான் கூறினால்...’ என்றல்ல, ஆனால் ‘நீங்கள் கூறினால்’ என்றே கூறினார். அவர் அதை தம்முடைய அப்போஸ்தலர்கள் மேலும், விசுவாசிகள் மேலும் நியமித்தார். ‘எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து போ என்று சொல்லி, அவர்கள் சொன்னபடியே நடக்கும் என்று தங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவர்கள் சொன்னபடியே ஆகும்.’ அவர் சொன்னபடியே ஆகும் என்றல்ல, நீங்கள் சொன்னபடியே ஆகும். 26. இப்பொழுது, அது எனக்கு, பாவநிவிர்த்தியிலிருந்து அதை எடுத்துப் போட்டு விட்டு, அதை ஒரு நபரின் மீது வைப்பதாக இருந்தது. என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் - ஏறக்குறைய மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பு, அவ்வாறு சென்று கொண்டிருந்த போது - நான் அதை வெறுமனே வாசித்துக் கொண்டிருந்தேன், அப்போது அந்த மரம் பட்டுப்போனதைக் கவனித்தேன். அது தேவனுடைய ஒரு அற்புதம் என்று நினைத்தேன், இருப்பினும், அங்கே ஏதோவொன்று என்னுடைய மனதைக் கவர்ந்து இழுக்கத் தொடங்கி, ‘நீ கூறுவது அப்படியே சம்பவிக்கிறதா என்று அந்த வேதவாக்கியத்தைப் பரிசோதித்துப் பார்க்கிறாயா?’ என்றது. ‘நீங்கள் அதைச் சொல்லி, அது நடக்கும் என்று விசுவாசித்தால், நீங்கள் சொன்னபடியே ஆகும்.’ 27. அது என்னை வியக்க வைத்தது, நான் அப்படியே அந்த வேதபாகத்தை தவிர்க்கும்படி தாண்டிச் சென்று விட்டேன். தேவனுடைய இரத்தத்தால் விலைகொடுத்து வாங்கப்பட்டவர்களுக்கு முன்பாக நான் எதைக் கூறுகிறேனோ அதற்காக நான் தேவனுக்கு பொறுப்பாளியாய் இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள்கிறேன். நியாயத்தீர்ப்பு நாளில் தேவன் அதற்காக என்னை பதில் கூறும்படி செய்வார் என்பதை நான் உணர்ந்து கொள்கிறேன். ஆகையால், நான் எதையும் கூறுவதற்கு முன்பு, அது சரியாயிருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அது வேதவாக்கியங்கள் முழுவதும் சரியாயிருக்க வேண்டும், அது நிச்சயமாக தத்ரூபமான ஒன்றாக இருக்க வேண்டும். வெறுமனே ஒரு இடத்திலல்ல, ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அது சரியாயிருக்க வேண்டும். அது நிச்சயமாக அதேவிதமாக சரியாயிருக்க வேண்டும். அது நிச்சயமாக ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் வரையில் மாறாமல் இருந்தாக வேண்டும். அது அவ்வாறு இல்லாவிட்டால், நான் நிச்சயமாக ஏதோ தவறான ஒன்றை சொல்லியிருக்க வேண்டும். 28. எனவே நான் அகராதிகளையும், விளக்கவுரைகளையும், வித்தியாசமான பதிப்புகளையும், டூவே பதிப்பையும் கூட எடுத்து, என்னால் கண்டுபிடிக்கும்படி கூடுமான யாவற்றையும் செய்தேன். ஒவ்வொரு வேதவாக்கியமும், கிரேக்க பாஷையிலும், எபிரேய பாஷையிலும், அவையெல்லாமே அதே காரியத்தையே கூறின: இயேசு அதைக் கூறினார். சர்ச்சை எதுவும் கிடையாது, டூவே பதிப்பிலும் கூட அதே காரியமே கூறப்பட்டிருந்தது, அது ரோமன், அல்லது கத்தோலிக்க வேதாகமமாகும்: டூவே பதிப்பு (Douay version). அவைகளில் எதுவுமே அதை மறுத்து பேசவேயில்லை, ஆனால் இயேசு தாமே அதைக் கூறினார். ‘நீங்கள் உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமலிருந்தால், நீங்கள் எதைக் கூறினாலும் நீங்கள் சொன்னபடியே ஆகும்.’ ‘ஆதலால், நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, நீங்கள் ஜெபிக்கும் போது, எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், உங்களால் அதை விசுவாசிக்கக் கூடுமானால், அப்பொழுது அவைகள் உங்களுக்குக் கொடுக்கப்படும்’ என்று அவர் கூறியுள்ளார். நல்லது, அப்படியானால் ஒரு விசுவாசத்திற்கு அடிப்படையாக நான் அதை மீண்டும் பார்க்கிறேன். எனவே இப்பொழுது, நீங்கள் இந்த சாட்சியிலுள்ள இந்த வார்த்தைகள் எதையும் இழந்து விட நான் விரும்பவில்லை. இந்த சாட்சியோடு வேதவாக்கியத்தையும் நீங்கள் பற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். யாராவது ஒருவருடைய சாட்சி அல்லது அவர்களுடைய பிரசங்கத்தை எப்போதுமே வார்த்தையின் மூலமாக பரிசோதித்துப் பாருங்கள். அது தேவனுடைய வார்த்தையிலிருந்து வந்தாக வேண்டும். 29. அதன்பிறகு ஒரு நாள், சமீபத்தில் என்னுடைய கூட்டங்களில் ஒன்றில், யேகோவா சாட்சியைச் சேர்ந்த ஒரு சகோதரன் இருந்தார், அவர் கூட்டத்தில் ஒரு நாஸ்திகராக இருந்தார். அவர் அதைக் குறித்து கேள்விப்பட்ட போது, அவர் லூயிவில்லுக்கு வந்தார்; போலியோவின் காரணமாக கால்கள் வளைந்திருந்த ஒரு பையன் அவருக்கிருந்தான். ஆனால் ஒரு இரவில் ஒரு சக்கர நாற்காலியிலிருந்து சுகமாக்கப்பட்ட ஒரு சிறு பையனை அவர் கண்டார், அந்தப் பையனின் இடுப்பில் இழுத்துக் கட்டப்பட்டு தாங்கப்பட்டிருந்தது, மேலும் அவனுடைய ஒரு கால் மற்ற காலைக் காட்டிலும் குட்டையாக இருந்தது. அந்தச் சிறு பையன் அந்த இடமெங்கும் ஓடி, மேடையின் மேல் துள்ளிக் குதித்தான், மேலும் ஒரு செய்தியைப் பிரசங்கித்தான். அது அவரை நம்பும்படி செய்தது. 30. அவர் ஒரு ஒப்பந்தக்காரராயிருந்தார் (contractor). அவருடைய பெயர் உட், பாங்ஸ் உட் என்பதாகும். அவர் இப்பொழுதும் ஜீவிக்கிறார். அவர்கள் இப்பொழுது எனக்கு அண்டை விட்டுக்காரர்களாயிருக்கிறார்கள். அவர் கென்டக்கியிலுள்ள கிரஸ்ட்உட்டிலிருந்து வந்திருந்தார். மேலே ஓஹியோவில், எனக்கு ஒரு பெரிய கூடாரம் இருந்தது. அவர் தம்முடைய பையனை அழைத்துக் கொண்டு வந்திருந்தார், அவர்கள் அந்தக் கூடாரத்தின் பின்புறத்தில் அமர்ந்திருந்தனர். அந்த இரவில் பரிசுத்த ஆவியானவர் பின்னால் கூட்டத்திற்குள் சென்று, ‘அங்கே பின்னால் உட்கார்ந்திருக்கிற மனிதருடைய பெயர் பாங்ஸ் உட் என்பதாகும். அவர் கென்டக்கியிலுள்ள கிரஸ்ட்உட்டிலிருந்து வந்திருக்கிறார், அவர் ஒரு கான்ட்டிராக்டர் (contractor - ஒப்பந்தக்காரர்), விசுவாசத்தில் அவர் யேகோவா சாட்சிக்காரர். ஆனால் போலியோவினால் பாதிக்கப்பட்ட டேவிட் என்ற பெயருடைய ஒரு பையன் அவரோடு இருக்கிறான். அவனுடைய ஒரு கால் இழுக்கப்பட்டிருக்கிறது. கர்த்தர் உரைக்கிறதாவது, அவன் சுகமானான்’ என்றார். என்ன செய்ய வேண்டும் என்றே அவருக்குத் தெரியவில்லை. சிறிது நேரத்தில், அந்தப் பையனின் தாயார், ‘டேவிட், எழுந்து நில்’ என்றாள். அந்தப் பையன் எழுந்து நின்ற போது, அவன் எவ்வளவு கூடுமோ அவ்வளவு ஆரோக்கியமாகவும் பரிபூரணமாக சுகமடைந்தவனாகவும் இருந்தான். அது அவர் அதை ஏற்றுக் கொள்ளும்படி செய்தது. அவர் தச்சு வேலையையும், ஒப்பந்தக்கார வேலையையும் விட்டு விட்டு, அவரிடமிருந்த எல்லாவற்றையும் விற்று விட்டு, என் வீட்டிற்கு அடுத்து பக்கத்திலேயே ஒரு சிறிய வீட்டை வாங்கி, அது முதற்கொண்டு அங்கே வாழ்ந்து வருகிறார்... திரு. பாங்ஸ் உட். எத்தனை பேருக்கு அவரைத் தெரியும்? ஏன், உங்களுக்கு, ஏன், இங்கே புத்தகங்களை விற்றுக் கொண்டிருக்கும் அவரை உங்களில் அநேகருக்குத் தெரியும். அவர் அநேக தடவைகள் கூட்டங்களில் என்னோடு இருந்து புத்தகங்களை விற்றுக் கொண்டிருக்கிறார். 31. அவருடைய முழு குடும்பமும் யேகோவா சாட்சியைச் சேர்ந்தவர்கள் தான், அவர்கள் மிகவும் அருமையான ஜனங்கள், ஜனங்களிலே மிகவும் அருமையானவர்கள். அவர்கள் நேர்மையான ஜனங்கள், அவர்களுடைய பெயர்கள் கென்டக்கி மாகாணத்தில் நிந்தைக்கு அப்பாற்பட்டிருக்கிறது, அவர்கள் அருமையான ஜனங்கள். அதன்பிறகு, லைல் என்ற பெயரையுடைய அவருடைய சகோதரர்களில் ஒருவர் அவரை சந்திக்கும்படி வந்திருந்தார். ஏனென்றால் தெய்வீக சுகமளித்தலின் பேரில் தேவனிடத்தில் அவருக்கிருந்த அவருடைய - அவருடைய விசுவாசத்தின் நிமித்தமாக அவர்கள் அவரை தள்ளி வைத்திருந்தனர், ஏனென்றால் அது பிசாசினுடையது என்று அவர்கள் கூறினர்... ஆனால் அந்தப் பையன் சுகமடைந்திருந்தான். இப்பொழுது அந்தப் பையன் ஒரு வாலிபனாயிருக்கிறான், அவன் விவாகம் செய்து கொண்டான், மேலும் அவன்... அவன் - அவனுடைய எந்த கால் முடமாயிருந்தது என்று அறியும்படியாக அவன் கூர்ந்து கவனித்துப் பார்க்க வேண்டியிருந்தது. அவன் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்கிறான், ஒரு வகையில் பொருட்களை வாங்குபவனாயிருக்கிறான், அல்லது சூப்பர் மார்க்கெட்டுகளுக்காக ஏதோவொன்றை செய்கிறான், அல்லது வெறுமனே அதில் வேலைபார்க்கிறான். 32. இப்பொழுது, இந்த திரு. லைல் திரு. உட்டின் வீட்டிற்குக் வந்து, அவர், ‘பாங்ஸ், ஒரு சகோதரனாக நாங்கள் எல்லாரும் உன்னை நேசிக்கிறோம் என்பது உனக்குத் தெரியும்’ என்றார். ஆனால், ‘எப்படி நீ வந்து, அதைப்போன்று விலகிச் சென்று அடி ஆழத்துக்குள் போய் விட்டாய்? நீ வந்து, ஏதோவொரு மதவைராக்கியமுள்ள பிரசங்கிக்கு செவிகொடுத்து, உன்னுடைய அப்பா உனக்குப் போதித்த விசுவாசத்தை எப்படி விட்டு விட்டாய்?’ என்று கேட்டார். 33. அவர், ‘என் தகப்பனார் எனக்குப் போதித்த விசுவாசத்தை நான் விட்டு விடவில்லை; நான் இன்னும் சற்று கூடுதலாக விசுவாசமுள்ளவனாயிருக்கிறேன். இப்பொழுது எனக்குத் தெரிந்ததைக் காட்டிலும் கூடுதலாக நான் விசுவாசிக்கிறேன்’ என்றார். ‘நல்லது,’ அவர், ‘எம்மாதிரியான போலி மருத்துவரோடு நீ கலந்துள்ளாய்?’ என்று கேட்டார். இவர், ‘அவர் அங்கேயிருக்கிறார், அங்கே வெளியே நிலத்தில் புற்களை வெட்டிக் கொண்டிருக்கிறார். நல்லது, நீ அவரிடம் பேச விரும்புகிறாயா?’ என்றார். அவர், ‘ஆம், நான் ஒரு நிமிடம் அவரிடம் பேச விரும்புகிறேன். அவர் எதிலிருந்து உண்டாக்கப்பட்டிருக்கிறார் என்று நான் சற்று அறிய விரும்புகிறேன்’ என்றார். 34. ஆகையால் அங்கே வெளியிலிருந்த என்னை திரு. உட் அழைத்தார். நான் அழுக்காயிருந்தேன். நீங்கள் எப்படியிருப்பீர்கள் என்று உங்களுக்குத் தெரியும், அங்கு வெப்பமாகவும், வியர்த்து வடிந்து கொண்டும், மேலாடையானது வியர்வையால் சற்றே வெண்மை நிறமாயிருந்தது, மேலும் ஒரு நாளுக்கு முன்பிருந்தே அவர்கள் அங்கு இருந்தனர். அவர் உள்ளே வந்து, ‘இந்த காட்டில் வேட்டையாடி பாங்க்ûஸப் பிடித்த அந்த பிரசங்கி நீர்தானா?’ என்றார். 35. நான், ‘இல்லை ஐயா, நானில்லை. நான் கிறிஸ்துவில் அவருடைய சகோதரன், நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பவன்’ என்றேன். அவர் ஒரு சில தடவைகள் என்னை முழுவதுமாக ஏற இறங்க உற்றுப் பார்த்தார்; நாங்கள் பேசும்படி உட்கார்ந்தோம். அவர் ஒரு நேர்மையற்ற நபராயிருக்கவில்லை, அவர் அருமையானவர். ஆனால் அவர், ‘திரு. பிரன்ஹாம் அவர்களே, நாங்கள் யோகோவா சாட்சியில் விசுவாசமுள்ளவர்களாக வளர்க்கப்பட்டோம்; எங்களுடைய தகப்பனார் யேகோவா சாட்சியில் ஒரு வாசிப்பாளர்’ என்றார். 36. நான், ‘அது அருமையானது; நான் அதைக் கேட்கையில் நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறேன், அது... உமக்கு நல்ல பெயருள்ளது, உங்களைப் போன்ற நேர்மையான கௌரவமுடைய ஜனங்களாகிய உங்களை வளர்த்த தகப்பனாரையும் தாயாரையும் நான் நிச்சயமாகவே பாராட்டுகிறேன்’ என்றேன். 37. இப்படியாக நான் அங்கே இருந்தபோது, பரிசுத்த ஆவியானவரின் நன்மையான இரக்கத்தினால், ஒரு தரிசனம் வந்தது. நான், ‘திரு. உட் அவர்களே, நீர் ஒரு விவாகமான மனிதர் என்று நான் காண்கிறேன். உமக்கு ஒரு மனைவி இருக்கிறாள்; அவள் இளம் பொன்னிற தலைமயிருடைய ஒரு பெண்மணி; ஏறக்குறைய ஆறு அல்லது எட்டு வயதுடைய இரண்டு சிறு பையன்கள் உமக்கு உண்டு’ என்றேன். அவர் பாங்ûஸ மிக விநோதமாக நோக்கி சுற்று முற்றும் பார்த்தார், அவரை மீண்டும் நோக்கிப் பார்த்தார். நான், ‘பாங்ஸ் அதை என்னிடம் கூறியிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர் என்னிடம் கூறவில்லை. அநேகமாக ஒருவேளை இதைக் குறித்து உமக்குத் தெரிந்திருக்கும். நீர் உம்முடைய மனைவியை விட்டுப் பிரிந்து விட்டிருக்கிறீர் அல்லது நீர் அவளுக்கு உண்மையில்லாமல் இருக்கிறீர். கடந்த இரவில் செம்பொன்னிற மயிருடைய ஒரு ஸ்திரீயுடன் நீர் இருந்தீர். அவள் உம்மைக் காட்டிலும் மிகவும் வாலிபமான ஒரு பெண். நீங்கள் ஒரு இடத்தில் இருந்தீர்கள், அங்கே அவளும் நீரும் ஒரு அறையில் ஒன்றாக இருந்தீர்கள், அப்போது ஒரு மனிதன் அக்கதவைத் தட்டிக் கொண்டிருந்தான். நீர் ஜன்னல் பக்கமாக நழுவிச் சென்றீர், நீர் கதவண்டை போகாதது ஒரு நல்ல காரியமாகும், உம்முடைய தலையில் துப்பாக்கி வெடித்தது, ஏனெனில் அவன் தன்னுடைய கரத்தில் ஒரு கைத்துப்பாக்கியை வைத்திருந்தான்’ என்றேன். அவர் தரையில் விழுந்தார். பாங்ஸ் அதை என்னிடம் கூறவில்லை என்பதை அவர் அறிந்து கொண்டார். 38. அவர், ‘திரு. பிரன்ஹாம் அவர்களே, நான் இதைக் குறித்து அதிகமாக அறிய விரும்புகிறேன்’ என்றார். சரியாக அங்கே அந்த அறையிலேயே கர்த்தராகிய இயேசு அவரை இரட்சித்தார். அவர் தம்முடைய தகப்பனாரிடம் கூறும்படியாக அங்கிருந்து சென்றார். அவருடைய தகப்பனார், ‘இப்பொழுது, நீங்கள் முழுவதுமாக குழப்பமடைந்துள்ளீர்கள்’ என்றார். 39. எனவே அவருடைய சகோதரி இங்கே வந்தாள். அவள் முதலாவது கூட்டத்திலேயே பங்கு கொண்டு மனமாற்றமடைந்தாள், நான் அவளுக்கு கிறிஸ்தவ விசுவாசத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன். பிறகு அது தகப்பனாரை அங்கிருந்து வேகமாக கிளம்பி வரும்படி செய்தது, அவரும் இங்கே வந்தார். எனவே பாங்ஸ் போய் விட்டார், மனைவியும் நானும் அப்பொழுது தான் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தோம், அப்போது ஒரு கார் சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது, ஒரு வயதான மனிதர் முற்றத்தில் நின்று கொண்டிருந்தார். எனவே நாங்கள் அவரிடம் பேசினோம், அவர், ‘நான் திரு. உட்’ என்றார். நான், ‘சரி ஐயா. என்னுடைய பெயர் பிரன்ஹாம். நான் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றேன். அவர், ‘நல்லது, திரு. பிரன்ஹாம் அவர்களே, நானும் உம்மை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பாங்ஸ் எங்கேயிருக்கிறார் என்று உமக்குத் தெரியுமா?’ என்றார். 40. நான், ‘அவர் அநேகமாக மளிகைக் கடைக்குப் போயிருப்பார். வழக்கமாக நாங்கள் அங்கு போகும் நேரம் இதுதான், அவரும் அவருடைய மனைவியும் போயிருக்கிறார்கள். நீர் உள்ளே வரமாட்டீரா?’ என்றேன். எனவே, அவர், ‘இல்லை, நான் இங்கே வெளியே இருப்பதே நல்லது’ என்றார். நான், ‘நல்லது, உள்ளே வாருங்கள், ஒரு குவளைத் தண்ணீர் தருகிறேன், புத்துணர்ச்சியாய் உங்களை வைத்துக் கொள்ளுங்கள். பாங்ஸ் ஒரு சில நிமிடங்களில் வந்து விடுவார்’ என்றேன். சிறிது நேரத்தில் அவர் உள்ளே வந்து, ‘நான் உம்மோடு மீன்பிடிக்கும்படி போக விரும்புகிறேன். மீன் பிடிக்கப் போவதற்கு உமக்கு நேரமுண்டா?’ என்றார். நான், ‘ஓ, நிச்சயமாக’ என்றேன். நான் அவரோடு மீன்பிடிக்க விரும்பினேன். எனவே அவர் கூறினார்... 41. நல்லது அடுத்ததாக - அந்த இரவில் எல்லாவற்றையும் போல மழை பெய்தது. பிறகு அடுத்த நாள் நாங்கள் சென்றோம்... ‘நல்லது, ஏதாவது நெருக்கடியான சூழ்நிலை வரும் என்று நான் நினைக்கவில்லை; நீரோடைகள் முழுவதும் சேறும் சகதியுமாக இருக்குமே’ என்றேன். 42. மேலும் நான், ‘நல்லது, நாம் போக முயற்சிக்கலாம்’ என்றேன். நாங்கள் ஆற்றைக் கடந்து சென்றோம். கர்த்தர் எனக்கு ஒத்தாசை செய்யும்படி அவரிடம் நான் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தேன். நான் மார்க்கத்தைக் குறித்து ஒரு காரியத்தையும் கூறப் போவதாய் இருக்கவில்லை. அவரே அதை முடிவு செய்யட்டும். எனவே அவர் பசியாயிருப்பாரென்றால், அவர் அதைக் கூறுவார். எனவே பிறகு, நாங்கள் ஆற்றைக் கடந்த போது, நான் ஒரு தரிசனம் கண்டேன். நான், ‘திரு. உட்ஸ் அவர்களே, நீங்கள் நிச்சயமாக அதை அறிந்திருக்க வேண்டும், இன்று நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு நீரோடையும் சேறு நிறைந்ததாகவே காணப்படும்’ என்றேன். மேலும் நான், ‘அதன்பிறகு நாம் போய்க் கொண்டிருக்கும் அந்த ஏரியை அடையும்போது, அது அருமையாகவும் நீல நிறமாகவும் காணப்படும். நமக்கு ஒரு மீனும் கிடைக்காமலே இன்று பிற்பகல் ஏறக்குறைய 3:30 மணி வரையிலும் நாம் மீன்பிடித்துக் கொண்டிருப்போம். அதன்பிறகு நான் மீன்பிடிக்கத் தொடங்கப் போகிறேன். நான் ஏறக்குறைய 50 பவுண்டுகள் எடையுள்ள மீனைப் பிடிப்பேன். நீரும் ஒரு மீனைப் பிடிக்கப் போகிறீர். உம்முடைய பையன் லைலும் ஒரு மீனைப் பிடிப்பான். நாம் நடு இரவில் மீன்பிடிப்பதை நிறுத்துவோம். அடுத்த நாள் காலையில் நாம் மீண்டும் மீன்பிடிக்கத் திரும்பிச் செல்வோம். எனக்கு அளவில் பெரிதான மீன் ஒன்று கிடைக்கும். நான் பிடிக்கும் அந்த மீனானது நீலநிறத்தில் பெரிய தலை கொண்ட மீனாக (blue cat) இருக்கும். அடுத்த மீனும் அளவில் பெரிய மீனாகவே இருக்கும். அதன்பிறகு அந்த நாளின் மீதமுள்ள நேரத்திலும் நாம் மீன்பிடிப்போம், (ஆனால்) ஒரு மீனும் தூண்டில் முள்ளைக் கூட கடிக்காது. அது கர்த்தர் உரைக்கிறதாவது’ என்றேன். அவர் பாங்ûஸ உற்றுப் பார்த்தார், ஒருவிதமாக கொஞ்சம் அசட்டுத்தனமாக சிரித்தவாறே சுற்றும் முற்றும் நோக்கினார். 43. சரியாக அதேவிதமாகத்தான சம்பவித்தது. அவர் அந்த இரவில் அங்கிருந்து போன போது... இரண்டாவது இரவுக்குப் பிறகு, நாங்கள் நாள்முழுவதும் மீன்பிடித்தோம், அம்மனிதர் ஒரு மீனாவது தூண்டில் முள்ளைக் கடிக்கச் செய்ய முயற்சித்து தம்மால் கூடிய மட்டும் ஒவ்வொரு ஆற்றங்கரையிலும் ஏறிச் சென்றார், ஆனாலும் அவரால் தூண்டில் முள்ளை வேறொரு மீன் கடிக்கும்படி செய்வதற்கு கூட முடியவில்லை. நான் ஏறக்குறைய 25 பவுண்டுகள் எடையுள்ள மீனைப் பிடித்திருந்தேன். அவைகளில் இரண்டு பிடிக்கப்பட்டது, வலை போடாமலேயே நான்கு சிறிய தூண்டில் முட்களைக் கொண்டு, ஒவ்வொன்றும் எட்டு பவுண்டுகள் எடையுள்ள ஐந்து (மீன்கள்) கிடைத்தன. மீன்பிடிப்பதைக் குறித்து யாராவது அறிந்திருந்தால், அது தேவனாக இருக்க வேண்டும். அவர் அங்கே உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவர் ஒருவிதமான கனத்த குரலில் பேசுகிறவர். அடுத்த நாள் அவருடைய மகன் அவரிடம், ‘நல்லது அப்பா, நீங்கள் அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டார். ‘நல்லது, யாராவது தாம் மீன்களைப் பிடிக்கும் முன்பே அவரால் அந்த மீனை காண முடிகிறது என்றால், அது சரியாகவே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்’ என்றார். 44. எனவே நான், ‘ஆனால், திரு. உட் அவர்களே, என்னால் எப்போதுமே அதைச் செய்ய முடியாது. அது உம் நிமித்தமாக அவ்வாறு நடந்தது. இப்பொழுது, எந்த அவமரியாதையும் நான் செய்யவில்லை, வேதம், ‘உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாகவோ அல்லது ஆவிக்குரியவனாகவோ இருந்து, அவன் தீர்க்கதரிசனம் உரைத்து அப்படியே சம்பவித்தால், அப்பொழுது அதற்குச் செவிகொடுங்கள்’ என்று கூறுகிறது’ என்றேன். நான் மேலும் தொடர்ந்து, ‘நான் திரு. ரூதர்ஃபோர்டு அவர்களை அவமதிக்கவில்லை, ஆனால் அவர் கிறிஸ்து 1914 ம் வருடம் வருவார் என்று கூறினார். கிறிஸ்து அவ்விதமாக பெந்தெகோஸ்தே நாளில் வருவார் என்று ஆவிக்குரியவர்களை மாற்றி விட்டார். இப்பொழுது, அவர் மற்ற நான்கு காரியங்களைத் தவற விட்டிருப்பாரென்றால், இதைக் குறித்து என்ன?’ என்றேன். பாருங்கள்? நான் அவருக்கு ஏறக்குறைய மூன்று ஞாயிற்றுக் கிழமைகளுக்கு முன்பு ஞானஸ்நானம் கொடுத்தேன், அவரும் அவருடைய மனைவியும் கிறிஸ்தவ விசுவாசத்திற்குள் வந்தனர். 45. அவருடைய மகனும் நானும் திரும்பி வந்தோம் - இப்பொழுது அந்த இரண்டு மகன்களுமே இந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு வருகிறார்கள். நாங்கள் அதன்பிறகு ஏறக்குறைய ஒரு சில வாரங்களாக மீண்டும் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் மீண்டுமாக டேல் ஹாலோ என்ற இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம், அந்த இரவில் தூண்டிலை விட்டு ஓடிப் போனவைகளைத் தவிர, ஒரு அருமையான கயிறு நிறைய மீன்கள் பிடித்தோம். மேலும் நாங்கள் நின்று கொண்டு, ஒரு வகையான சிறு மீனைப் பிடிக்கும்படி, தூண்டில் முள்ளில் இரையை வைத்து, தூண்டில் கயிற்றை எறிந்தோம். திரு. பாங்ஸ் உட் அவர்கள் திரு. லைல் உட்டிடம், (அவர்கள் இருவரும் சகோதரர்களாக இருந்தனர்), ‘நாம் இங்கேயுள்ள ஒரு வயதான பெண்மணியிடம் போயாக வேண்டும்’ என்றார். அவளுக்கு ஏறக்குறைய 90 வயதாகிறது. மேலும் அவர், ‘நாம் யேகோவா சாட்சியைச் சேர்ந்த சிறு பையன்களாக இருந்த சமயத்தில், நாம் வழக்கமாக அங்கே சுற்றுப் புறங்களில் போவேமே, அவள் நமக்கு ரொட்டியும் வெண்ணையும் தருவாளே. வீட்டில் செய்யப்பட்ட அந்த பழமையான ரொட்டியை உனக்கு ஞாபகமுள்ளதா? நாம் இரட்சிக்கப்பட்டு விட்டோம் என்று நாம் சென்று அவளிடம் கூறியாக வேண்டும்’ என்றார். அதுதான் சரியான காரியம். 46. இப்பொழுது, இந்த... தயவுசெய்து இதற்கு செவி கொடுக்க முயற்சியுங்கள். சில சமயங்களில் அந்தவிதமாகத்தான் முழு அமைப்பையும் மாற்றுகிற காரியங்களை நீங்கள் கூறுகிறீர்கள். அவர்கள் அப்படியே சரியான காரியத்தைக் கூறினர். சற்று கழிந்து, பரிசுத்த ஆவியானவர் வானங்களில் ஏதோவொரு இடத்திலிருந்து என்மேல் இறங்கினார், நான், ‘கர்த்தர் உரைக்கிறதாவது’ என்றேன். நண்பர்களே, நான் ஒரு சிறு பையனாக இருந்தது முதற்கொண்டு வசித்து வந்த பட்டணத்திலிருந்து இங்கே என்னோடு வந்திருக்கிற ஜனங்கள் எனக்குண்டு. கூறப்பட்டபடியே மிகச்சரியாக சம்பவித்திராத எந்த தீர்க்கதரிசனமாவது எந்த இடத்திலாவது, எந்த நேரத்திலாவது கூறப்பட்டதா அல்லது அப்படி சம்பவித்திராத எந்த தரிசனத்தையாவது அவர்கள் யாராவது எப்பொழுதாவது கேள்விப்பட்டுள்ளார்களா என்று நான் கேட்கிறேன், பாருங்கள்? எல்லாவிடங்களிலும் அறியப்பட்டுள்ளன... அது உண்மை என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அது சத்தியம் என்று அறிந்திருப்பவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா, நிச்சயமாக. அது - அது மிகவும் சரியே, ஏனெனில் அது தேவனாயிருக்கிறது. அது நானாக இருந்தால், அது ஒவ்வொரு தடவையும் தவறிப்போய் விடும். ஆனால் அது அவராயிருந்தால், அது ஒருபோதும் தவறிப்போக முடியாது. அது தவறிப்போக முடியாது. நல்லது, அவர்கள், ‘என்ன சம்பவிக்கும் என்று நீர் நினைக்கிறீர்?’ என்று கேட்டார்கள். 47. நான், ‘ஒரு சிறு ஜீவன், ஏதோவொரு வகையான சிறு பிராணி உயிர்த்தெழப்போகிறது’ என்று கூறினேன். மேலும் நான் தொடர்ந்து, ‘அது என்ன பிராணி என்று நான் பார்க்கவில்லை, ஆனால் திடீரென்று உயிர்பெற்று துள்ளிக்குதிக்கப் போகிற ஏதோவொன்றாக அது இருந்தது’ என்றேன். 48. மேலும் நாங்கள் இந்த வேதவாக்கியத்தைக் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அதன்பிறகு நான், ‘நல்லது, அது என்னுடைய சிறு பையன் கொன்று போட்டிருந்த ஒரு சிறு பூனையாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்’ என்று நினைத்தேன். எங்கள் வீட்டில் இருந்த பூனைகளைக் குறித்து ஒருவிதமாக கொஞ்சம் பயத்தோடு இருந்தோம். ஒரு பிற்பகல் வேளையில் என்னுடைய சிறிய மகளும், சிறு ரெபேக்காவும் பக்கத்திலிருக்கும் வேறொரு சிறுமியுடன் வந்திருந்தனர், அவர்களிடம் ஒரு - ஒரு தாய் பூனை இருந்தது, அவர்கள் அப்பூனையை வைத்திருக்க விரும்பினர், நான் - நான் சரியென்று அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதை ஒரு பெட்டியில் அடைத்து வைத்தனர். அடுத்த நாள் காலையில், நாங்கள் ஏறக்குறைய எட்டு அல்லது பத்து சிறு பூனைக்குட்டிகளைக் கொண்டிருந்தோம். இப்படியிருக்க என்னுடைய சிறு மகன் ஜோசப் (அப்போது அவனுக்கு ஏறக்குறைய 2 வயதாகியிருந்தது), அவைகளில் ஒன்றைக் காண விரும்பினான். அந்த சிறு பூனைக்குட்டிகளின் கண்கள் திறந்திருக்கவில்லை, அவன் அதை அப்படியே தூக்கி எடுத்துப் பார்த்து விட்டு, அதை நெருக்கி அழுத்தி விட்டு, கீழே எறிந்து விட்டான். எனவே அந்தப் பரிதாபமான சிறு பூனைக்குட்டியானது, நான் - நாம் செல்வது போல் அங்குமிங்குமாக வேகமாக சுற்றியபடி சென்றது. நான், ‘அது... ஒருக்கால் அவர் அந்தத் தாய் ஓப்பஸம் மிருகத்திற்குச் செய்தது போல, நான் வீட்டை சென்றடையும் சமயத்தில், கர்த்தர் அந்த சிறு பூனையை உயிரோடெழுப்பலாம்’ என்று எண்ணினேன். நீங்கள் அந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், ஏனென்றால் அது உலகமுழுவதும் சென்று விட்டது. எனவே அதன்பிறகு நான், ‘ஒருக்கால் அந்த சிறு பூனைக்குட்டி உயிரடையலாம்’ என்றேன். நான் அப்படியாக என் இருதயத்தில் எண்ணினேன், ஆனால் அதைக்குறித்து எதையும் பேசவில்லை. 49. நாங்கள் அந்த இரவில் மீன்பிடித்தோம், அடுத்த நாள் காலையில் நாங்கள் - அந்த இரவில் நாங்கள் எங்களுடைய வழியில் எந்த மீனையும் பிடிக்கவில்லை, ஏனென்றால் நாங்கள் புளு கில் (blue gill) எனப்படும் ஒருவகை மீனைப் பிடிப்பதற்காக தூண்டிலை மாற்றியிருந்தோம், அந்த வகை மீன்களோ - அவைகள் தூண்டிலைக் கடிக்கவேயில்லை. ஏறக்குறைய பகல் வெளிச்சம் வரும் நேரத்தில், வரிசையாகப் போடப்பட்டிருந்த எங்களுடைய தூண்டில்களைக் கொண்டிருந்தோம். நாங்கள் ஒரு சிறு வளைகுடாவிற்குள் மீன்பிடித்தோம், பெரிய கரையோரம் வரை fly line எனப்படும் மீன்பிடிக்கும் முறைப்படி மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். (அது சற்று பெரிய புளு கில் எனப்படும் மீன்வகையாகும்.) எனவே நாங்கள் அந்தக் கரையோரம் வரைக்குமாக fly line எனப்படும் மீன்பிடிக்கும் முறைப்படி மீன்பிடித்துக் கொண்டிருந்தோம், மேலும் திரு. லைல் உட் அவர்களிடம் தூண்டில் கயிற்றை சுற்றி வைக்கும் ஒரு உருளையும் (ழ்ங்ங்ப்), ஒரு கம்பும் இருந்தது. அவர் ஒரு பெரிய நீளமான தூண்டில் முள்ளோடு அப்படியே அதை தண்ணீரில் போட்டார், அப்போது ஒரு பரிதாபமான சிறு புளு கில் மீன் அதை சரியாக அதனுடைய சிறிய குடலின் அடியில் விழுங்கி விட்டிருந்தது. அவர் அதை மேலே இழுத்து, ‘நீர் அங்கே அதைக் காண வேண்டும் என்று விரும்புகிறேன்; உம்மால் அந்தத் தூண்டில் முள்ளைக் கூட காண முடியவில்லையே’ என்றார். அவர் அந்தத் தூண்டில் முள்ளை அதை விட்டு வெளியே எடுக்கும்படியாக, இவ்விதமாக அந்த மீனைப் பிடித்து, குடல்களையும், செவுள்களையும், மற்றும் எல்லாவற்றையும் அதை விட்டு வெளியே எடுத்து விட்டு, அதை இவ்விதமாக தண்ணீரில் போட்டு விட்டார். அந்தச் சிறு மீனானது நான்கு அல்லது ஐந்து தடவைகள் துடிதுடித்தது, தன்னுடைய சிறு துடுப்புகளை விரித்து விட்டு, மரித்துப் போய், அங்கே அந்தத் தண்ணீரின் மேல் கிடந்தது. எனவே அவர், ‘சிறு மீனே, நீயே உன்னுடைய கடைசியான எல்லாவற்றையும் போக்கி விட்டாயே’ என்றார். 50. நாங்கள் தொடர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தோம்; நான், ‘லைல் அவர்களே, நீர் அவ்விதம் செய்யக் கூடாது - நீர் தூண்டில் முள்ளை அவ்விதமாக வெளியே எடுக்கக் கூடாது’ என்றேன். நான் அவரிடம் கூற முயற்சித்துக் கொண்டிருந்தேன்; நான், ‘மிகச் சிறிய தூண்டில் முள்ளை போடுங்கள்’ என்றேன். அவர் வெறுமனே ஒரு விவசாயம் செய்கிறவராயிருந்தார், உங்களுக்குத் தெரியும், அவர் ஒருபோதும் அதிகமாக மீன்கள் பிடித்திருக்கவில்லை. எனவே, அச்சிறு மீனானது ஏறக்குறைய அரை மணிநேரமாக அங்கேயே கிடந்தது, காற்று வந்து அதை பின்னால் அலையில் அடித்துச் சென்றது, அது சில லீலி செடிகளினூடாக கரைப் பகுதி நெடுகிலும் அடித்து செல்லப்பட்டது. மேலும் நாங்களோ மீன்பிடித்துக் கொண்டிருந்தோம், நான் மீன் பிடித்துக் கொண்டிருந்தேன்; நாங்கள் சில அருமையான மீன்கள் சிலவற்றைப் பிடித்துக் கொண்டிருந்தோம். 51. திடீரென்று ஏதோவொன்று சம்பவித்தது. இப்பொழுது, இந்த வேதாகமம் திறந்திருக்கிற நிலையில் இந்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கிறேன். ஒரு அபிஷேகம் இறங்குவது போன்று ஏதோவொன்று சம்பவித்தது, நான் அதைப் போன்று ஒருபோதும் உணர்ந்தது கிடையாது. மேலும் நான் - ஏதோவொன்று, ‘எழுந்து நில்’ என்றது. நான் எழுந்து நின்றேன். லைலும் பாங்ஸ்-ம் தங்களுடைய தூண்டில்களை விட்டு விட்டு என்னை நோக்கிப் பார்த்தனர். லைல், ‘அவருக்கு என்ன ஆனது?’ என்றார். பாங்ஸ், ‘கவனி; ஏதோவொன்று சம்பவிக்கப் போகிறது’ என்றார். 52. ஏதோவொன்று என்னிடம், ‘அந்த சிறு மீனைப் பார்த்து பேசு, அது மீண்டும் உயிரடையும்’ என்றது. செவுள்கள் வெண்மை நிறமாகி, அதனுடைய வாய்க்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. நான், ‘சிறு மீனே, இயேசு கிறிஸ்து உனக்கு ஜீவனைக் கொடுக்கிறார்’ என்றேன். பரலோகத்திலிருக்கிற தேவன் என்னுடைய பயபக்தியான நியாயாதிபதியாக இருக்கிறார், அந்த மீன் அப்படியே திரும்பி, அதனால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு வேகமாக தண்ணீரினூடாக நீந்திச் சென்று விட்டது. திரு. லைல் உட் சரியாக அந்த படகினுள்ளேயே விழுந்தார். அவர், ‘அது எனக்காக இருந்தது, ஏனென்றால் நான் அந்தச் சிறிய மீனிடம், ‘நீயே உன்னுடைய எல்லாவற்றையும் போக்கி விட்டாயே’ என்று கூறினேனே’ என்றார். 53. மேலும் நான், ‘இல்லை, அது அதுவல்ல’ என்றேன். மேலும் நான் தொடர்ந்து, ‘இப்பொழுது, இது எனக்கு வினோதமான காரியமாக உள்ளது: எவ்வாறு தேவன், மகத்தான யேகோவா தேவன் ஒரு சிறிய மீனை உயிரடையச் செய்ய தம்முடைய வல்லமையை பயன்படுத்தினார் (நாமோ ஒரு இரவுக்கு முன்பு அவைகளில் 200 அல்லது 300 மீன்களை பிய்த்து எறிந்து விட்டோம்), ஆனால் அந்த மீனை உயிரடையச் செய்ய தம்முடைய வல்லமையை பயன்படுத்தினார், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட குறைந்தது 300 பிள்ளைகளுக்காக ஜெபிக்கும்படியாகவும், அவர்களுக்காக ஒரு தரிசனத்தைக் காணும்படியாகவும் அவர்களுடைய பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 300 பேருடைய பெயர்கள் என்னிடம் உள்ளன. ஒரு காரியம் என்னவெனில், தேவன் அதைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியத்தை அந்த சிறு மீனில் எவ்வாறு செய்தார் என்பதை என்னால் - என்னால் - என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, மனிதர்கள் உலகத்தைச் சுற்றிலும் எல்லாவிடங்களிலும் புற்று நோயினாலும், லூக்கிமியா நோயினாலும், மற்றும் எல்லாவிதமான வியாதிகளினாலும் கிடந்து மரித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க அவர் அந்தச் சிறிய மீனை உயிரடையச் செய்தார்’ என்றேன். சற்றேறக்குறைய அச்சமயத்தில், ஏதோவொன்று, ‘மாற்கு 11:23’ என்றது. அதே வேதவாக்கியம். தொழுநோயாளிகள் தேசம் முழுவதும் படுத்த படுக்கையாயும், வியாதிகள் எல்லாவிடங்களிலும் இருக்க, தேவன் ஒரு மரத்தைச் சபிக்கும்படியாக தமது வல்லமையை பயன்படுத்தினார்... தேவன் மரத்தைக் குறித்தும், மீனைக் குறித்தும் சிரத்தையுள்ளவராயிருக்கிறார்; யாவுமே தேவனுக்கு சொந்தமானது. அவர் மரங்கள் மேலாக தேவனாயிருக்கிறார் என்றும், அவர் மீன்கள் மேலாக தேவனாயிருக்கிறார் என்றும் காண்பிக்கும்படியாக தமது வல்லமையைக் காண்பித்துக் கொண்டிருந்தார். அந்தச் சிறு மீன் ஜீவனைப் பெற்றது. என்னால் அதைப் பிடிக்க முடியவில்லை; வேதவாக்கியமோ இன்னும் என்னோடு உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கிறது. அது எவ்வாறு அவ்விதம் இருக்க முடிந்தது? 54. கனடாவைச் சேர்ந்த என்னுடைய அன்பிற்குரிய நண்பரான ஃபிரட் சாத்மன் அவர்கள் (அவர் இங்கே இக்கூட்டத்தில் எங்கோ இருக்கிறார்), கடந்த வருடம் நியூ இங்கிலாந்தில் நடந்த ஒரு கூட்டத்தில் என்னோடு இருந்தார். மேலும் நாங்கள் மேலே அடிரான்டாக்கிற்குப் போனோம், அங்கே அச்சமயத்தில் நான் காணாமற்போனேன், என்னுடைய ஜீவியத்திலேயே காடுகளில் நான் காணாமற்போன ஒரு நேரம் அது மாத்திரமே. நான் அவ்விடத்தை சகோதரன் ஃபிரட் அவர்களுக்குக் காண்பிக்க விரும்பினேன், அந்த இரவில் பனிப்புயலில் நான் காணாமற்போன போது, அங்கே தான் என்னுடைய மனைவியும் பிள்ளைகளும் - அல்லது பில்லியும் நான் திரும்பி வருவதற்காக எனக்காக காத்துக் கொண்டிருந்தனர். நாங்கள் அங்கே அந்த சாய்வான கூரையை உடைய சிறு ஒதுங்குமிடத்தின் (lean-to) பக்கத்தில் நின்று கொண்டிருந்த போது, நான் கரடி வேட்டையாட சென்றிருந்த சமயத்தில்... மேடாவும் பில்லியும் இந்த சாய்வான கூரையையுடைய தங்குமிடத்தில் தான் படுத்திருந்தனர். 55. நல்லது, நான் ஒரு பக்கமாக நழுவிச் சென்றேன்; கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் வந்தார், நான் நடுங்கத் தொடங்கினேன். அது கூறினது, கர்த்தருடைய ஆவியானவர், ‘உனக்கு ஒரு கண்ணி அங்கே வைக்கப்பட்டுள்ளது, நீ என்ன கூறுகிறாயோ அதில் கவனமாயிரு’ என்றார். ஃபிரட் அவர்களே, நீர் எங்கேயிருக்கிறீர்? இங்கே இன்றிரவு கூட்டத்தில் இருக்கிறீர்களா? அவர் வந்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ஆம், இங்கே பின்னால் இருக்கிறார். அது சரியே. நாங்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றோம், நான் சகோதரன் சாத்மனிடம், ‘ஏதோவொன்று சம்பவிக்கப்போகிறது’ என்றேன். நாங்கள் கூட்டத்திற்குப் போன போது, அந்த இரவில், நான் கூட்டத்தினரைப் பார்த்து, ‘ஞாபகம் கொள்ளுங்கள், கர்த்தர் உரைக்கிறதாவது, எனக்கு ஒரு கண்ணி வைக்கப்பட்டுள்ளது. அது சம்பவிக்கும்போது, சரியான காரியத்தைச் செய்ய எனக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்று நீங்கள் எல்லாரும் ஜெபித்துக் கொள்ளுங்கள்’ என்றேன். 56. அடுத்த இரவில் அது சம்பவித்தது. அந்தக் கூட்டத்தை நாசம் செய்யும்படி, பிசாசு இரண்டு பேரை உள்ளே அனுப்பினான், ஒரு வாலிபனும் வாலிப பெண்ணும். அது -ல் நடந்த சம்பவமாகும். அது நடந்தது நியூ ஹாம்ஷயரில் அல்ல, ஆனால் வெர்மான்ட்டில் நடந்தது. ஃபிரட்டி, அந்தப் பட்டணத்தின் பெயர் உனக்கு ஞாபகம் உள்ளதா? அது வெர்மான்ட்டின் தலைநகரமாகும். நாங்கள் அப்படியே லேக் சாம்பிளைனில் (Lake Champlain) இருந்தோம். எனவே நாங்கள் கூட்டத்தில் இருந்தபோது, இந்த வாலிபன்... இந்த வாலிப பெண் ஒருவகையில் ஒரு மங்கோலிய பெண்ணைப் போன்று காணப்பட்டாள். ஆனால் அந்தப் பையன் அப்படியே (அவளை) அணைத்து பிடித்துக் கொண்டிருந்தான்... அவர்கள் இருவருக்கும் குறைந்தது இருபத்தைந்து வயது இருக்கும். ஆனால் அவர்கள் சபையில் அவ்வளவு ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டனர்... அவர்கள் என்னிடமிருந்து ஏறக்குறைய இவ்வளவு தூரத்தில் இருந்தனர். நான் பிரசங்கிக்கத் தொடங்கினபோது, அவன் அப்படியே அவளைப் பிடித்து, அவளுடைய தலையைத் திருப்பி, அவள் மேல் ஏறி நின்று அவளுக்கு முத்தமிட்டு, காதல் விளையாட்டு விளையாடிக் கொண்டு, அந்தக் கூட்டத்தில் பயங்கரமான விதமாக நடந்து கொண்டிருந்தனர். உதவிக்காரர்கள் அவனை அமைதிப்படுத்த முடியவில்லை. நான் மேடையிலிருந்து அவனைப் பார்த்து, ‘வாலிபனே, அதைச் செய்யாதே; நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும்போது, நீ கவனத்தைத் திருப்பிக் கொண்டிருக்கிறாய்’ என்றேன். அவன் அப்படியே என்னைப் பார்த்து நகைத்தான். நான், ‘ஓ, ஓ, அதோ அது உள்ளது; அங்கே தான் அந்தக் கண்ணி உள்ளது, சரியாக அங்கே தான் உள்ளது’ என்று எண்ணினேன். 57. நான் அப்படியே தொடர்ந்து அதேவிதமாக பேசிக் கொண்டே சென்றேன். ஓ, நான் அதை மீண்டும் நிறுத்த வேண்டும் என்ற அளவுக்கு அவன் அவளோடு மிகவும் ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டிருந்தான். நான், ‘ஐயா, தயவு செய்து அதைச் செய்யாதீர். நீ அந்த வாலிப பெண்ணோடு காதல் செய்ய விரும்பினால், நீ இக்கட்டிடத்தை விட்டு வெளியே சென்று விடு, ஆனால் இதுவோ ஒரு-ஒரு மதசார்பான கூட்டமாய் உள்ளது. நீ அதைச் செய்யக் கூடாது. அதைச் செய்யாதே - தயவு செய்து நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் போது, அதைச் செய்யாதே’ என்றேன். நான் மீண்டும் பிரசங்கிக்கத் தொடங்கினேன், அவனோ இன்னும் மோசமாக அதை அப்படியே செய்து கொண்டிருந்தான். 58. பிறகு நான் திரும்பின போது - நான், ‘அதைச் செய்யாதே...’ என்றேன். ஏதோவொன்று என்னிடம், ‘நீ என்ன விரும்பினாலும் அதைச் சொல், அது அப்படியே நடக்கும்’ என்றது. நான் அங்கே நின்றிருந்தேன். ஒலிப்பதிவு செய்பவராகிய (tape boy) திரு. மெர்சியரும், அவர்கள் எல்லாரும் அங்கே நின்று கொண்டிருந்தனர், சகோதரன் ஃபிரட்டும், அவர்களில் அநேகரும் அங்கே நின்று கொண்டிருந்தனர்; எனக்கு அப்படியே வியர்த்து வடிந்து கொண்டிருந்தது. ஏதோவொன்று, ‘‘குருடாகு’ என்று கூறினால், அது குருடாகும். ‘செத்துப் போ’ என்று கூறினால், அவர்கள் இவர்களை பொதிந்து வெளியே கொண்டு போவார்கள். நீ என்ன விரும்பினாலும் அதைச் சொல்’ என்றது. என்னால் பேச முடியவில்லை. என்னால் அசையவே முடியவில்லை. அது அப்படியே போய் விட்டது. நான், ‘தேவனே, நான் என்ன - என்ன செய்ய வேண்டும்?’ என்று நினைத்துக் கொண்டு திரும்பினேன், அவன் அங்கே நின்று கொண்டிருந்தான், அவனுடைய முகம் வெளிறிப்போய் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். நான், ‘என்ன கூற வேண்டும்?’ என்று நினைத்தேன். அப்போது நான் திரும்பி, இவ்விதம் நோக்கிப் பார்த்து, நான் என்ன கூறுகிறேன் என்பதை அறியும் முன்பே, ‘நீ அவ்விதம் நடந்து கொண்டதற்காக உன்னை மன்னிக்கிறேன்’ என்றேன். 59. கூற வேண்டிய சரியான காரியம் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். அது ஒரு செயலுக்கான பிரதி செயலை (a reaction on an action) செய்யும்படி தேவன் முயற்சிப்பதாகும். நான் சரியான காரியத்தைத் தான் கூறினேன் என்பது அந்த இரவிலே எனக்கு வெளிப்பட்டது. அது அனைத்துமே என்னை ஏதோவொன்றுக்கு வழிநடத்திக் கொண்டிருந்தது என்பதை அறிந்து கொண்டேன், ஆனால் அது என்னவாக இருந்தது? என்ன செய்வது? ஒரு தெய்வீக வரத்தைக் கொண்டு, நீங்கள் அதனோடு என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். மோசே என்ன செய்தான் என்பது ஞாபகம் உள்ளதா? ஆகவே நான் சரியான காரியத்தைச் சொல்லியாக வேண்டும்: ‘நான் உன்னை மன்னிக்கிறேன்.’ ஒருமுறை யோவான், வாலிபனாகிய யோவான், சமாரியர் அவனுக்கு உணவளிக்கவில்லை என்ற காரணத்தினால் சமாரியர்களை எரித்துப் போட விரும்பினான் என்பது உங்களுக்குத் தெரியும். இயேசுவோ, ‘நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள். மனுஷகுமாரன் ஜீவனை இரட்சிப்பதற்கென்றே வந்தார், அழிப்பதற்கல்ல’ என்றார். (லூக்கா 9:55,56). மேலும் நான்... அந்த வேதவாக்கியங்கள் இரவு முழுவதும் அப்படியே தொடர்ந்து மனதில் வந்து கொண்டேயிருந்தன. நான் உறங்கவேயில்லை. ஆனால் என்னை முழுவதுமாக உணர்ச்சிவசப்படச் செய்து, நான் தவறான காரியத்தை சொல்லும்படி செய்ய வேண்டும் என்று சாத்தான் வைத்திருந்த ஒரு கண்ணியாக அது இருந்தது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் அங்கேயிருந்து, நான் கூறுவதில் கவனமாயிருக்க வேண்டும் என்று முன்கூட்டியே என்னிடம் கூறினார். ஓ, தேவன் எவ்வளவு நன்மையுள்ளவராயிருந்தார். அது... அப்படியே அவருடைய இரக்கமாக இருந்தது. ‘நீ என்ன கூறுகிறாயோ அதில் கவனமுள்ளவனாயிரு.’ அது முதற்கொண்டு ஒரு விடுதலை வந்தது. பிறகு ஏறக்குறைய... நான் என்ன கூறுகிறேன் என்பதை அறியாமலேயே சுயநினைவற்றவனாக, நான் வித்தியாசமான காரியங்களைப் பேசுவதைக் கவனிக்கத் தொடங்கினேன், அது அவ்விதமே சம்பவித்தது. நான் அதைக் குறித்துப் பேசத் தொடங்கினேன். 60. ஒரு சில வாரங்களுக்கு முன்பு, கடந்த இலையுதிர் காலத்தில், ஒரு நாள், இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பாக சிறிது ஓய்வு எடுப்பதற்காக நான் அணில் வேட்டையாடிக் கொண்டிருந்தேன். இப்பொழுது, நமது தேசத்தில், அது - ஏறக்குறைய அவர்கள் எல்லாருமே முயல் மற்றும் அணில்களை வேட்டையாடுகிறார்கள். நான் அதைச் செய்து கொண்டிருந்ததற்கான காரணம் என்னவென்றால், இந்தக் கூட்டத்துக்கு வருவதற்கு முன்பாக கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காகத் தான். திரு. சாத்மன் அவர்கள் அக்காலையில் என்னோடு இருந்தார்; அவர் எங்களை சந்திப்பதற்காக கனடாவிலிருந்து வந்து, எங்களோடு கொஞ்ச காலமாக தங்கியிருந்தார். அவர் ஒரு டிரெய்லர் வண்டியை எடுத்து, அவரும் இன்னும் சில நண்பர்களும் எங்களுக்கு அருகிலேயே வாழ்ந்து வருகிறார்கள்... எனவே, நாங்கள் திரு. உட் அவர்களோடு ஒன்றாக அணில் வேட்டையாடிக் கொண்டிருந்தோம். மேலும் அவரும் கூட அங்கே எனது பக்கத்திலேயே வசித்து வருகிறார், அவரும் என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார். அப்போது, நாங்கள் சென்று வேட்டையாடிக் கொண்டிருந்தோம். அது நான் வேட்டையாட வேண்டிய கடைசி நாளாகும், ஏனெனில் அதற்கடுத்த ஞாயிறு, நான் வயோமிங் போவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிறகு செவ்வாய் கிழமையில் அந்த சீசன் (பருவ காலம்) முடிவடைகிறது. அப்போது, அது சனிக்கிழமையாக இருந்தது. நான் இப்பருவ காலத்தில் இந்தியானா மாகாணத்தில் அணில் வேட்டைக்கு போகக் கூடியதாயிருந்த கடைசி வேளை அதுவாயிருந்தது. ஓ, நாங்கள் அதிக அளவு வேட்டையாடினோம், அங்கே அதிகமாக வேட்டையாடிக் கொண்டிருந்தோம். இந்தியானாவில் அணில் வேட்டையாடுவதற்காக அநேக வேட்டைக்காரர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் எல்லாரும் சிதறி ஆங்காங்கே (வேட்டையாடுவதற்காகச்) சென்று விட்டார்கள். 61. அந்தக் காலை வேளையானது பெருங்காற்று வீசுகிற, காற்றோட்டமுள்ள மோசமான ஒரு காலை நேரமாக இருந்தது, அணில்கள் அந்த நாட்களில் வெளியே வராது. நான் காடுகளுக்குள் போனேன், ஏறக்குறைய ஒன்பது மணி ஆகும் வரையில், நான் நடந்து கொண்டேயிருந்தேன், அணில்கள் எதையும் பார்க்க முடியவில்லை. அந்தச் சிறிய ஓடையின் கரையின் மேல் சென்றேன்; அப்போது இந்தியானா மிகவும் குளிராக மாறிக் கொண்டிருந்தது. ஏறக்குறைய அக்டோபர் முதலாம் தேதி என்று நினைக்கிறேன்; சரியாகச் சொன்னால், அது அக்டோபர் 8ம் தேதியாக இருந்தது. நான் சில காட்டத்தி மரங்கள் (sycamore trees) வழியாகச் சென்றேன். அணில்கள் காட்டத்தி மரங்களில் வாழ்வதில்லை; அவைகள் பீச் மரங்களிலும், ஓக் மரங்களிலும், மற்ற மரங்களிலும், அதிக பசுமையாயிருக்கிற இடங்களிலிருக்கும் தடித்த மரங்களிலும் வசிக்கின்றன. நான் ஒரு சிறு ஓடை பக்கமாக நடந்து சென்றேன், ஒரு சிறு முகடின் பக்கத்தில் ஒரு அணிலைக் கண்டதாக நான் எண்ணினேன். அங்கே வெளியில் சோள வயல்கள் இருந்தன, விவசாயிகள் தங்களுடைய சோளக்கதிர்களை சேகரித்துக் கொண்டிருந்தனர். அங்கே வெளியே அவர்களில் அநேகர் சோளக்கதிர்களை சேகரித்துக் கொண்டிருந்தனர். ‘நல்லது,’ நான், ‘இக்காலையில் ஒரு அணிலும் இல்லை’ என்றேன். ஒரு பெரிய வெட்டுக்கிளி புதரைத் தவிர அங்கே எதுவுமில்லை, அங்கே அணில் வசிக்கும்படியாக எதுவுமே இல்லை. அந்த வாதுமைக் கொட்டை மரங்களில் இலைகள் எல்லாம் போயிருந்தன, அவைகள் இலைகளற்று வெறுமையாக தோற்றமளித்தன, அங்கே எந்த அணிலுமே இருக்கவில்லை. நான், ‘நல்லது, நான் சற்று இங்கே கொஞ்சம் உட்கார்ந்து கொண்டு, ஒருவிதமாக வெதுவெதுப்பாக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்’ என்றேன். ஏனெனில் எனக்கு வெறுமனே ஒரு சட்டை தான் இருந்தது, மேல் கோட் இல்லாதிருந்தது. நான் இரண்டு மரங்களுக்கு இடையில் அமர்ந்து கொண்டேன், அங்கே சூரிய வெளிச்சம் என் மேல் பிரகாசித்தது, (எனவே) என் காலை மற்ற மரம் பக்கமாக சற்று நகர்த்தி, முழுவதும் வசதியாக உள்ள நிலையில் உட்கார்ந்து கொண்டேன். நான், ‘ஒருவேளை சிறிது தூங்கலாம்’ என்று எண்ணினேன். என்னிடம் அலாரம் உடைய ஒரு சிறு கைக்கடிகாரம் இருந்தது, நான், ‘நான் தூங்க நேரிட்டால், அலாரம் அடித்து என்னை எழுப்புவதற்காக, இப்பொழுது இக்கைக்கடிகாரத்தில் நேரத்தை செட் செய்து விடுகிறேன், (ஏனென்றால்) நான் குறித்த நேரத்தில் திரு. உட்டையும், திரு. சாத்மனையும் கண்டு பிடித்தாக வேண்டும்’ என்று நினைத்தேன், ஏனென்றால் அவர்கள் வேறொரு காட்டில் மிக தொலைவிலுள்ள பாதையில் இருந்தனர். எனவே நான் என்னுடைய சிறு கடிகாரத்தில் அலாரம் செட் செய்து வைத்தேன் - சரியாகச் சொன்னால் என்னுடைய சிறு கைக்கடிகாரத்தில் அலாரம் செட் செய்து விட்டு, அந்த மரத்தின் பக்கத்தில் உட்கார்ந்தேன். 62. நான் ஒருவிதமாக என்னைத் தானே வெதுவெதுப்பாக்கும்படியாக தீவிரிக்கையில், அந்த வேதவாக்கியம் மீண்டும் என்னிடம் வந்தது, ‘நீங்கள் விசுவாசமுள்ளவர்களாயிருந்து, என்ன கூறினாலும் அது சம்பவிக்கும், நீங்கள் சொன்னபடியே ஆகும்.’ ‘நல்லது,’ நான், ‘நான் அந்த வேதவாக்கியத்தைக் குறித்து எதையும் அறிந்திராத காரணத்தினால், நான் அதன் பேரில் பிரசங்கிக்க கூடாதிருக்கும் போது, ஏன் அந்த வேதவாக்கியம் தொடர்ந்து என்னிடத்தில் வந்து கொண்டிருக்கிறது? நான் ஒரு சபை முன்பாக சென்று அந்த வேதவாக்கியத்தை விளக்கிக் கூறும்படியாக முயற்சிக்கவே முடியவில்லையே’ என்று எண்ணினேன். நல்லது, நான் அங்கே சிறிது உட்கார்ந்தவாறு, ‘அதற்கு ஒரேயொரு காரியம் தான் உண்டு. நான் அந்தப் பாடத்தின் பேரில் எப்பொழுதாவது பிரசங்கிக்க அழைக்கப்பட்டால், நான் அதைச் செய்யும் வழி இதோ இருக்கிறது. நான், ‘இயேசு சீஷர்களிடம் தான் அதைக் கூறினார், அவர்களுக்குத் தான் அந்த அதிகாரத்தைக் கொடுத்தார். பாவ பரிகாரம் செய்யப்பட்டதற்கும் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அது சம்பவித்தது. எனவே அது அந்தப் பரிகாரத்தில் இல்லாமல் இருந்திருக்குமானால், அது அந்தப் பரிகாரத்தின் மறுபக்கத்தில் இருந்தது’ என்று கூறுவேன். எனவே யாராவது எப்பொழுதாவது என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்பார்களானால், அது அந்தப் பரிகாரத்தின் மறுபக்கத்தில் தான் இருந்தது என்று நான் அவர்களிடம் கூறுவேன்; எனக்குத் தெரிந்த ஒரே காரியம் அதுதான். ஏனென்றால் இயேசு அப்பொழுது இன்னும் ஜீவித்துக் கொண்டிருந்தார்; பரிகாரம் செய்யப்பட்டிருக்கவில்லை, அவர் இன்னும் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்படவில்லை, அப்பொழுது நாம் அவருடைய தழும்புகளால் குணமடையவுமில்லை. எனவே அந்தப் பரிகாரத்தின் மறுபுறத்தில் தான் அவர் அந்த வல்லமையை அவர்களுக்குக் கொடுத்தார்’ என்று எண்ணினேன். 63. அப்போது, திடீரென்று ஏதோவொன்று என்னிடம் பேசி, ‘தீர்க்கதரிசிகளைக் குறித்து என்ன?’ என்றது. நல்லது, அப்போது அது எனக்கு வெளிப்படையாகத் தொடங்குவதை நான் காண ஆரம்பித்தேன். ‘நீ அங்கே கூட்டத்தில் நின்று கொண்டிருக்கும் போது, அக்கூட்டத்தில் சம்பவித்ததைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்? நீ அந்த ஜனங்களை அறிந்திருக்கிறவன் என்று நினைக்கிறாயா? நீ குறிப்பிட்ட - குறிப்பிட்ட ஒரு காரியத்தைச் செய்யப் போகிறாய் என்றும், ஒரு குறிப்பிட்ட - குறிப்பிட்ட காரியம் உனக்கு சம்பவித்திருக்கிறது என்றும், ஒரு குறிப்பிட்ட - குறிப்பிட்ட காரியம் உனக்கு சம்பவிக்கும் என்றும் அந்த ஜனங்களிடம் கூறி, அதை முன்னுரைக்கக்கூடியவன் நீ தான் என்று நினைக்கிறாயா? அதைக் கூறிக் கொண்டிருப்பது நீ தான் என்று நினைக்கிறாயா?’ ஓ, என்னே! அது எனக்கு மிகவும் அதிக முக்கியம் வாய்ந்ததாக உள்ளது, அது ஒருபோதும் என்னை விட்டுப் போய் விடவில்லை. மேலும் நான், ‘கர்த்தாவே, அது நிச்சயமாக நானில்லை. அது நீரே’ என்று எண்ணினேன். ‘நல்லது அப்படியானால், பேசிக் கொண்டிருப்பது நீ என்று நினைக்கிறாயா?’ ‘இல்லை.’ 64. ‘அது தீர்க்கதரிசிகள் பேசிக் கொண்டிருந்தது என்று நினைக்கிறாயா? தீர்க்கதரிசிகள் அவ்வாறே பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகிக்கப்பட்டிருந்தார்கள் என்ற பாடத்தின் பேரில் நீ பிரசங்கிக்கவில்லையா, அது அவர்கள் பேசுவதல்ல; அது பரிசுத்த ஆவியானவர் அவர்களிலிருந்து சத்தமிடுவதல்லவா? அப்படியானால் நீ அபிஷேகத்தின் கீழிருந்து நீ எதைக் கூறுகிறாயோ, அது நீ கூறுவதல்ல; அது பரிசுத்த ஆவியானவர் கூறுவதாகும்.’ 65. ‘நல்லது,’ நான், ‘அது... அது உண்மை. அந்த நபர் பரிகாரத்தினூடாக, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுடன் மிகவும் நெருங்கி ஒரு பரிமாணத்திற்குள் ஜீவிக்க முடிகிறது, அவன் இயேசுவின் இரத்தத்தினால் முழுவதுமாக சுற்றப்பட்டிருக்க முடிகிறது, அது அவன் பேசுவதல்ல, இந்தக் காரியங்களைப் பேசிக் கொண்டிருப்பது பரிசுத்த ஆவியானவர் தான்’ என்று நினைத்தேன். 66. என்னுடைய முழு ஜீவியத்திலும் இதற்கு முன்பு ஒருபோதும் நான் கொண்டிராத வகையில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்மேல் இறங்கும் அளவுக்கு நான் அதைக் கூறினேன், நான் அவ்விதம் கூறினது போல அதற்கு மேலும் கூறினது கிடையாது. தேவன் அதை அறிவார். நான் என்னுடைய காலூன்றி எழுந்து நின்றேன்; இது என்னுடைய நினைவில் நிலைத்து நின்றது. ஏதோவொன்று என்னிடம், ‘இப்பொழுது, இது தான் உன்னுடைய புது ஊழியத்தின் ஆரம்பம். இப்பொழுது, நீ விரும்புகிற எதை வேண்டுமானாலும் கேள், அது உனக்குக் கொடுக்கப்படும்’ என்றது. 67. நான் அங்கே நின்றேன். நான்-நான் ஒரு மத வெறி பிடித்தவனாயிருக்க விரும்பவில்லை, நான்-நான் தெளிந்த புத்தியுடனும் (ள்ஹய்ங்), நீதியுடனும், உத்தமத்தோடும், உண்மையுடனும் இருக்கவே விரும்புகிறேன் என்பதை தேவன் அறிவார். நல்லது இப்பொழுது, எனக்கு ஐம்பது வயதாகிறது, நான் போய் அவரை சந்திப்பதற்கு அதிக காலமில்லை. நான் இந்த உலகத்தை விட்டு போவதற்கு முன்பு, எல்லாம் முற்றிலுமாக சரியாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளவே விரும்புகிறேன். நான், ‘நான் ஏதோவொன்றைக் குறித்துப் பொறுப்பற்ற விதமாய் இருக்க விரும்பவில்லை, நான் ஒருக்கால்...’ என்று எண்ணினேன். இப்பொழுது, நான் என்னுடைய விரலைக் கடித்துக் கொண்டு, ‘நான் தூங்கிக் கொண்டிருக்கவில்லை, நான் இதைக் குறித்து கனவு காணவில்லை, எனவே ஏதோவொன்று தவறாயுள்ளது’ என்று கூறினேன். என்னுடைய முகமும் எல்லாமுமே மிகவும் உணர்ச்சியற்று மரத்துப் போனது போல் ஆகி விட்டன. நான், ‘நான் இதை விட்டு என்னை நானே விடுவித்துக் கொள்ள கூடாதிருக்கிற ஒரு நிலைக்குள் நான்-நான் வரும் வரை, நான் ஒருக்கால் வெறுமனே இதைக் குறித்து அதிகமாக தியானித்துக் கொண்டிருக்கலாம்’ என்று நினைத்தேன். மேலும், வழக்கமாக நான் ஆழமான அபிஷேகத்துக்குள் வரும்போது, அதைத் தொடர்ந்து ஒரு தரிசனமும் வருவதுண்டே என்று நான் நினைத்தேன். நான், ‘நல்லது, நான்-நான் இங்கே சற்று ஒரு நிமிடம் காத்திருப்பேன்’ என்று நினைத்தேன். 68. நான்-நான் என் கரங்களை இவ்விதமாய் அசைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினேன், ஏதோவொன்று, ‘நீ என்ன விரும்பினாலும் அதைச் சொல், அது உனக்குக் கொடுக்கப்படும்’ என்றது. நான் காத்திருந்து கவனித்துக் கேட்டேன்; நான், ‘அது... ஐயா, நீர் எங்கேயிருக்கிறீர்?’ என்று நினைத்தேன். அது மீண்டும், ‘நீ என்ன விரும்பினாலும் அதைக் கேள், அது உனக்குக் கொடுக்கப்படும். நான் செய்யப் போகும் காரியங்களை, உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறுவதைக் கேட்டேன். 69. நானோ, ‘ஆனால் நான் என்ன செய்ய வேண்டும்...’ என்று கூறினேன். நான், ‘நான் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்?’ என்று நினைத்தேன். நான்-நான் எனக்குப் பித்துப் பிடித்ததைப் போன்று உணர்ந்தேன். நான், ‘நான் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்? நான் ஒரு ஆளையும் காணவில்லையே; அந்த ஒளி எங்கே? வழக்கமாக அதுதான் பேசும். இங்கே அந்த ஒளி இல்லையே. நீர் யார்? எங்கேயிருக்கிறீர் - உமக்கு என்ன வேண்டும்?’ என்று நினைத்தேன். 70. ஏதோவொன்று, ‘நீ என்ன விரும்பினாலும் அதைக் கேள்’ என்று கூறுவதாக நினைத்தேன். அது உண்மை. ‘நீ விரும்புவதைக் கேள்’ என்று எழுதப்பட்டுள்ள மாற்கு 11:23 ஆகிய அந்த வேதவாக்கியத்தைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான், ‘நல்லது, நான் எதைக் கேட்பேன்? இங்கே வியாதிப்பட்ட ஜனங்கள் யாருமேயில்லை. நான் என்ன செய்யலாம்? இங்கே வெளியே எதுவுமேயில்லையே - ஒருக்கால், நான் அருகில் இருக்கிறேனா?’ என்று நினைத்தேன். நான், ‘நான் என்ன கேட்கலாம்?’ என்று கூறினேன். நீங்கள் என்னுடைய சத்தத்தை எவ்வளவு தெளிவாக கேட்கிறீர்களோ அவ்வளவு தெளிவாக ஏதோவொன்று, ‘நீ வேட்டையாடவில்லையா? உனக்கு வேட்டை மிருகம் எதுவும் கிடைக்கவில்லையா?’ என்று கேட்டது. 71. நான், ‘அது உண்மை தான்’ என்றேன். நான், ‘இது கர்த்தரா’ என்று நினைத்தேன், நான், ‘நான்-நான் தவறான எதையாவது செய்திருந்தால், நீர் என்னை மன்னியும்’ என்று கூறினேன். இப்பொழுது, அது மிகவும் மோசம் அல்லவா? நீங்கள் தவறான எதையாகிலும் செய்திருந்தால். நான், ‘கர்த்தாவே, நான் தவறான எதையாகிலும் செய்திருந்தால், என்னை மன்னியும். ஆனால் இது நீரா? இந்த வேதவாக்கியத்தை என்னிடம் கொண்டு வர முயற்சிப்பது நீரா? நாங்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த மற்ற உயர்ந்த படி நிலை இது தானா? நீர் எனக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்தீர், கூடாரக் கூட்டங்கள் தொடங்கப்படும் போது எங்கேயோவுள்ள ஒரு சிறு கட்டிடத்தில் நடக்கும் ஒரு கூட்டத்தில் அது உறுதிப்படுத்தப்படும் என்று அத்தரிசனம் கூறினது. அதற்குத் தான் நீர் வழிநடத்திக் கொண்டிருக்கிறீரா? கர்த்தாவே, அது அவ்வாறு இருக்குமானால், நான் உம்மை உம்முடைய வார்த்தையின் மூலம் அறிந்து கொள்வேன்’ என்றேன். 72. நான் சுற்று முற்றும் நோக்கி, ‘நடக்க இயலாத ஏதோவொன்றை நான் கண்டு பிடிப்பேன்’ என்று நினைத்தேன். நான் அந்த வெட்டுக்கிளி புதரைக் கண்டுபிடித்தேன்; நான் சொன்னேன்... நான் வழக்கமாக 50 கெஜம் (ஹ்ஹழ்க்) தூரத்தில் என்னுடைய பார்வையை செலுத்துவேன். நான்... கர்த்தர்... நான் துப்பாக்கிக் குண்டல்ல, ஆனால் நான்-நான் என்னுடைய துப்பாக்கி 50 கெஜ தூரத்திலுள்ள முளையை (ற்ஹஸ்ரீந்) சுடவில்லை என்றால், அது முடிந்து போய் விட்டது. எனவே அப்போது, நான்... நான் அணில்களைச் சுடுகிறேன், நான் ஒருபோதும் ஒரு அணிலையும் அதன் முதுகிலோ, அல்லது அதன் தலையிலோ சுட மாட்டேன்; நான் சரியாக அதைப் பார்த்து, ஒரு .22 ரக துப்பாக்கியைக் கொண்டு அதன் கண்ணில் சுட வேண்டியதாயிருந்தது. இப்பொழுது, அது அவ்வாறு சுடப்படாமலிருந்தால், அதைப் போக விட்டு விடு. எனவே அப்படியானால்... 73. நான், ‘அங்கே 50 கெஜ தூரம் உள்ளது’ என்றேன், அது ஏறக்குறைய இந்தக் கட்டிடத்தின் குறுக்களவு தூரம் இருக்கும்; நான், ‘ஒரு சிகப்பு நிறமுள்ள இளம் அணில் அங்கு வந்து, அங்கேயுள்ள அந்த இலையுதிர்ந்த மரக்கிளையில் இருக்க வேண்டும், நான் சரியாக அதை இங்கேயிருந்து சுட வேண்டும்’ என்றேன். அங்கே அந்த அணில் வந்தது. நான் தூப்பாக்கியை எடுத்து, அந்த சிறு தொலைநோக்கியைக் கொண்டு அதனுடைய கண்ணை நோக்கிக் குறிபார்த்து, அதை சுட்டு, வீழ்த்தினேன். நான் அதைக் காணும்படி (அருகில்) நடந்து சென்றேன்; நான், ‘அதில் இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது. ஒரு தரிசனத்திற்கு இரத்தம் வடியாது’ என்று நினைத்தேன். நான்-நான் அதை உற்றுப் பார்த்து, அந்த அணிலைக் கையில் எடுத்து, அதைத் தொட்டுப் பார்த்தேன்; அது ஒரு உண்மையான அணில். நான் மிகவும் கலக்கமடைந்தேன். நான், ‘நல்லது, அது அப்படியே சரியாக சம்பவித்தது என்று உனக்குத் தெரியும், அவ்வளவு தான்; அது அப்படியே அவ்விதமாகவே சம்பவித்து விட்டதே’ என்று நினைத்தேன். 74. எனவே நான் நடக்கத் தொடங்கினேன், நான், ‘ஆனால் இங்கேயுள்ள இந்த வெட்டுக்கிளி புதரில் ஒரு அணில் இருக்குமா? நல்லது, அவைகள் அதோ பின்னாலுள்ள அந்தக் காடுகளில் தான் இருக்கும். அவைகள் இவ்விதமாக அங்கே போவதில்லையே, நான் காலை முழுவதும் வேட்டையாடிக் கொண்டிருக்கிறேனே’ என்று நினைத்தேன். எனவே நான் அங்கே சிறிது நேரம் நின்றவாறு, நான், ‘கர்த்தாவே, அது நீராக இருக்குமானால், இரண்டு மூன்று சாட்சிகளால் உறுதிப்படுத்தப்படும் என்று வேதம் கூறுகிறது, அது இரண்டாவது முறையாக சம்பவிக்க முடியாது’ என்றேன். எனவே நான் அந்த மலை பக்கமாக நடந்து சென்று, உட்கார்ந்து கொண்டு, ‘இப்பொழுது, நான் இங்கே பித்துப்பிடித்தவனாக நடந்து கொள்கிறேனே’ என்றேன். மேலும் நான், ‘நல்லது, இப்பொழுது நான்-நான் அப்படியே புறப்பட்டு வீட்டிற்குப் போய் விடலாம்’ என்றேன். நான், ‘அது...’ என்றேன். ஆனால் நான், ‘நான் அதை முயற்சி செய்வேன் என்று நம்புகிறேன்’ என்று நினைத்தேன். நான், ‘அங்கே வேறொரு அணில் வந்து, சரியாக அந்த ஒரு கொத்து திராட்சைக் கொடிகளின் மேல் அமர வேண்டும்’ என்றேன். நான் என்னுடைய விரலைக் கீழே போட்டு விட்டு, திரும்பிப் பார்த்தேன்; நான் ஒரு அணிலையும் பார்க்கவில்லை. நான், ‘நல்லது’ என்று சொல்லி விட்டு, திரும்பிப் பார்த்து, ‘அங்கேயிருக்கும் அது என்ன?’ என்று நினைத்தேன். என்னுடைய தொலைநோக்கியை எடுத்து, என்னிடமிருந்து 50 கெஜம் தூரத்தில் இருக்கிற ஒரு அணிலை நோக்கிப் பார்த்தேன். நான் அந்த அணிலைச் சுட்டேன். அதை எடுப்பதற்காக நடந்து சென்று, அது ஒரு தரிசனமா என்று பார்த்தேன், ஆனால் அது-அது ஒரு தரிசனமல்ல; அது ஒரு அணிலாக இருந்தது. அவைகளை ஆர்வத்துடன் எடுத்துக் கொண்டேன். எனவே அவைகள்... நான்-நான் அந்த ஒன்றை எடுத்துக் கொண்டு, ‘ஓ என்னே!’ என்று நினைத்தேன். நான் அப்படியே மிகவும் வேடிக்கையான உணர்வைப் பெற்றேன். நான், ‘இரண்டு, ஆனால் நீர் மூன்று என்று கூறினீரே’ என்று நினைத்தேன். 75. ‘நல்லது,’ நான், ‘இது... கர்த்தாவே, இது நீர் என்று நான்-நான்-நான்-நான் ஒருவிதத்தில் விசுவாசிக்கிறேன். நீர் ஒருக்கால் இப்பொழுது ஜனங்களுக்காக ஏதோவொன்றை செய்யப் போகிறீர்; நீர் உமது ஜனங்களுக்கு உதவி செய்யப் போகிறீர். எனவே நான் உமக்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன், நான்-நான் உமக்கு நன்றி கூறுகிறேன், ஐயா’ என்றேன். நான் என்னுடைய தொப்பியைக் கழற்றி விட்டு, ‘நான்-நான் நிச்சயமாகவே உமக்கு நன்றி கூறுகிறேன், ஐயா. இப்பொழுது நான்-நான் உம்மை விசுவாசிக்கிறேன், நீர் உமது ஜனங்களுக்காக ஏதோவொன்றைச் செய்யப் போகிறீர், எனவே, அன்பு பிதாவே, நான்-நான் அதை நிச்சயமாக பாராட்டுகிறேன்’ என்று கூறிவிட்டு, ‘இப்பொழுது, நான் வீட்டிற்குப் போகிறேன்’ என்றேன். அவரோ, ‘ஆனால் உனக்கு மூன்று தேவை என்று நீ சொன்னாயே’ என்றார். 76. ‘நல்லது,’ நான், ‘ஆம்’ என்றேன். இப்பொழுது, எனக்குள்ளே ஏதோவொன்று இருப்பதைப் போன்று தோன்றினது. நான் ஒரு சத்தத்தையும் கேட்கவில்லை, ஆனால் எனக்குள்ளே இருக்கும் ஏதோவொன்று அதைக் கூறுகிறது. ‘நல்லது,’ நான், ‘நான் இந்த ஒன்றை மிக முக்கியமான ஒன்றாக செய்வேன், (அப்படியானால்) அது-அது-அது இயற்கைக்கு மேம்பட்ட ஏதோவொன்றாக இருக்க வேண்டும்’ என்று நினைத்தேன். நான் வெளியே வயலில் நோக்கிப் பார்த்தேன்; அங்கே வயலின் அருகில், பெரிய வழுவழுப்பான மரம் ஒன்று தன்னுடைய பெரிய பக்க கிளைப்பகுதியை வெளியே நீட்டினபடி நின்று கொண்டிருந்தது. நான், ‘ஒரு இளம் அணில் அந்த கிளையின் மேல் போய், அதன் நுனிப்பகுதியில் உட்கார்ந்து கொண்டு, தங்கள் சோளப்பயிரைக் கொய்து கொண்டிருக்கிற அந்த விவசாயியை நோக்க வேண்டும்’ என்றேன், அவர்கள் தங்களுடைய சோளப்பயிரின் மேல் தோலை நீக்கிக் கொண்டிருந்தனர், மேலும் நான் தொடர்ந்து, ‘நான் சரியாக இங்கேயிருக்கும் இந்த மரத்திலிருந்தே அந்த அணிலைக் கொல்ல வேண்டும். அது அந்தவிதமாக இருக்க வேண்டும்’ என்றேன். 77. நான் ஒரு நிமிடம் அங்கு நின்றேன், அணில் எதுவுமில்லை, திரும்பிப் பார்த்தேன். ஏறக்குறைய ஐந்து நிமிடங்கள் கடந்தன, எந்த அணிலும் இல்லை. நான், ‘நல்லது’ என்றேன்... நான், ‘நல்லது, இதுவே போதுமானது. எப்படியும் நான் போக நேரமாகி விட்டது’ என்று எண்ணினேன். நான் தொடர்ந்து, ‘நான் போவது நல்லது’ என்றேன். நான் அங்கிருந்து நடக்கத் தொடங்கினேன்; நான் அவ்வாறு நடக்கத் தொடங்கின போது, ஏதோவொன்று என்னிடம், ‘ஆனால் நீ ஏற்கனவே அதை உரைத்து விட்டாய். மேலும் ‘உன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், நீ சொன்னபடியே ஆகும்...’ என்று வேதவாக்கியம் கூறுகிறதே’ என்றது. அல்லேலூயா! ஒரு மரத்தின் பக்கவாட்டுப் பகுதிக்கு முன்பாக காத்துக் கொண்டிருந்தேன்; நான் அதற்கு அப்பாலும் நோக்கினேன், பின்பாகவும் நோக்கினேன்; அங்கே எந்த அணிலும் இல்லாதிருந்தது. மேலும் பத்து நிமிடங்கள் காத்திருந்தேன், அணில் எதுவுமில்லை. நான், ‘ஒரு அணில் அங்கே எப்படி வெளியே வர முடியும்?’ என்றேன். எனவே நான், ‘நல்லது, நான் அப்படியே தொடர்ந்து போவேன் என்று நினைக்கிறேன், நான் வீட்டிற்குப் போயாக வேண்டும், ஏனென்றால் இது திரு. சாத்மனையும் மற்றவர்களையும் அழைத்து வர வேண்டிய நேரம், எனவே நான் அப்படியே தொடர்ந்து போவேன்’ என்றேன். நான் அவ்விதமாக அங்கிருந்து நடந்து செல்லத் தொடங்கினேன். (ஏதோவொன்று), ‘நீ அதை சந்தேகிக்கிறாயா?’ என்றது. உங்களை எங்ஙனம் பயிற்றுவித்து உங்களுக்குக் கற்றுக் கொடுப்பது என்று தேவனுக்குத் தெரியும். ‘நீ சொன்னதை சந்தேகிக்கிறாயா?’ 78. நான், ‘இல்லை, நான் சந்தேகிக்கவில்லை’ என்றேன். நான் அதைச் சொன்ன மாத்திரத்தில், ஒரு இளம் அணில் அந்தக் கிளைளை விட்டு வெளியே வந்து, அந்தக் கிளையின் நுனிப்பகுதிக்கு நடந்து சென்று, அந்த விவசாயிகளை நோக்கியபடி நின்றது. நான் சரியாக அங்கிருந்தபடி அதைச் சுட்டேன், இப்படியாக எனக்கு மூன்று அணில்கள் கிடைக்கும்படி ஆனது. மேலும் நான், ‘இந்தப் பிரதேசத்தில் வேறொரு அணில் இருக்கிறதா என்று பார்க்கப் போகிறேன்’ என்றேன். நான் திரு. சாத்மன் அவர்களையும் மற்றவர்களையும் அழைத்து வர ஏறக்குறைய மூன்று மணி நேரம் காலதாமதம் ஆகியிருந்தது, ஒருவருடைய சத்தத்தைக் கூட கேட்க முடியவில்லை. நான் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் கூறினேன். அது என்னை தொல்லைப்படுத்தினது. அதைக் குறித்து என்ன நினைக்க வேண்டும் என்றே எனக்குத் தெரியவில்லை. 79. ஏறக்குறைய இரண்டு வாரங்கள் கழித்து, நான் கென்டக்கி மாகாணத்தில் இருந்தேன், அங்கே அணில் வேட்டையாடும் பருவ காலம் அப்பொழுதும் இருந்தது, என்னுடைய நண்பர்களாகிய திரு. உட் அவர்களோடும் அவருடைய மைத்துனரோடும் அங்கே இருந்தேன். நான் அங்கே நின்று கொண்டிருந்தேன், நாங்கள் அந்தக் காலையில் சென்று வேட்டையாடிக் கொண்டிருந்தோம். ஓ, பெருங்காற்று அடித்துக் கொண்டிருந்தது, இலைகள் எல்லாம் மரங்களை விட்டு விழுந்து விட்டன, அணில் வேட்டைக்கு அது ஒரு மோசமான நேரமாக இருந்தது. எனவே நாங்கள்... நல்ல வேட்டைக்காரர்களும் ஒரு நாளைக்கு ஒரு அணிலும் பிடிக்கவில்லை. அப்போது அவைகளைப் பிடிக்க நீங்கள் சிறு துப்பாக்கியை வைத்திருக்க வேண்டும், மேலும் நான் வேட்டை... (ஒலிநாடாவில் காலியிடம் – ஆசிரியர்.) ‘நீ அவைகளைக் கொண்டிருப்பாய்.’ 80. மேலும் நான், ‘இப்பொழுது, இங்கே அதைக் குறித்து எனக்கு - எனக்குத் தெரியாது. இக்காலையில், எதிர்பார்த்தபடி, (அணில்கள் கிடைப்பது) மிகவும் கூடாத காரியமாக உள்ளது, வருடத்தின் இந்த நேரத்தில் இங்கே எந்த அணிலுமே இல்லை. இது மிகவும் குளிராயுள்ளது, நாம் நிறைய ஆடைகளை அணிந்துள்ளோம்; நான் அப்படியே பயங்கரமாக குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கிறேன். அணில்களே இல்லையே’ என்று எண்ணினேன். இலைகள் ஏறக்குறைய நிலத்தில் இந்த ஆழத்தில் இருந்தன. ஒரு மந்தைக் கூட்டம் மான்கள் அந்த வழியாக கடந்து சென்று கொண்டிருப்பதைப் போன்ற சத்தத்தை உங்களால் கேட்க முடியும். இப்படியிருக்க நான் அவ்விதமாக அதனூடாக நடந்து போய்க் கொண்டேயிருந்தேன், அப்பொழுது, ‘நீ என்ன விரும்பினாலும் அதைக் கேள்’ என்ற காரியம் மீண்டும் என் நினைவில் வந்தது. 81. நான் நின்று என்னுடைய துப்பாக்கியை தரையில் வைத்து விட்டு, என்னுடைய தொப்பியைக் கழற்றி, ‘பரலோகப் பிதாவே, நான் இங்கே இந்த மலைகளில் இருக்கிறேன்; என்ன - இந்தக் காரியங்களைக் குறித்து என்ன? நீர் தான் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறீரா? அது நீர்தானா, கர்த்தாவே? நீர் எங்கேயிருக்கிறீர்? நான் வழக்கமாக உம்முடைய ஒளியைக் காண்பேன். நீர் எங்கேயிருக்கிறீர்? என்னிடம் பேசும், கர்த்தாவே. நான் எதையாவது செய்ய வேண்டும் என்று நீர் விரும்பினால், நான் அதைச் செய்வேன். உம்முடைய பார்வையில் எனக்குக் கிருபை கிடைக்குமா? நான்... என்னோடு சற்று பேசும்’ என்று கூறினேன். ‘நீ என்ன விரும்பினாலும் அதைக் கேள், அது உனக்குக் கொடுக்கப்படும்’ என்றார். 82. நான், ‘அது நீராக இருக்குமானால், இக்காலை வேளையில் எனக்கு மூன்று சாம்பல் நிற அணில்கள் வேண்டும்’ என்றேன். இந்தியானாவில் அது சிகப்பு நிறத்தில் இருக்கிறது. நான், ‘எனக்கு மூன்று அணில்கள் வேண்டும்’ என்றேன். ஏதோவொன்று, ‘அவை எந்த வழியாக வர வேண்டும்?’ என்று கேட்டது. 83. நான், ‘அதோ அது இருக்கிறது’ என்று நினைத்தேன். நீங்கள் என்னுடைய சத்தத்தை எவ்வளவு தெளிவாக கேட்கிறீர்களோ அவ்வளவு தெளிவாக அந்த சத்தத்தையும் என்னால் கேட்க முடிந்தது. நான், ‘ஒன்று இந்த வழியிலிருந்து வர வேண்டும், ஒன்று பின்னாலுள்ள அந்த வழியிலிருந்து வர வேண்டும், ஒன்று அந்த வழியிலிருந்து வர வேண்டும்’ என்றேன். 84. நான் ஒரு சிறு மரத்தில் சாய்ந்து கொண்டு ஒரு சில நிமிடங்கள் காத்திருந்தேன். என்னால் எந்த அணிலையுமே காண முடியவில்லை, நேரம் போய்க் கொண்டிருந்தது, ஏறக்குறைய திரும்பிப் போக நேரமாகி விட்டது. நான் திரும்பி அந்த மலையைப் பார்த்தேன், மேலே – ஏறக்குறைய 125 கெஜம் தூரத்தில் என்று நினைக்கிறேன் – ஒரு மரத்தின் அடிக்கட்டையில் ஏதோவோன்று இருந்தது போன்று காணப்பட்டதை நான் பார்த்தேன். அது ஒரு மிகச்சிறிய சாம்பல் நிற அணில். நான் சிறு தொலைநோக்கி வழியாக நோக்கினேன், அது ஒரு அணிலா இல்லையா என்று கூற முடியவில்லை. நான் தொடர்ந்து அதைக் கவனித்துக் கொண்டேயிருந்தேன்; அது அந்த மரத்தின் அடிக்கட்டையை விட்டு வெளியே குதித்து, ஒரு மரத்தின் பக்கவாட்டு பகுதி வழியாகப் போகத் தொடங்கினது. நல்லது, அது அதிக தூரத்தில் சுடும்படியானதாக இருந்தது. ஆனால் நான் அப்படியே முழங்காலில் இருந்தபடி, என் கையின் பக்கவாட்டில் துப்பாக்கியை வைத்தபடி குறிபார்த்து, அந்த அணிலைக் கொன்றேன். 85. நான், ‘அப்படியானால், அடுத்த அணில் இந்த வழியிலிருந்து வர வேண்டியிருக்கும்’ என்றேன். எனவே நான் உற்சாகம் மேலிட்டவனாய் அந்த மரத்தைப் பார்த்து, ‘அது இந்த வழியிலிருந்து வர வேண்டும்’ என்றேன். நான் ஏறக்குறைய 15 நிமிடங்கள் காத்திருந்தேன், இதோ ஒரு அணில் வருகிறது. எனவே நான் வேறொரு குண்டை துப்பாக்கியில் இட்டு, இலக்கை குறிவைத்தேன். நான் குறிபார்க்கத் தொடங்கின போது, இரண்டாவது அணில் வந்தது. நான், ‘ஓ, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அதோ இரண்டாவது அணில் உள்ளது, அங்கே அவைகள் உள்ளன’ என்றேன். எனவே நான் எழுந்து முதலாவதைச் சுட்டு, அதைக் கொன்றேன், நான் அதைச் சரியாக அதன் கண்ணைத் துளைக்குமாறு சுட்டேன். 86. அதன்பிறகு-பிறகு இந்த வேறொரு அணில் ஒரு மரத்துண்டின் மேல் துள்ளிக் குதித்து ஓடியது, அது அந்த மரத்துண்டின் மேலாக ஓடி, ஒரு வகை மரத்தின் கொட்டையை (hickory nut) எடுத்து அதை சாப்பிடத் தொடங்கியது. ஏறக்குறைய 50 கெஜம் தூரத்திலிருந்து அதை நல்ல விதமாக சுட்டேன். நான், ‘அங்கே என்னுடைய இரண்டாவது அணில் உள்ளது; அதாவது ஒன்று, இரண்டு, மூன்று அணில்கள் உள்ளன, சரியாக எவ்வளவு கேட்டேனோ அவ்வளவு அணில்கள்’ என்று எண்ணினேன். நான் என்னுடைய துப்பாக்கியில் குறிபார்த்து சுட்டேன், (ஆனால்) நான் அந்த மரத்தைச் சுட்டு விட்டேன். இப்பொழுது, இந்த வருடத்தில் ஏறக்குறைய 149 அணில்களைச் சுட்டதில், நான் ஐந்து துப்பாக்கி குண்டுகளை மாத்திரமே தவறவிட்டேன். எனவே அப்போது, நான், ‘நான் அந்த அணிலை எப்படி தவற விட்டேன்?’ என்று நினைத்தேன். அது அந்த அணிலை ஒருபோதும் பயப்படுத்திவிட வில்லை, அது துள்ளிக் குதித்து, அந்த மரத்துண்டின் வேறொரு பக்கத்திற்கு திரும்ப ஓடிப்போய், நின்றபடி சுற்றிலும் நோக்கிப்பார்த்தது. நான் வேறொரு குண்டை துப்பாக்கியில் நிரப்பி விட்டு, ‘அதை இந்த தடவை நிச்சயமாகப் பிடிப்பேன்’ என்று நினைத்தேன். நான் சரியாக குறுக்காக குறிபார்த்தேன் - துப்பாக்கியின் ஒரு பகுதியை (hair) சரியாக அதனுடைய கண்ணின் குறுக்காக வைத்து, விசையை இழுத்தேன்; (ஆனால்) நான் அதற்குக் கீழே ஏறக்குறைய இரண்டு அடி தூரத்தில் தான் சுட்டேன். நான், ‘என்னே, இந்த துப்பாக்கி நல்ல நிலையில் இல்லையே. இந்தத் துப்பாக்கியில் ஏதோ தவறு உள்ளது’ என்றேன். சிந்திக்கவில்லை. பிறகு அது அந்த மரத்துண்டை விட்டு வெளியே குதித்து என்னிடமிருந்து அதன் பக்கத்தில் ஓடி விட்டது. நான், ‘நல்லது, நான் பக்கவாட்டு திசையில் வைத்து நீண்ட நேரமாக ஒரு அணிலையும் சுடவில்லையே, ஆனால் இந்த துப்பாக்கி செயலிழந்து போய் விட்டதா இல்லையா என்று பார்க்கப் போகிறேன். நான் இந்த தடவை அதை நிச்சயமாகப் பிடிப்பேன். நான் ஒருவேளை குளிரினாலும் நடுங்கிக் கொண்டும் இருக்கலாம்’ என்றேன். எனவே நான் ஒரு சிறு புதரண்டை சென்று துப்பாக்கியை அப்புதரில் சாய்த்து வைத்தேன், அது சரியாக பக்கவாட்டில் இருக்கும் மட்டுமாக குறிபார்த்தேன், ஏறக்குறைய 35 கெஜம் தூரத்திற்கு அதிகமாக அது இருக்கவில்லை; அந்த அணிலோ குன்றில் ஓடிக் கொண்டேயிருந்தது. சரியாக அதன் மையப்பகுதிக்கு நேராக துப்பாக்கியை வைத்து, விசையை இழுத்தேன், நான் எங்கு சுட்டேன் என்பதே எனக்குத் தெரியவில்லை; அது அணிலின் மேல் படவில்லை. நான் என்னுடைய சிறு துப்பாக்கியிலிருந்து குண்டுகளை வெளியே எடுத்தேன், இப்படியிருக்க அந்த அணில் அக்குன்றின் மேலே போய் விட்டது. அப்பொழுது நான், ‘நான் மூன்று சரியான குண்டுகளைத் தவற விட்டு விட்டேன், இந்த முழு சீசனிலும் ஐந்து குண்டுகளை மட்டுமே தவறவிட்டிருக்கிறேன். அது எங்ஙனமிருக்க முடியும்?’ என்று நினைத்தேன். அதன்பிறகு நான், ‘என்னால் அந்த அணிலைப் பிடிக்க முடியவில்லையே. மற்றொன்று இந்த வழியிலிருந்து வர வேண்டும் என்று நான் கூறினேனே’ என்று எண்ணும்படி நேரிட்டது. அவைகளில் இரண்டு அணில்கள் அங்கே இருந்தன. ஆனால் அவருடைய வார்த்தை பரிபூரணமாயுள்ளது, பாருங்கள். 87. பிறகு நான் ஏறக்குறைய இருட்டும் வரையில் காத்திருக்கத் தொடங்கினேன். நான், ‘அந்த மற்ற அணில் வருமானால், நான் அதை எனக்கு மிக அருகில் வைத்து சுடப் போகிறேன், அவ்விதமாகத்தான் செய்ய வேண்டும், ஏனென்றால் இங்கே ஒரு புதர் உள்ளது, அது இந்த புதர் வழியாகத் தான் வர வேண்டும்; அது வரக்கூடிய ஒரே வழி அதுதான்’ என்றேன். ‘நல்லது,’ நான், ‘நல்லது, அது இச்சமயத்திலல்ல. ஒருக்கால் அந்த-அந்த அபிஷேகம் - ஒருக்கால் நான் வெறுமனே இந்த இரண்டு அணில்களை (மட்டுமே) பிடிக்கும்படியாக இருக்கலாம்’ என்று நினைத்தேன். எனவே நான் சென்று என்னுடைய இரண்டு அணில்களையும் எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கிப் போகத் தொடங்கினேன். அந்த பள்ளத்தாக்கில் மிகவும் இருட்டாக இருந்தது. நான் அந்தப் பள்ளத்தாக்கு வழியாக நடக்கத் தொடங்கினேன். ஏதோவொன்று என்னிடம், ‘அந்த மற்ற அணிலைக் குறித்து என்ன?’ என்று கேட்டது. 88. நான், ‘நல்லது, நான்-நான்-நான் ஏற்கனவே இரண்டு அணில்களைப் பிடித்துள்ளேன், இப்பொழுதோ மிகவும் காலதாமதமாகி விட்டது; என்னுடைய தொலைநோக்கியைக் கொண்டு என்னால் பார்ப்பது கூட கடினமாக உள்ளது, (பாருங்கள்?), இப்பொழுது இன்னுமொரு அணிலைப் பிடிப்பதற்கு மிகவும் காலம் கடந்து விட்டது’ என்று கூறி விட்டு கீழே நடக்க ஆரம்பித்தேன்; ஏதோவொன்று, ‘நீ திரும்பிச் சென்று மற்றொரு அணிலையும் பிடித்துக் கொள். நீ ஏற்கனவே அதைச் சொல்லியிருக்கிறாய்’ என்றது. எனவே நான் திரும்பிச் சென்றேன், நான் ஏறக்குறைய பத்து அடிகள் எடுத்து வைக்கவில்லை (இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள்.) என்னிடமிருந்து ஏறக்குறைய அறுபது அல்லது எழுபது கெஜம் தூரத்தில் இருந்த ஒரு மரத்தில் ஒரு அணில் ஓடியதைக் கண்டேன். அது மிகவும் இருட்டான வேளையாய் இருந்தது, அந்த மலையின் உச்சியில் வெளிச்சம் இருந்திருக்க வேண்டும், அல்லது என்னால் அந்த அணிலைப் பார்த்திருக்க முடியாது. நான்-நான் துப்பாக்கியை குறிபார்த்தேன். என்னால் அந்த அணிலைக் காண முடியவில்லை, நான் தொடர்ந்து முன்னும் பின்னுமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போது நான், ‘அந்த அணில் எங்கிருக்கிறது?’ என்று எண்ணினேன். 89. சிறிது கழிந்து அந்த மரத்தின் கிளை ஒன்று அப்படியே எந்த அசைவும் இல்லாமல் இருந்ததைப் போன்று காணப்பட்டது; நான், ‘அதுதான் அதனுடைய தலை’ என்று நினைத்தேன். எனவே நான் சுட்டேன். அந்த அணிலோ அந்த மரத்தை விட்டு கீழே குதித்து ஓடி விட்டது, ஏதோவொன்று அந்த இலைகளில் படும் சத்தத்தை நான் கேட்டேன்; நான், ‘அது வெளியே குதித்திருக்க வேண்டும்’ என்று நினைத்தேன். ஏறக்குறைய அந்த சமயத்தில், அதிலிருந்து சுமார் 15 கெஜம் தூரத்தில், வேறொரு அணில் ஒரு மரத்தின் மேல் ஓடியது. நான், ‘நான் தவறவிட்டு விட்ட அந்த அணில் அதுதான். அது சுற்றி சுற்றி ஓடுகிறது, அது அந்த மரத்தின் மேல் ஓடுகிறது’ என்றேன். எனவே நான் மிக அருகிலிருந்து கவனித்தேன். அங்கே மிகவும் இருட்டாகவும், காற்று பலமாக அடித்துக் கொண்டுமிருந்தது. ஏதோவொன்று சில இலைகளில் அசைவதை நான் காண்பதாக நினைத்தேன்; அப்பொழுது நான், ‘நல்லது, நான்-நான் எப்படியும் அதை சுடப் போகிறேன்’ என்று நினைத்து, அதை சுட்டேன்; அந்த அணில் சுடப்பட்டு தரையில் விழும் சத்தத்தை நான் கேட்டேன். நான் உண்மையாகவே அந்த அணிலைக் கொன்று விட்டேன். நல்லது, நான், ‘நான் இதை அந்த மரத்தில் வைத்து தவற விட்டிருந்தேன், ஆனால் இதோ அது கிடைத்து விட்டது, அந்த வழியிலிருந்து வந்த சிறு அணில். நான் போய் அதை எடுப்பேன்’ என்றேன். எனவே நான் அந்தக் குன்றின் மேல் நடந்து சென்றேன், நான் இந்த முதலாவது மரத்தை அடைந்த போது, அங்கே என்னுடைய அணில் விழுந்து கிடந்தது. மிகச்சரியாக வரிசையில் முதலாவது வந்த அணில் அதுதான், நான் அதைக் குறிவைத்திருந்தேன். பரலோகத்திலிருக்கிற தேவன் அது உண்மை என்பதை அறிவார். சரியாக நான் அதை குறிவைத்த அணிலே தான்... நல்லது, நான் அங்கு கடந்து சென்றேன், நான், ‘நல்லது, எனக்கு நான்கு அணில்கள் ஆகி விட்டன. நல்ல அளவுடைய ஒன்றை அவர் எனக்குக் கொடுத்திருக்கிறார். அது நல்லது. நான் மூன்றைக் கூறினேன், எனக்கு நான்கு கிடைத்திருக்கிறது. அது நல்லது’ என்றேன். 90. எனவே மற்ற அணிலை எடுத்துக் கொள்வதற்காக நான் சென்றேன், அதுவோ அங்கேயில்லை. இருப்பினும் நான் அந்த அணிலைக் கொன்றேன் என்பதை அறிந்திருந்தேன். நல்லது, நான் அங்கே சுற்றிலும் எல்லாவிடங்களிலும் அதைத் தேடிப் பார்த்தேன். நான் காத்திருந்து, அந்த இலைகளினூடாக அந்த இருளில் என் கரங்களால் அதைத் தடவித் தேடிப் பார்த்தேன். முறிந்து கிடந்த ஒரு பழைய மரத்துண்டையும் மற்றும் யாவற்றையும் திறந்து பார்த்தேன். அது அப்படியே காயமுற்று, நகர்ந்து சென்றிருக்க வேண்டும் என்று நினைத்தேன். இறுதியாக நான் முறிந்து கிடந்த அடிமரக்கட்டையில் இருந்த ஒரு சிறு துவாரத்தில் அதைக் கண்டு பிடித்தேன். நான் என்னுடைய குச்சியை அங்கே உள்ளே இட்டு அதை இழுக்கத் துவங்கினேன்; நான் ஏதோவொன்று உள்ளே விழுவதை உணர்ந்தேன், அப்போது நான், ‘இது அந்த அணில் தான், ஆனால் என்னுடைய கரத்தை உள்ளே போடுவதற்கு இந்த துவாரம் மிகவும் சிறியதாக உள்ளது; நான் இதை வெட்டி முறித்துப் போடும்படி ஒரு கோடாரி அல்லது ஏதோவொன்றை எடுத்து வர வேண்டும்’ என்றேன். எனவே நான் ஒரு பெரிய கல் அல்லது பெரிய துண்டை அதன் மேல் வைத்து விட்டு அங்கிருந்து கீழே சென்றேன். 91. நான் அந்த மலையின் கீழே வந்து சேர்ந்த போது, என் சகோதரர்களிடம் அதைக் கூறினேன். அவர்கள் கர்த்தரைத் துதித்து சத்தமிடத் துவங்கினர். அந்த இரவில், அங்கு வந்து கூடியிருந்த ஒரு கூட்டம் மலைவாழ் மக்களிடம் (mountain people) நான் அதைக் கூறிக் கொண்டிருந்தேன். நாங்கள் எல்லாரும் கர்த்தரைத் துதித்துக் கொண்டிருந்தோம். என்னுடைய சபையைச் சேர்ந்த டோனி என்ற பெயருடைய என்னுடைய டீக்கன்மார்களில் ஒருவர், அவர்-அவர் என்னோடு இருந்தார். அந்த இரவில், நாங்கள் படுக்கைக்குப் போகத் துவங்கின போது, அவர் அந்த ஜனங்களுக்கு முன்பாக ஜெபித்தார்; அவர், ‘இப்பொழுதும், கர்த்தாவே’ என்று ஜெபித்தார் - ஜெபத்தை நடத்தும்படி நாங்கள் அவரைக் கேட்டுக் கொண்டோம் - அவர், ‘இப்பொழுதும், கர்த்தாவே, எங்கள் சகோதரன் உண்மையைக் கூறியிருக்கிறார் என்பதை உடுதிப்படுத்தும்படி, அவர் நாளைக்கு அந்த மரத்துண்டில் அந்த அணிலைக் கண்டுபிடிக்கட்டும், அப்போது அவர் உண்மையைக் கூறியிருக்கிறார் என்பதை நாங்கள் அறிந்து கொள்வோம்’ என்றார். அப்போது என்னுடைய இருதயமே அப்படியே நின்று விடுவது போன்று தோன்றியது. ‘நான் உண்மையைக் கூறியிருக்கிறேன் என்று அறியும்படிக்கா? அவ்விதமான ஏதோவொன்றா, அதைக் குறித்து நான் ஒரு பொய் பேசினேனா? அப்படிப்பட்ட ஒரு மாய்மாலக்காரனை தேவன் தடுத்து நிறுத்தி விடுவாரே.’ மேலும் நான், ‘என்னை நேசிக்கிற, அந்த பண்பாற்றலுடைய ஒரு மனிதன் எப்படி, தன்னுடைய மனைவி மரித்துக் கொண்டிருக்கிறவளாய் தரையின் மேல் படுத்த படுக்கையாய் கிடந்து, மருத்துவர்கள் அவளைக் கைவிட்டிருக்க, (நான்) சென்று அவளுக்காக ஜெபத்தை ஏறெடுத்த போது, அவள் எழுந்து என்னோடு சபைக்கு வந்தாளே. அம்மனிதனால் எப்படி என்னுடைய வார்த்தையை கேள்வி கேட்க முடிந்தது? அவரால் எவ்வாறு அதைக் கூற (முடிந்தது)?’ என்று நினைத்தேன். மற்ற சகோதரர்களோ அதை விளங்கிக் கொண்டார்கள். 92. அடுத்த நாள் காலையில், பகல் வெளிச்சம் வருவதற்கு முன்பாக அதிகாலையில், மேஜை அருகில் வைத்து, அவர், ‘நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, நாம் மேலே சென்று உம்முடைய அணிலை எடுத்துக் கொண்டு வருவோம்; எப்படியும் நாம் அதை இன்றே எடுத்து விடுவோம், ஏனென்றால் அது அங்கே இருக்கும்’ என்றார். 93. நான், ‘சகோதரன் டோனி அவர்களே, நீர் அதை சற்றும் புரிந்து கொள்ளவில்லை. நான் ஊக்குவித்தலின் கீழ் அதை உரைத்த போது, நான் மூன்று அணில்கள் என்றேன். அந்த நான்காவது அணிலுக்கு அதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது’ என்றேன். ‘ஓ,’ அவர், ‘அந்த அணில் எப்படியும் அந்த மரத்துண்டில் இருக்கிறது; அதன்மூலமாக நாம் அதை அறிந்து கொள்வோம்’ என்று கூறினார். 94. நான் அந்த மேசையின் மறு பக்கத்தை நோக்கிப் பார்த்து, ‘சகோதரன் டோனி, நான் உம்மிடம் உண்மையைத் தான் கூறுகிறேன் என்று உமக்கு-உமக்கு சந்தேகமாய் இருக்கிறதா?’ என்று நினைத்தேன். நான் அதைக் கூறவில்லை; சகோதரர்கள் ஒருவர் மற்றவரை நோக்கிப் பார்த்தனர். நாங்கள் காட்டை நோக்கிச் சென்றோம். நாங்கள் வித்தியாசமான வழிகளில் கார்களை விட்டு வெளியேறத் துவங்கின போது, நல்லது, ‘என்னுடைய அணில் அங்கேயிருந்தால், நான் சென்று என்னுடைய அணிலை எடுத்துக் கொள்வேன். பிறகு, நான் திரும்பிச் சென்று சகோதரன் டோனியிடம் கூறுவேன்’ என்று நினைத்தேன். ஆனால் ஏதோவொன்று அப்படியே முன்னோக்கி செல்லும்படி, என்னைத் தொடர்ந்து உந்தித் தள்ளிக் கொண்டேயிருந்தது. நான்... தொடர்ந்து சென்றேன். இப்பொழுது, அது நான் இங்கு வருவதற்கு முன்பாக சற்றேறக்குறைய ஒரு வார காலம் இருக்கும். நான் தொடர்ந்து மேலே சென்றேன். நான் அங்கே மேலே சென்று அடையத் துவங்கும் நேரத்தில், ஏதோவொன்று என்னிடம், ‘அந்த அணில் அங்கே இல்லை என்றால் என்னவாகும்? இப்பொழுது, என்னவாகும்? அது உண்மையல்ல என்று உன்னுடைய சொந்த டீக்கனே கூறுவார்’ கூறினது. இப்பொழுது, என் இருதயத்தில் என் அறிவுக்கு எட்டினவரையில், இந்த வார்த்தைகள் உண்மை என்றும், மிகச் சரியானது என்றும், பரிபூரணமானது என்றும் கர்த்தர் அறிவார். நான் தொடர்ந்து நடக்கத் துவங்கினேன், அப்போது நான், ‘நல்லது, அது அங்கேயிருக்கிறது என்று நான் நிச்சயமாகவே நம்பிக்கையுடையவனாய் இருக்கிறேன். அது நிச்சயமான ஒரு காரியம்: நான் நிச்சயமாகவே அதை நம்புகிறேன்’ என்று நினைத்தேன். நான் அந்த அணிலைக் குறித்து ஒருபோதும் எதையும் சொல்லியிருக்கவில்லை; அது இருந்தது... நீங்கள் எல்லாருமே அதைப் புரிந்து கொள்கிறீர்கள், அது எதை-எதைப் பற்றியது என்று எத்தனை பேர் புரிந்து கொள்கிறீர்கள்? நிச்சயமாக. நான் மூன்று அணில்களைக் குறித்து தான் உரைத்திருந்தேன். நான்காவது அணிலோடு அதற்கு எந்த சம்பந்தமும் இல்லாதிருந்தது. ஆனால் எவ்வாறு பயிற்றுவிப்பது என்றும் என்ன செய்ய வேண்டும் என்றும் கர்த்தருக்குத் தெரியும். இப்படியிருக்க நான் அங்கே மேலே போய்க் கொண்டேயிருந்தேன், அந்த அபிஷேகம் மீண்டும் என்மேல் வந்து, ‘அது அங்கே இல்லாவிட்டால், அது அங்கே இருக்கும் என்று கூறு, நீ அந்த அணிலைக் கண்டு பிடிப்பாய்’ என்றார். 95. நான், ‘கர்த்தாவே, நான் இப்பொழுது உம்முடைய வார்த்தையை ஏற்றுக் கொள்கிறேன். நான் அந்த அணிலை கண்டுபிடிக்க வேண்டும்’ என்றேன். நான் மேலே அந்த மலையில் சென்றேன். நான், ‘இனிமேல் நான் பயப்படத் தேவையில்லை, ஏனென்றால் நான் அதைக் கண்டுபிடிக்கப் போகிறேன், அவ்வளவு தான். நான் அதைக் கூறி விட்டேன். அந்த அபிஷேகம் என்மேல் இருந்து, நான் எதையாகிலும் கூறும்போது, அது அவ்விதமாகவே நடக்கும் என்று கர்த்தர் என்னிடம் கூறினாரே. எனவே நான் தொடர்ந்து நடந்து செல்கிறேன்’ என்று நினைத்தேன். 96. நான் சுற்றிலும் எல்லாவிடங்களிலும் தேடிப் பார்த்தேன்; நான் தேடினேன், நான் மலையிலிருந்து கீழிறங்கி திரும்பிச் செல்ல ஏறக்குறைய 15 நிமிடங்கள் இருந்தன. நான், ‘நான் சென்று என்னுடைய அணிலை எடுத்துக் கொண்டால் நல்லது’ என்று நினைத்தேன். நான் அங்கே மேலே சென்று, அந்த துவாரத்திலிருந்த பெரிய கல்லை வெளியே இழுத்து, அங்கே உள்ளே தடவி (தேடிப்) பார்க்கத் துவங்கினேன்; என்னால் அதை உணர முடிந்தது. நான் அதை எடுத்தேன், ஏதோவொன்று கீழே விழுவது போன்று உணர்ந்தேன், அதைப் போன்று, அந்தக் குச்சியின் முனையிலிருந்த அந்த அணில் கீழே விழுவது போன்று உணர்ந்தேன். என்னிடம் ஒரு பெரிய பழைய வேட்டை கத்தி இருந்தது, நான் ஒரு பெரிய கல்லை எடுத்து, என்னுடைய கரம் உள்ளே போகுமளவிற்கு, அந்த துவாரத்தை போதுமான அளவு பெரியதாக வெட்டினேன். நான் அங்கே கீழே உற்றுப் பார்த்தேன்; அங்கே விழுந்து கிடந்திருந்த கொஞ்சம் வேர்களை அதை விட்டு எடுத்தேன், இந்தப் பழைய முறிந்த அடிமரக்கட்டையில் கிடந்த கொஞ்சம் வேர்களை எடுத்து விட்டு, நான், ‘ஓ என்னே, நாம் அங்கே சரியாக 9 மணிக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், இந்நிலையில் இப்பொழுது அணிலே இல்லை என்று நினைக்கிறேன்’ என்று எண்ணினேன். 97. ஓ என்னே, அந்தக் காலை வேளை பயங்கரமாக இருந்தது; ஒரு பனிப்புயல் அடித்துக் கொண்டிருந்தது. நான், ‘இது பயங்கரமாக உள்ளதே’ என்று எண்ணினேன். எனவே நான், ‘நல்லது, நான் அதை நிரூபித்துக் காட்டக்கூடிய ஒரே ஒரு காரியம் தான் இருக்கிறது. இப்பொழுதும், அது - கர்த்தாவே, இது உம்முடைய தவறல்ல. ஏனென்றால் அதை உரைக்கும்படி நீர்-நீர் என்னிடம் கூறினபோது, அந்த மூன்று அணில்களுக்காகவே நான் அதை உரைத்தேன், அந்த மூன்று அணில்கள் அங்கே இருந்தன. ஆனால் சகோதரன் டோனி அதை அப்படியே தவறாய் புரிந்து கொண்டார், அவ்வளவுதான்’ என்று நினைத்தேன். மேலும் நான், ‘நான் கீழே திரும்பிச் சென்று, அவரையும் மற்ற சகோதரனையும் மேலே அழைத்து வந்து, இங்கே கூட்டிக் கொண்டு வந்து, இந்த அடிமரக்கட்டை எங்கேயிருக்கிறது என்று காண்பித்து, நான் சரியாக இருக்கிறேன் என்று நான் நினைப்பதை அவர்கள் அறியச் செய்ய விரும்புகிறேன். அந்த அணில் அங்கே இருந்தது என்பதை நான் அறிந்துள்ளதைக் குறித்துள்ள உண்மையை நான் கூறினேனே’ என்று கூறினேன். 98. நான் அதை வைத்துக் கொண்டு - அந்த மலையின் கீழே போகத் துவங்கினேன், ஏதோவொன்று என்னைப் பார்த்து, ‘ஆனால் நீ மேலே வந்து, அந்த அணிலைக் கண்டுபிடித்துக் கொள்வாய் என்று சொன்னாயே’ என்றது. ஆமென். ஓ, அது எனக்கு என்ன செய்கிறது என்பதை நீங்கள் சற்றும் அறிய மாட்டீர்கள். ‘நீ அந்த அணிலைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நீ சொன்னாயே.’ 99. நான், ‘நான் அந்த அணிலை எங்கே கண்டுபிடிக்கலாம்? இதோ இந்தக் காடு உள்ளது, ஒரு மரத்தின் இலை அல்ல, அவைகள் எல்லாமே இங்கே சுற்றிலும் குவிந்து காணப்படுகின்றன. அந்த அணில் விழுந்த மரம் அங்கேயுள்ளது. அது மறைந்திருக்கக் கூடிய வெறும் ஒரே காரியம் தான் இங்கேயுள்ளது, அது இந்த மரத்துண்டின் கீழே தான் இருக்க முடியும், நான் அதிலிருந்த ஒவ்வொரு சிறிய துண்டையும் வெளியே எடுத்து விட்டேன். இந்த மரத்தில் வேறெங்குமே வேறு துவாரம் இல்லையே, (அது இருக்கக்கூடிய) ஒரே இடம் இது மாத்திரமே’ என்று நினைத்தேன். ஆனால் அவர், ‘நீ அதைக் கண்டுபிடிப்பாய் என்று சொன்னாயே’ என்றார். 100. நல்லது, இலைகளிலும் மற்றும் யாவற்றிலும் நான் புரட்டி புரட்டி தேடிப்பார்த்து விட்டேன். நான், ‘ஓ, பில்லி, நீ விலகி அடி ஆழத்தில் போய் விட்டிருக்கிறாய்’ என்று நினைத்தேன். நான் தொடர்ந்து கீழே போகத் துவங்கினேன், (போக) ஆரம்பித்தேன்... ‘ஆனால் நீ அதைக் கண்டுபிடிப்பாய் என்று சொன்னாயே’ என்றது. 101. நான், ‘அது சரிதான்’ என்று நினைத்தேன். அந்த அபிஷேகம் என்மேல் இருந்த போது, ‘நான் அந்த அணிலைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று சொன்னேன். என்னுடைய ஊழியம் மீண்டும் துவங்குவதற்கு அது ஒரு உறுதிப்பாடாக இருக்குமானால், அந்த அணில் இங்கே ஏதோவொரு இடத்தில் இருக்க வேண்டும். நான், ‘என்னால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லையே. அது எங்கே இருக்கிறது?’ என்று சொன்னேன். 102. ஏதோவொன்று, ‘அந்த மரப்பட்டை துண்டின் கீழே பார்’ என்றது. நான் சென்று அதை எடுத்தேன் - பொறுக்கி எடுக்கத் துவங்கினேன் - நான், ‘ஆமாம், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அது இந்த மரப்பட்டையின் கீழே தான் இருக்கிறது’ என்றேன். நான் அந்த மரப்பட்டைத் துண்டை எடுக்கும்படி சென்றேன், ஏதோவொன்று, ‘ஆனால் அது அங்கே கீழே இல்லை என்றால் என்னவாகும்?’ என்றது. 103. ‘ஓ,’ நான், ‘அது அங்கே கீழே இருக்கும்’ என்றேன். நான் அதை பொறுக்கி எடுத்தேன், அங்கே எந்த அணிலுமே இல்லாதிருந்தது. நான், ‘அங்கே ஏதோவொன்று வினோதமாயுள்ளதே’ என்று நினைத்தேன். இப்பொழுது... ஆனால் நான், ‘அங்கே மூன்று அணில்கள் இருக்கும் என்று நான் கூறின அதே ஊக்குவித்தல் தான் அது, அது அங்கே இருக்கும் என்று நான் கூறின போது அதே ஊக்குவித்தல் என் மேல் இருந்ததே, எனவே அதைத் தேடி எடுத்து விடுவேன்...’ என்றேன். நான் மீண்டும் அங்கே கீழே நோக்கிப் பார்த்தேன், அந்த இலைகளின் கீழிருந்து வெளிப்புறமாக நீட்டிக் கொண்டிருந்த இரண்டு சிறிய சாம்பல் நிறமான வேர்பகுதிகள் இருந்ததை நான் கண்டேன். நான் அதை வெளியே எடுத்தேன், அங்கே என்னுடைய அணில் இருந்தது. 104. இப்பொழுது, ஒரு சிறிய ஐயர்லாந்து நாட்டுக்காரன் (Irishman) சத்தமிடுவதைக் குறித்து பேசுகிறீர்கள்; நான் அந்த மலையில் சத்தமிட்டதை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். நான் உண்மையாகவே ஒரு சந்தோஷமான மனிதனாக இருந்தேன். நான் வீட்டிற்குச் சென்று அதைக் குறித்து எல்லாரிடமும் கூறினேன். என்னே, நாங்கள் அனைவரும் எப்படியாக களிகூர்ந்து கொண்டிருந்தோம். சகோதரன் டோனி, ‘சகோதரன் பிரன்ஹாமே, நான் அந்த விதமாக ஜெபித்தேனா என்று எனக்குத் தெரியவில்லையே’ என்றார். நான், ‘ஆனால் நீர் அவ்வாறு தான் ஜெபித்தீர்’ என்றேன். மேலும் சகோதரன் சார்லியும் அவர்களும் அதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர், அவர்-அவர் எப்படியாக அந்தவிதமாக ஜெபித்தார் என்று. 105. எனவே, பிறகு, நான் இங்கே கூட்டத்திற்கு வருவதற்கு ஒரு நாளைக்கு முன்பு; நாங்கள் ஞாயிறு பிற்பகலில் புறப்பட்டோம். சனிக்கிழமை பிற்பகலில், நான் ஒரு மனிதனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன், அவருக்கு ஒரு ஊனமுற்ற பெண் இருந்தாள். அவள் ஒரு சிறுமியாயிருந்தது முதற்கொண்டு போலியோவினால் கட்டப்பட்டிருந்தாள். அவளுக்கு ஏறக்குறைய 30 வயதாக இருந்தது. ஓ, நீங்கள் எப்போதும் கண்டதிலேயே மிக அதிகமாக உபத்திரவப்பட்ட மகளாக அவள் இருந்தாள். நான் அவளுக்காக அநேக தடவைகள் ஜெபித்திருக்கிறேன், அவளுக்கு அருகில் அமர்ந்திருக்கிற, ஏறக்குறைய அவளைப் போன்று ஊனமுற்றவர்கள் சுகமடைந்ததை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் அருமையான ஜனங்களைக் கொண்ட குடும்பத்தினர். 106. மருத்துவர்கள் அவர்களை (அவளுடைய தகப்பனாரைக்) கைவிட்ட (turn down) போது, அவருடைய கதையைக் குறித்து நான் உங்களிடம் பேச எனக்கு நேரமிருந்தால் - நான்கு மருத்துவர்கள் அவரைக் கைவிட்டு, ‘சாத்தியமே இல்லை’ என்று கூறி விட்டனர். நானும் அவரைக் கைவிட்டு, அவரை எடுத்துக் கொள்ளும்படி கர்த்தரிடம் ஜெபித்து வேண்டிக் கொண்டேன். பிறகு வீட்டிற்குச் சென்று, ஒரு தரிசனம் கண்டேன். அவர் தெய்வீக சுகமளித்தலை விசுவாசித்துக் கொண்டிருந்த காரணத்தால், அவரைப் பார்த்து நகைத்துக் கொண்டிருந்த ஒரு பிரசங்கியார் அங்கேயிருந்தார். அவர் என்னிடம், ‘கர்த்தர் உரைக்கிறதாவது, அவரைப் பார்த்து நகைத்துக் கொண்டிருக்கிற அந்த பிரசங்கியாரின் கல்லறையை அவர் தோண்டுவார் என்று திரு. ரைட்டிடம் கூறு’ என்று கூறினார். அவர் அவ்விதமே செய்தார். அவர் இன்றும் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார். மேலும் சம்பவித்திருக்கிற அந்த காரியங்கள். 107. ஆனால் துன்பப்பட்ட அந்த சிறு பெண் அங்கே உட்கார்ந்திருந்தாள், அந்த சிறு பெண்ணிற்காக அவர் ஏன் ஒரு தரிசனமும் கொடுக்க முடியவில்லை என்பதை என்னால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் - திரு. உட் அவர்களும் நானும் அங்கே உணவு உண்டு கொண்டிருந்தோம். நான் சென்றிருந்தேன்... அவர் சபையில் இராப்போஜன பந்திக்காக இராப்போஜன திராட்சை ரசம் தயாரிக்கிறார். நான் அதை எடுத்து வரும்படிக்குச் சென்றேன். இந்த சிறு பெண் என்னைப் பார்த்து கூறினாள்; அவள், ‘சகோதரன் பிரன்ஹாமே, நீர் திரும்பிப் போவதற்கு முன்பு, எனக்கு ஒரு முயலை பிடித்து தருவீரா?’ என்று கேட்டாள். 108. நான், ‘நிச்சயமாக, ஈடித். சகோதரன் உட் அவர்களும் நானும் வெளியே சென்று உனக்கு ஒரு முயலைப் பிடித்துத் தருகிறோம்’ என்றேன். நாங்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றோம். நாங்கள் சிறிது நேரம் அங்கு சென்று, இரண்டு முயல்களைப் பிடித்து விட்டு திரும்பி வந்தோம். திருமதி. ரைட் அவர்கள் எங்களுக்காக உணவை ஆயத்தப்படுத்தியிருந்தார்கள். இப்பொழுது, அவர்களுடைய மகள் ஒரு விதவையாக இருந்தாள். அவர்கள் ஏழைகளாக இருக்கின்றனர்; அவர்கள் எவ்வளவு ஏழைகள் என்று உங்களுக்கு சற்றும் தெரியாது. இங்கே கலிபோர்னியாவைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களாகிய நீங்கள் அதைப் போன்ற ஏதோவொன்றுக்குள் போவது மட்டுமாக ஏழை ஜனங்கள் என்றால் என்ன என்பதை அறிய மாட்டீர்கள். அவள் மேலே மலையின் உச்சியில் இருக்கும் குடிசையில் இரண்டு சிறிய அறைகளில் வசிக்கிறாள். அவளுடைய கணவன் இரண்டு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த டிராக்டரில் கொல்லப்பட்டான், அவன் ஒரு குடிகாரனாய் இருந்தான். தலை கீழாகக் கவிழ்ந்து தன்னுடைய கழுத்தை முறித்துக் கொண்டான்... அந்தச் சிறு பையன் அவனைக் கண்டு பிடித்தான். அவளுக்கு 13 லிருந்து 19 வயதுக்குட்பட்ட (teen-age) இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள், அவர்கள் தகப்பனற்றவர்களாய், ஒரு விதமாக நேர்வழியினின்று வழிவிலகிச் சென்று கொண்டிருந்தார்கள். அந்த ஏழ்மையான சிறிய பெண்மணி அமைதியான, தாழ்மையான கிறிஸ்தவளாக இருந்தாள். ஓ, அவள் தன்னுடைய ஜீவியத்தில் சத்தத்தை உயர்த்திப் பேசினதை நான் ஒருபோதும் கேட்டதே கிடையாது. அவள் அந்தப் பிள்ளைகளைக் கவனிப்பதற்காக, அங்கே மேலேயுள்ள அந்த மலைகளில் தோண்டி, வளர்த்தாள் - அந்த ஒருவகை நிலத்தில் (crawfish ground) - சிறிய துண்டு நிலத்தில் சோளத்தை வளர்க்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். ஓ, அது அவ்வளவு பரிதாபமான ஒரு காட்சியாக இருந்தது. 109. நாங்கள் மேசையில் பேசிக் கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தோம், அவர்கள் அப்படியே என்னை நேசிக்கின்றனர். நான் அங்கே போகும் போது, நான் அப்படியே என்னுடைய அறை என்று அழைக்கும்படியாக, அங்கே மேலே ஒரு அறையை வைத்திருக்கின்றனர். வழக்கமாக அங்கே மில்டவுனில் இருக்கின்ற பாப்டிஸ்ட் சபையின் மேய்ப்பருக்காக அந்த அறையை வைத்திருக்கின்றனர். எனவே நான், ரைட்ஸ் அவர்களோடு தங்குவதற்கு அங்கே ஒரு அறை எனக்கிருந்தது. நான் சொன்னேன், நான் தரிசனங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன்; நான், ‘இப்பொழுது, உங்களுக்குத் தெரியும்...’ என்று கூறினேன், சம்பவித்த காரியங்களைக் குறித்து நான் அவர்களிடம் கூறினேன். நான், ‘இப்பொழுது, அதைப் போன்று, அது ஏதோவொன்றைக் கொண்டிருக்க வேண்டும்; எனக்குத் தெரிந்த ஒரே காரியம் என்னவெனில், அது - கொண்டிருக்கும். அது எப்பொழுதாகிலும் அவ்விதமாக சம்பவிக்குமானால், தேவன் எனக்குக் கொடுக்க வேண்டியதாயிருக்கும் ஒரு விசுவாசமாக அது இருக்கும். ஏனென்றால் அந்த அபிஷேகம் என்மேல் வருகிற போது, அங்கே - அப்படியே ஒரு மிகப்பெரிய விசுவாசத்தைப் (super faith) போன்று அது காணப்படுகிறது. அது என்னில் அதிகரிக்கிறது. அங்கே ஒரு சந்தேகத்தின் நிழலுமில்லாமல் ஏதோவொன்று இருக்கிறது’ என்றேன். மேலும் நான் தொடர்ந்து, ‘ஓ, எப்படியாக நான் நம்புகிறேன். அது நான் தரிசனங்களைக் கொண்டிருப்பது போன்று தான். கர்த்தர் ஒரு தரிசனத்தைக் கொண்டு என்னிடம், ‘போய் ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய், ஒரு குறிப்பிட்ட...தைச் செய்’ என்று பேசும் போது’ என்று கூறினேன், ஏன், என்னே! என்னுடைய மனதில் எந்த கேள்வியுமே இருக்காது, அப்படியே சென்று அதைச் செய்கிறேன். அது ஒருபோதும் தவறிப்போகாது, அது அவ்விதமே சம்பவித்தாக வேண்டும். 110. பாருங்கள், நீங்கள் செய்து கொண்டிருப்பவைகளை நீங்கள் விசுவாசித்தாக வேண்டும்... உங்களுக்கு விசுவாசமும் நம்பிக்கையும் இருந்தாக வேண்டும். தரிசனங்களில் நான் அதைக் கொண்டிருக்கிறேன். தரிசனத்தின் போது... கவனியுங்கள், இது ஒருக்கால் மிகப்பழமையானதாக ஒலிக்கலாம், ஆனால் இப்பொழுது இங்கே இந்த மேடையில் இருக்கிற கர்த்தராகிய இயேசு இங்கேயுள்ள ஒவ்வொரு இருதயத்தின் இரகசியத்தையும் கூற முடியும், அல்லது என்ன சம்பவிக்கும் என்றும் என்ன சம்பவிக்காது என்றும் உங்களிடம் கூற முடியும்... உங்களுக்கு அது தெரியும், நீங்கள் ஒவ்வொரு இரவும் அதைக் காண்கிறீர்கள். நாளை ஜார்ஜ் வாஷிங்டன், தேசிய இடுகாட்டிலுள்ள (National Cemetery) கல்லறையிலிருந்து உயிர்த்தெழப்போகிறார் என்று அவர் என்னிடம் கூறுவாரானால், அது செய்யப்படுவதைக் காணும்படி நான் முழு உலகமும் வரும்படி அழைப்பு விடுப்பேன். அது முற்றிலும் உண்மை. நான் அவரை விசுவாசிக்கிறேன்; அவர் என்னை ஒருபோதும் கைவிட மாட்டார். எனக்கு 18 மாதங்கள் வயதாக இருந்தது முதற்கொண்டு நான் தரிசனங்களைக் கண்டு வந்திருக்கிறேன். ஒரு தடவையும், அது எக்காலத்திலும் தவறிப் போகவேயில்லை, அது ஒருபோதும் தவறிப் போகாது, ஏனென்றால் அது தேவனாக இருக்கிறது. 111. எனவே அப்போது, நான் அவ்விதமாக பேசிக் கொண்டேயிருந்தேன். நான், ‘இப்பொழுது, ஒரு குறிப்பிட்ட காரியம் சம்பவிக்கும் என்று கர்த்தர் என்னிடம் கூறுவாரானால், இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற உன்னுடைய ஊனமுற்ற சகோதரியான சிறு ஈடித்தைப் போன்று. அவர்கள் ஏழ்மையான ஜனங்களாய் இருந்தனர், ஆனால் நான் வரவேற்கப்பட்டேன். பெரிய கிண்ணத்தில் பீன்சையும், சோள ரொட்டியோடு சுடப்பட்ட பின்டோ பீன்சையும் (pinto beans), வெட்டப்பட்ட வெங்காயத்தையும் கொண்டிருந்தோம். என்னால் அதைப் புசிக்க முடியுமா. உண்மையில் நான் அதைக் கொண்டு தான் வளர்க்கப்பட்டேன். நான் அப்படியே புசித்துக் கொண்டு ஒரு நல்ல நேரத்தைக் கொண்டிருந்தேன். ரைட் அம்மையார் எனக்கு ஒரு பெரிய செர்ரி காப்லரை (cherry cobbler) செய்து (சுட்டு) கொடுத்திருந்தார்கள், உங்களுக்குத் தெரியும், அந்த சிறிய மரத்திலிருந்து பறித்தவைகளைக் கொண்டு அதைச் செய்வார்கள், நான் வழக்கமாக அங்கிருந்து அதைப் பறிக்க அவர்களுக்கு உதவி செய்வேன். திரு. ரைட் அவர்கள் தமது எண்பதுகளில் (வயது) இருந்தார், அவர்களோ (ரைட் அம்மையார்) அந்தத் துன்பத்தை அனுபவிக்கும் பெண்ணைக் கொண்டவர்களாய் எழுபது சொச்சம் வயதுடையவர்களாய் இருந்தார்கள். எனவே நான்-நான் அந்த ஜனங்களுக்காக என்னால் கூடுமான எதையும் செய்வேன். அவர்கள் ஏழைகள்... 112. அங்கே மேலே புதிய சபையை, அந்தக் கூடாரத்தைக் கட்டுவதைக் குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம், திரு. ரைட் அவர்கள் என்னிடம், ‘கூடாரத்தைக் கட்டுவதற்கு எவ்வளவு பணம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்?’ என்று கேட்டார். நான், ‘சகோதரன் ரைட் அவர்களே, அதை அறிவதற்கு போதுமான அளவு நான் அங்கே இருப்பதில்லை’ என்றேன். 113. ‘என்னவென்று உமக்குத் தெரியுமா? ஹாட்டி சபைக்குக் 50 டாலர்கள் கொடுக்கும்படியாக வாக்குறுதி கொடுக்க விரும்பினாள், சபையின் தர்மகர்த்தாவாகிய சகோதரன் ராபர்ஸன் (அவர் அவர்களில் ஒருவராகவும் தலைவராகவும் இருக்கிறார்), அவள் அதைக் கொடுக்க அனுமதிக்கவில்லை. காரணம் என்னவென்றால், அங்கே மலைகளிலிருந்து 50 டாலர்கள் சம்பாதிக்க அவளுக்கு ஏறக்குறைய 6 மாதங்கள் பிடிக்கும். ஆனால் அவள் இருபது டாலர்கள் கொடுத்தாள், சகோதரன் பிரன்ஹாமே, அவள் விரும்புகிறாள்...’ என்றார். 114. நான், ‘என்னவென்று உமக்குத் தெரியுமா? நான்-நான் இங்கே என்னுடைய பாக்கெட்டில் 20 டாலர்கள் வைத்திருக்கிறேன். கொஞ்சம் முட்டைகளை வாங்கும்படி மேடா அதை எனக்குக் கொடுத்திருக்கிறாள்’ என்று நினைத்தேன். ‘நான் திரும்பிப் போவதற்கு முன்பு அந்த 20 டாலர்களை அவளுக்குக் கொடுத்து விடுவேன்... அவள் இங்கிருந்து தூரத்தில் இருக்கிறாள், உனக்கு ஒருபோதும் அது தெரியாது. எனவே நான்-நான் அவளுக்கு குளிர்சாதனப் பெட்டிகளையும் மற்றும் காரியங்களையும் வாங்கியிருந்தேன், ஏனென்றால் நான் அங்கே மேலேயிருந்த அவளுக்காக மிகவும் வருந்தினேன், அந்தச் சிறு தாய் தூரத்திலிருந்த மலையில் வேலை செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாள்’ என்றேன். எனவே நான், ‘நான் அப்படியே இந்த - இந்த 20 டாலர்களை அவளுக்குக் கொடுத்து விடுவேன், நான் அப்படியே செய்வேன். நான் இங்கிருந்து புறப்படும் போது, நான் அப்படியே இதைக் கொடுத்து விடுவேன், எனவே அதை அவள் பெற்றுக் கொள்வாள், அது மேலேயிருக்கிற சபையில் அவள் செலுத்தின அவளுடைய 20 டாலர்கள்’ என்று நினைத்தேன். எனவே நான், ‘நான் அப்படியே அதை அவளுக்குக் கொடுத்து விடுவேன்’ என்று நினைத்தேன். அவ்வாறு நான் சொன்ன போது... ஏதோவொன்று என்னிடம், ‘(மாற்கு 12:41-44, லூக்கா 21:1-4) ஆனால் உன்னுடைய கர்த்தர் ஒருநாள் ஒரு-ஒரு சுவரின் பக்கத்தில் நின்று கொண்டு, ஐசுவரியவான்கள் ஒரு பொக்கிஷ சாலைக்குள் ஆயிரக்கணக்கான டாலர்கள் பணத்தைப் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு சிறிய விதவை அருகில் வந்தாள், அவளிடம் மூன்று பென்னி காசுகள் மாத்திரமே இருந்தது, அது அவளுடைய எல்லா ஜீவனத்துக்கானது. இப்பொழுது, நீ அங்கே நின்றிருந்தால், நீ என்ன செய்திருப்பாய்? அந்த சிறு விதவை அந்த மூன்று பென்னி காசுகளை போடுவதை நீ கண்டு, ஓடிச் சென்று, ‘ஓ வேண்டாம், சகோதரியே, அதைச் செய்யாதே, அதைச் செய்ய வேண்டாம், ஏனென்றால் இங்கே எங்களிடம் நிறைய (பணம்) உள்ளது; எங்களுக்கு அது தேவையில்லை’ என்று கூறியிருப்பாய். ஆனால் இயேசு அதைச் செய்யாதே என்று ஒருபோதும் அவளிடம் கூறவில்லை. அவள் முன்னே சென்று அதைத் செய்ய அவர் அனுமதித்தார். ஏனென்றால் கீழே பாதையில் அவளுக்காக ஏதோவொன்று இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். (பாருங்கள்?), ஏதோ கொஞ்சம் மேலானது அங்கே இருந்தது’ என்றது. நீங்கள் பாருங்கள்? எனவே அவர் அவளை அனுமதித்தார். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் (2 கொரிந்தியர் 9:7). எனவே நான், ‘நல்லது, நான் அப்படியானால் என்னுடைய பணத்தை என்னுடைய பாக்கெட்டிலேயே வைத்திருப்பேன், (பாருங்கள்?) அப்படியானால் அதெல்லாம் சரியே; நான் அப்படியே அவள் அதைச் செய்ய விட்டு விடுகிறேன், ஏனென்றால் கர்த்தர் ஒருக்கால்...’ என்றேன். 115. நாங்கள் அங்கே அமர்ந்திருந்தோம், நான், ‘இப்பொழுது, வருகிற இந்த தரிசனமானது...’ என்றேன். இப்பொழுது, இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், நாம் வேறு ஏதோவொன்றோடு முடிக்கப் போகிறோம். இப்பொழுது, இது இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்திற்கு முன்பு நடந்தது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அல்லது வெறுமனே ஏறக்குறையை இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்தது. நான், ‘சகோதரன் உட், எனக்குப் புதிராயிருக்கும் அந்தக் காரியம்...’ என்றேன். அவர் என் அருகில் இதே போன்று இன்னுமாக மேசையில் உட்கார்ந்திருந்தார்; அங்கே வெளியே நுழைவாயிலில் தடுப்புத் திரை போடப்பட்டிருந்தது; அவர்கள் அதில் சுவரை எழுப்பி கட்டி, வேறொரு அறையை அதிலிருந்து உருவாக்கும்படியாக முயற்சித்திருந்தனர். குறுகிய நீளமான பலகையைக் கொண்ட நீள் சதுர மரச் சில்லோடுகளைக் கொண்டும் அதனூடாக முழுவதுமாக துவாரங்களை ஏற்படுத்தியிருந்தனர், மேலும் வீடுகள்... நான், ‘இந்த அணில்கள் மீதான (காரியம்) எப்போதுமே என்னைத் தொல்லைப்படுத்தியிருக்கிறது’ என்றேன். நான், ‘அங்கே... சகோதரன் உட், நாம் நல்ல அணில் வேட்டைக்காரர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் ஒரு சிறு பையனாயிருந்தது முதற்கொண்டு வேட்டையாடி வந்திருக்கிறேன். நீர் ஒரு கைதேர்ந்த வேட்டைக்காரர். சிறு பையன்களாய் இருந்தது முதற்கொண்டு நாம் வேட்டையாடி வந்திருக்கிறோம். சகோதரன் உட் அவர்களே, இந்த நிலைமையில், அந்த அணில்கள் எங்கிருந்து வந்தன? என்னால் அதை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் அங்கே அந்த நிலப்பரப்பை நோக்கியபடி நின்று கொண்டு, ‘அங்கே அணில் உண்டாக வேண்டும்’ என்று சொன்னேன். நான் அங்கே 45 நிமிடங்கள் உட்கார்ந்திருந்தேன். என்னுடைய விரலைக் கீழே போட்டிருந்ததைக் காட்டிலும் அதிகமாக எதுவும் இல்லாதிருந்தது, (ஆனால்) அங்கே ஒரு அணில் இருந்தது. ஒவ்வொரு தடவையும் அது அவ்விதமாகவே இருந்தது. வேறு எந்த இடத்திலிருந்தும் அணில் வரவில்லை’ என்றேன். 116. நான், ‘அது இதுவாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கக் கூடிய ஒரே காரியம் என்னவெனில்: தேவன் ஆபிரகாமை எவ்வாறு ஆசீர்வதிக்கப்போகிறார் என்பதை தேவன் அவனிடம் கூற முயற்சித்துக் கொண்டிருந்த போது தான். நெருங்கி வந்து கொண்டிருக்கிற என்னுடைய புதிய ஊழியமாக (அது கடைசியாக அந்தக் சிறு கட்டிடத்தில் உறுதிப்படுத்தப்படும் ஏதோவொரு பெரிய ஊழியமாக) இது இருக்குமானால்... அது இதுவாக இருக்குமானால், ஆபிரகாமைப் போன்று, ஆபிரகாமுக்குத் தேவையாயிருந்த காரியம் தன்னுடைய மகனுக்குப் பதிலாக ஒரு பலி தான். ஆதியாகமம் 22ம் அதிகாரத்தில் அது உள்ளது. (ஆதியாகமம் 22:8,13,14). அவன் தன்னுடைய மகனை பலியிடுவதிலிருந்து தேவன் அவனது கரத்தைத் தடுத்த போது, அங்கே ஒரு ஆட்டுக்கடா இருந்தது. அந்த ஆட்டுக்கடா எங்கிருந்து வந்தது? அவன் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்திலிருந்து 100 மைல்கள் தூரத்தில் இருந்தான். மூன்று நாட்கள் பிரயாண தூரத்தில் இருந்தான். எந்த மனிதனாலும் ஒரு நாளைக்கு 25 மைல்கள் தூரம் நடக்க முடியும். நான் அநேக தடவைகளில் ஒரு நாளைக்கு முப்பது முப்பத்தைந்து மைல்கள் நடந்ததுண்டு. இன்று நாம் கார் மூலமாகவும் மற்றவைகளின் மூலமாகவும் பிரயாணம் செய்கிறோம். அந்த நாட்களில் அவர்கள் தங்களுடைய வழியெல்லாம் ஒரு கழுதையில் சவாரி செய்வதன் மூலமாகவோ, நடந்து செல்வதன் மூலமாகவோ பிரயாணம் செய்வார்கள். அவன் மூன்று நாட்கள் பிரயாண தூரத்தில் இருந்தான், அப்போது அவன் தன்னுடைய கண்களை ஏறெடுத்து அந்த மலை அதிக தூரத்தில் இருப்பதைக் கண்டான். அதுவும் அல்லாமல், அவன் மேலே தண்ணீரே இல்லாத மலையின் ஊச்சியில் இருந்தான். அந்த ஆட்டுக்கடா அங்கே என்ன செய்து கொண்டிருந்தது? அது மனித நடமாட்டம் உள்ள இடத்திலிருந்து தூரத்தில் இருக்குமானால், அது காட்டு விலங்குகளால் கொல்லப்பட்டிருக்கும். அந்த ஆட்டுக்கடா எங்கிருந்து வந்தது? அந்த காரணத்தினால் தான் ஆபிரகாம் அந்த இடத்தை யேகோவா-யீரே, ‘கர்த்தர் தமக்காக ஒரு பலியை அருளிச் செய்வார்’ என்ற பெயரைக் கொண்டு அழைத்தான். அது அங்கே தோன்றும்படி அவரால் அதை உரைக்க முடியும்’ என்றேன். 117. தொடர்ந்து நான், ‘அவர் தமது ஜனங்களுக்கு ஒத்தாசை செய்யவும், நான் அதைச் செய்யும்படி அவர் அனுமதிக்கவும் போகிறார் என்பதை நான் அறியும்படி செய்ய வைப்பதற்காக, கர்த்தர் அங்கே என்னுடைய ஊழியத்தை உறுதிப்படுத்தியிருந்தால், அப்படியானால் அவர் அதே யேகோவா-யீரேவாக இருந்து... அவனுக்கு ஒரு ஆட்டுக்கடா தேவையாயிருந்தது போல எனக்கும் ஒரு அணில் தேவையாயிருந்தது, யேகோவா-யீரே தான் தம்முடைய அதே உரைக்கப்பட்ட வார்த்தையின் மூலமாக அதை அங்கு வைத்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். எப்படியும் அது நானாக இருக்கவில்லை, ஏனென்றால் நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் என்பதே எனக்குத் தெரியாதிருந்தது. அவர் தாமே அதைக் கூறினார்’ என்றேன். 118. அமைதியான சுபாவம் படைத்த அந்த சிறு சகோதரி ஹாட்டி அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்தாள், அவள் நாட்டுப்புற பெண்கள் அணிவது போன்று தூசி படிந்த குல்லாய் அணிந்திருந்தாள். அவள் ஒரு நல்ல சுத்தமான உடையை உடுத்திக் கொண்டு, எனக்காக ஆகாரத்தை சமைப்பதற்கு அவளுடைய தாயாருக்கு ஒத்தாசை செய்து கொடுக்கும்படியாக அவள் வந்திருந்தாள். அவள் இவ்விதமாக தன்னுடைய கரத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்து, ‘அது உண்மையேயன்றி வேறல்ல’ என்றாள். அவள் சரியான காரியத்தைக் கூறினாள். இதோ என்னுடைய வேதாகமம் இருக்கிறது, ஒரு தேவனுடைய ஊழியக்காரனாக, நான் இதைக் கூறுகிறேன். அவள் கடைசியாக சொன்னதை நான் கேட்க முடிவதே கடினமாக இருந்தது. அவளுடைய தாயார் ஏதோவொன்றைக் கூற முயற்சித்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் எனக்கு அது புரியவில்லை. நான்... அவள் அதைக் கூறின போது, அவள் சரியான காரியத்தைக் கூறினாள். கர்த்தருடைய ஆவியானவர் என்னிடம், ‘அவள் விரும்புவதைக் கேட்கும்படி அவளிடம் கூறு, நீ அவள் விரும்புவதை அவளுக்குக் கொடு’ என்றார். என்னால்-என்னால் பேசவே முடியவில்லை. அந்த அறையிலிருந்த எல்லாருமே விநோதமாக உணர்ந்தனர். நான், ‘சகோதரி ஹாட்டி’ என்றேன். அவள், ‘ஆம், சகோதரன் பிரன்ஹாம் அவர்களே’ என்றாள். 119. நான், ‘கர்த்தர் உரைக்கிறதாவது, ‘நீ விரும்புகிற எதையும் பேசு (speak)’.அது என்னவாக இருந்தாலும் கவலையில்லை. தேவன் இந்த ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார் என்பதை நீ அறிய விரும்பினால், நீ விரும்புகிற எதையும் பேசு (ள்ல்ங்ஹந்)’. கர்த்தர் உரைக்கிறதாவது, ‘நீ அதை உரைப்பாயானால் (ள்ல்ங்ஹந்), நான் உனக்குப் பின்னாலிருந்து அதை உரைப்பேன், அப்போது நீ சரியாக இங்கேயே அதைப் பெற்றுக் கொள்வாய்’’ என்றேன். எட்டு பேர் அங்கே நின்று கொண்டு அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்... அவள், ‘சகோதரன் பிரன்ஹாமே, நான் என்ன பேசுவது?’ என்று கேட்டாள். நான், ‘அது உன்னைப் பொறுத்தது’ என்றேன். 120. அங்கே அவளுடைய ஊனமுற்ற சகோதரியும், அவளுடைய வயதான தகப்பனாரும் அமர்ந்திருந்தனர். அவள் ஏழையாக இருந்தாள்; பணத்தை கேட்கலாம். அவள் விரும்பின எதையும் கேட்க முடியும். நான், ‘உன்னுடைய இருதயத்தில் இருக்கிற எதையும், நீ விரும்புகிற எதையும் கேள்; நீ அதைக் கேள், கர்த்தர் உரைக்கிறதாவது, நான் உனக்குப் பின்னாலிருந்து அதை உரைப்பேன், அது உனக்கு உண்டாகும்’ என்றேன். அவள், ‘என்னுடைய இரண்டு பையன்களின் இரட்சிப்பு வேண்டும்’ என்றாள். 121. நான், ‘கர்த்தருடைய நாமத்தில், நீ அதைக் கொண்டிருக்கிறாய்’ என்றேன். கிறிஸ்துவினிமித்தமாக வெறுப்படைந்திருந்த குறும்புக்கார (snicklefritz) நவீன டீன்ஏஜ் பையன்களாகிய அந்த இரண்டு சிறிய பையன்களும் சடுதியாக ஒருவன் மற்றவனைப் பற்றிக்கொண்டு, தேவனை ஸ்தோத்தரித்து சத்தமிடத் துவங்கினர். தேவனுடைய வல்லமை அந்த இடத்தில் விழுந்து, பாங்ஸ் தன்னுடைய உணவுத்தட்டிலேயே (plate) விழுந்தார். ஏறக்குறைய 10 நிமிடங்களாக என்ன சம்பவித்தது என்பதே எனக்குத் தெரியவில்லை. 122. நண்பனே, அது என்னவென்று புரிகிறதா? அப்படிப்பட்ட அபிஷேகத்தை என்னுடைய முழு ஜீவியத்திலும் ஒருபோதும் உணர்ந்ததேயில்லை. அது ஒரு மனிதனின் மேல் நடப்பிக்கப்பட்டது அதுவே முதல் தடவையாகும். அது உயர்குடி மக்களையும், மற்ற யாவற்றையும் புறக்கணித்து விட்டு, அங்கே மலையின் மேல் ஜீவித்துக் கொண்டிருந்த ஒரு சிறு ஏழை விதவை பெண்ணிடம் சென்றது. அவள் எதைக் கேட்பாள் என்று தேவன் அறிந்திருந்தார். அவளுடைய இரண்டு பையன்களும் அது உரைக்கப்பட்ட அதே நிமிடத்திலேயே மகிமையான விதமாக இரட்சிக்கப்பட்டனர். அவள் 10,000 டாலர்கள் கேட்டிருந்தாலும், அது அவளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும். அவள் தன்னுடைய சகோதரியின் சுகத்தைக் கேட்டிருந்தாலும், அது அவளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும். அவள் எதைக் கேட்டிருந்தாலும், அது அவளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும். 123. இப்பொழுது ஜீவனுள்ள தேவனுடைய சபையானது, முழு உலகத்தையும் அசைக்கப்போகிற ஒரு மண்டலத்திற்குள் (sphere) போய்க் கொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். நசரேயனாகிய இயேசுவின் (Jesus of Nazareth) நாட்கள் முதற்கொண்டு, ஒரு மனிதனுக்கு (சம்பவிக்கிறது) இதுவே முதல்முறையாகும். ‘நீங்கள் விரும்புகிற எதையும் கேளுங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும். நீங்கள் விரும்புகிற எதுவும்.’ இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் காணவில்லையா? ஓ, அது வெகு சீக்கிரத்தில் சம்பவிக்கப் போகிறது. இந்தக் கூட்டத்தில் அது சம்பவிக்கும்படி நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது இப்பொழுதே சம்பவிக்க நான் வாஞ்சிக்கிறேன். அந்த அபிஷேகமானது ஜீவனுள்ள தேவனுடைய முழு சபையின் மேலும் விழும், அவள் அணிவகுத்துச் செல்லும் ஒரு பலம்பொருந்திய இராணுவத்தைப்போல, தன்னுடைய காலூன்றி எழுந்து நிற்பாள். ஒரு வார்த்தையின் மூலமாக வியாதியஸ்தர் சுகமடைவார்கள்; குருடர்கள் காண்பார்கள்; செவிடர்கள் கேட்பார்கள்; மரித்தவர்கள் உயிரோடு எழும்புவார்கள்; தேவனுடைய வல்லமையானது ஜீவனுள்ள தேவனுடைய சபையைக் கொண்டு உலகத்தை அசைக்கும். நாம் இப்பொழுது அதை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிக்கிறோம். அது அதிசீக்கிரமாய் சம்பவிக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். அது மிகச்சரியாக அதேவிதமாகவே சம்பவிக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். அது தேவனுடைய சபையின் மேல் சீக்கிரமாக விழப்போகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். உலகத்தை அசைக்கும் ஒரு எழுப்புதல் ஆரம்பிக்கப் போகிறது. நான் அதை விசுவாசிக்கிறேன். 124. வானங்களையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருடைய ஊழியக்காரனாகிய நான், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இப்பொழுது உங்களுக்கு முன்பாக இங்கே நின்று கொண்டிருக்கிறேன், அந்த வார்த்தைகள் உண்மையானவைகளாகும். ஓ, நாம் ஏதோவொன்றின் அருகாமையில் இருக்கிறோம். என்னுடைய இருதயம் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறது. என்னால் என்னுடைய ஓட்டல் அறையில் கூட இளைப்பாற முடியவில்லை. கடந்த இரவில் என்னால் உறங்கவே முடியவில்லை. அது ஒருபோதும் என்னை விட்டு அகலவில்லை; அது... என்னால் இங்கே வெளியே சாலையில் வரும் போதும் உறங்க முடியவில்லை; நான் இரவில் ஏறக்குறைய இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் உறங்கவில்லை. என்னால் சற்றும் இளைப்பாற முடியவில்லை, ஏனென்றால் ஏதோவொன்று சம்பவிக்கப் போகிறது என்று எனக்குத் தெரியும். நாம் இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக நம்முடைய தேவன் காட்சியில் அசைவாடப் (move on the scene) போகிறார். 125. அவர் அங்கே முற்காலத்தில் கரத்தைப் (பிடித்து) பகுத்தறிவதைக் குறித்தும், இருதயத்தின் இரகசியங்களைப் பகுத்தறிவதைக் குறித்தும் கூறினது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, அவர் வேறு ஏதோவொன்றையும் வாக்குப்பண்ணியிருக்கிறார்; இதோ அது ஏற்கனவே ஜனங்கள் மத்தியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனங்கள் அங்கே நின்று கொண்டிருக்கின்றனர்... கடந்த ஞாயிறு காலையில், அங்கே ஜெபர்ஸன்வில்லிலுள்ள எங்கள் சபையில், அல்லது, இப்பொழுதிலிருந்து ஒரு வாரமிருக்கும், ஞாயிற்றுக் கிழமையில், நான் அதைக் கூறின போது, ரைட் அவர்களின் முழு குடும்பமும் அங்கே நின்று கொண்டு சாட்சி பகர்ந்தனர். ஆசீர்வாதங்கள் அந்த வீட்டை விட்டு ஒருபோதும் விலகிப் போகவில்லை. அவர்கள் அப்படியே - அது அதே இடத்தைப் போன்று காணப்படவில்லை என்று அவர்கள் கூறினர். அந்த சிறு பெண், அவள் - ஒரு குழந்தையாய் இருந்தது முதற்கொண்டு அவளுடைய ஜீவியத்தில் ஒருபோதும் உரத்த சத்தமிட்டதேயில்லை என்று நினைக்கிறேன், (ஆனால்) அவளுடைய சத்தமானது மூன்று நகர வட்டாரங்கள் தூரத்திற்கு கேட்குமளவிற்கு தேவனைத் துதித்து சத்தமிட்டுக் கொண்டிருந்தாள். தேவனுடைய வல்லமையானது - என்னால் எதையும் கூற முடியாத அளவுக்கு நாங்கள் உணர்ச்சியற்று மரத்துப் போனவர்களாயிருந்தோம் (numb); நான் அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே நடந்து போயாக வேண்டியிருந்தது. நான் தேவனுடைய வல்லமையால் அபிஷேகம் பண்ணப்பட்டேன். அவர் தேவனாயிருக்கிறார். அவர் ஜீவிக்கிறார். 126. ஒரு மகத்தான காரியம் அவசியம் என்று நான் உணருகிறேன். இப்பொழுது இதைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார், நாம் ஒரு இரவைக் கொண்டிருக்க வேண்டும் என்று நம்புகிறேன், நாம் நம்மையே பிரதிஷ்டை செய்ய வேண்டிய இரவு இதுவாகும். நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா? தேவனுடைய சபையே, நீங்கள் ஆயத்தமா? அப்படிப்பட்ட ஒரு அசைக்கப்படுதலுக்காக நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? ஒவ்வொரு பாவத்தையும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் அடக்கம் பண்ணி விட்டீர்களா? உங்களுடைய எல்லா தவறுகளையும் அறிக்கை பண்ணி விட்டீர்களா? 127. ஓ, சுவிசேஷத்தின் ஊழியக்காரர்களே, என்னுடைய விலையேறப்பெற்ற சகோதரர்களே, நான் உங்களுக்கு சத்தியத்தைக் கூறுகிறேன், எனவே எனக்கு உதவி செய்யுங்கள், அது உண்மை என்று தேவன் அறிவார். இப்பொழுது சமீபமாயிருக்கிற ஏதோவொன்றை மறைமுகமாக நாம் அப்படியே பின்தொடர்ந்து கொண்டிருக்கிறோம். அது எங்கே என்றும், எப்போது என்றும், எப்படி என்றும் எனக்குத் தெரியாது, ஆனால் நான் சரியாக தேவனுடைய சத்தியத்தையே உங்களிடம் கூறுகிறேன், அது உண்மை என்பதை தேவன் அறிவார். இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இங்கேயிருக்கிறார், அவர் சுகமளிக்கிறார், சுகமளிக்கிறார். நாம் இன்றிரவு நமது ஆத்துமாக்களில் சுகத்தைப் பெற்றுக் கொள்வோம்; நாம் நம்மையே அந்த நிலையில் பொருத்திக் கொள்வோம். 128. இன்றிரவு ஜெப அட்டைகள் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று பில்லியிடம் நான் கூறினேன். நான் ஒரு ஜெப வரிசையை விரும்பவில்லை. நான் ஒரு பிரதிஷ்டையைத் தான் வாஞ்சிக்கிறேன். இந்த சபையானது தேவனிடம் மிகவும் நெருங்கி வர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இங்கே இந்த சபையினூடாக சடுதியில் வெடித்துக் கிளம்புகிற அதை நாம் ஒருக்கால் இங்கே இந்தக் கூட்டத்தில் (கொண்டு) இருக்கும் அளவுக்கு இது தேவனிடம் மிகவும் நெருங்கி வர வேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன். அது சம்பவிக்கிற போது, கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது என்று நான் உங்களிடம் கூறுகிறேன். சத்துரு தன்னுடைய அணுகுண்டுகளோடு வெள்ளத்தைப் போல வந்து கொண்டிருக்கிறான். தேவனுடைய ஆவியானவர் அதற்கு விரோதமாக எப்போதுமே கொடியேற்றிக் கொண்டிருக்கிறார். 129. மேலும் சற்று ஞாபகம் கொள்ளுங்கள், - அதைக் குறித்து நான் உங்களிடம் கூறினபடி. கரத்தைப் பிடித்து பகுத்தறிந்தது முதற்கொண்டு, இருதயத்தின் இரகசியங்களைப் பகுத்தறிந்தது வரை, அந்தக் காரியங்கள் எப்படியாக ஒவ்வொரு முறையும் நிறைவேறியது, அது சம்பவிக்கும் என்று சொல்லப்பட்ட விதமாகவே சரியாக சம்பவித்திருக்கிறது. அது அப்படியே வேதவாக்கியங்களோடு இம்மியும் பிசகாமல் சரியாக இருக்கிறது. இருதயத்தின் இரகசியத்தை அறிந்து கொள்வதைக் குறித்து, அது உங்களுக்கு நிரூபித்துக் காட்டினபடி, இயேசு எப்படியாக அந்த திரளான ஜனங்களை உற்றுப்பார்த்து, பகுத்தறிந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட ஜனங்களைக் குறித்தும், மற்றவர்களைக் குறித்தும் கூற முடிந்தது. நாம் நேற்று கொண்டிருந்தது போன்று, எப்படியாக அந்த மழை, பின்மாரி மழை, முன்மாரி மழையும் பின்மாரிமழையும் ஒன்றாக இருந்தது. அது அப்படியே மிகச்சரியாக இருக்கிறது. 130. தேவனுடைய சபையே, நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் உங்கள் மத்தியில் மனசாட்சியால் ஏற்படும் அநேக தயக்கங்களைப் (உறுத்தல்களைப்) (scruples) பெற்றிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் நிலைகுலைந்து குழப்ப நிலையடைவதும் மற்றும் தெளிவடைவதுமாகிய அநேக காரியங்களையும் (ஏற்றத்தாழ்வுகளையும்) மற்ற யாவற்றையும் பெற்றிருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் இன்னும் ஜீவனுள்ள தேவனுடைய சபையாக இருக்கிறீர்கள்; தேவனுடைய கிருபையால் நீங்கள் அவ்வாறு இருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்திருந்தாலும், அல்லது எவ்வாறு செய்திருந்தாலும் காரியமில்லை, தேவன் உங்களுடைய பாவங்களை உங்களுக்கு மன்னிக்கிறார்; அவர் ஒரு பிரதிஷ்டையை விரும்புகிறார். 131. பிலேயாம் எவ்வாறு இஸ்ரவேலரை கீழே நோக்கிப்பார்த்து, ‘செய்யக்கூடிய சகல அசுத்த காரியங்களையும் அவர்கள் செய்துள்ளனர்’ என்றான். ஆனால் அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய சபையாக இருந்ததை அவன் காணத் தவறினான். அங்கே அவர்களுக்கு முன்பாக அந்த அடிக்கப்பட்ட கன்மலையும், அந்த வெண்கல சர்ப்பமும் இருந்தது, அங்கே அவர்களுக்காக ஒரு பரிகாரம் (atonement) வைக்கப்பட்டிருந்தது. பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் ஒவ்வொருவரையுமே, இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது சகல பாவங்களிலுமிருந்தும் சுத்திகரிக்கிறது (1 யோவான் 1:7). அல்லேலூயா! கர்த்தருடைய ஆவியானவர் இப்பொழுது இங்கேயிருக்கிறார். அது கர்த்தருடைய நாமத்தில் நான் உரைப்பதாயுள்ளது. யாராவது அதை விசுவாசிக்கவில்லை என்றால், உங்கள் வியாதியைக் குறித்து தேவனிடம் பேசி, அதைக் கண்டு கொள்ளுங்கள். அது சத்தியம் அல்லவா என்பதை சற்று பாருங்கள். 132. (அந்நிய பாஷையில் பேசி, அர்த்தம் உரைக்கப்படுகிறது - ஆசிரியர்.) ஆமென். சிலர் வியப்படைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் கவனித்தேன். நான் இதை நேராக்கட்டும்; ஒருவர் பேசிக் கொண்டிருந்தார், அநேக வார்த்தைகளல்ல. மற்றொருவர் அநேக வார்த்தைகளில் அர்த்தம் உரைத்தார். அந்த ஸ்திரீ அர்த்தம் உரைப்பதிலிருந்து தீர்க்கதரிசனத்திற்குள் சென்றாள். அது மிகவும் சரியே. அது சரியாக குறிக்கோளை அடைந்தது; அது முற்றிலும் சரியே. அவள் சத்தியத்தை உரைத்தாள். ஆமென். 133. பரிசுத்த ஆவியானவர் இங்கேயிருக்கிறார், ஜீவனுள்ள தேவனுடைய வல்லமை இங்கேயிருக்கிறது. வியாதியா? நீங்கள் வியாதியஸ்தராய் இருக்க வேண்டிய அவசியமேயில்லை. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஊனமுற்றவர்களும், உபத்திரவப்படுகிறவர்களுமாகிய யாராவது எங்காவது இருக்கிறீர்களா? அங்கே சக்கர நாற்காலியில் இருக்கிற உங்களைக் குறித்து என்ன? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டு, அவரை நோக்கிப் பார்த்துக் கொண்டு, சிவப்பு கழுத்தணியை (tie) அணிந்து கொண்டு அங்கே பின்புறத்தில் ஒரு மனிதர் அமர்ந்திருக்கிறார். கர்த்தருடைய தூதனானவர் அம்மனிதன் மேல் நிற்கிறார். அவரை எனக்குத் தெரியாது: இருப்பினும், அவர் தம்முடைய கண்களில் கண்புரையைக் கொண்டிருக்கிறார். அது உண்மை. நீர் இங்கிருந்து வரவில்லை. சால்ட் லேக் சிட்டியிலிருந்து (Salt Lake City) வருகிறீர். இங்கே இருப்பது, இது உம்முடைய கடைசி இரவாகும். நீர் திரும்பிச் சென்று சுகமடைய விரும்புகிறீரா? அப்படியானால், எழுந்து உம்முடைய சுகத்தை ஏற்றுக் கொள்ளும்; அதை விசுவாசியும். ஆமென். ‘உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்...’ தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். 134. அங்கே சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் நீர் மரித்துக் கொண்டிருக்கிறீர். மரணமானது புற்றுநோயினால் உம்மேல் நிழலிட்டிருக்கிறது. நீர் அங்கே உட்கார்ந்து கொண்டு ஜீவிக்க முடியாது. நீர் தேவனாகிய கர்த்தரை விசுவாசிக்கிறீரா, அவர் நடுவில் இருக்கிறார் என்று விசுவாசிக்கிறீரா? உம்முடைய காலூன்றி எழுந்து நின்று, உம்முடைய சக்கர நாற்காலியை விட்டு துரிதமாக வீட்டிற்கு செல்லும். 135. இங்கேயிருக்கும் உங்களைக் குறித்து என்ன? இங்கே வெளியே யாராவது இருக்கிறீர்களா? அது... திரு. ஹேமண்ட், உம்மைக் குறித்து என்ன? தேவனாகிய கர்த்தர் உம்மை சுகப்படுத்த முடியும் என்று நீர் விசுவாசிக்கிறீரா? நீங்கள் அங்கே உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் உம்மை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிப்பீர்களானால், விசுவாசித்தபடியே வீட்டிற்குச் சென்று சுகமாயிருங்கள். அல்லேலூயா! 136. தேவனாகிய கர்த்தர் தமது ஜனங்களின் மத்தியில் இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் எல்லாரும் நம்முடைய காலூன்றி எழுந்து நிற்போம். இது தெய்வீக பிரதிஷ்டையின் வேளை. உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால். தேவனாகிய கர்த்தர் ஒரு பிரதிஷ்டையை விரும்புகிறார். நாம் அவருடைய சித்தத்திற்கும், அவருடைய வல்லமைக்கும் அவ்வாறு ஒப்புவிக்கும் வரை, அவரால் நம்மேல் உடைத்துக் கொண்டு வெளிப்பட முடியாது. பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது என்னிடம் இருப்பது போல, நாம் பாவத்திலிருந்தும், உலகத்தின் காரியங்களிலிருந்தும் அவ்வாறு நமது இருதயங்களை சுத்திகரித்து, பரிசுத்த ஆவியானவர் நம்மேல் வாசம்பண்ணி, இப்பொழுது நம்மை அவ்வாறு சூழ்ந்து கொள்ள அவரால் கூடும் வரை அவரால் உடைத்துக் கொண்டு வெளிப்பட முடியாது. 137. இந்தக் காரியங்கள் எனக்கு எப்படித் தெரியும்? அது நானல்ல; அது பேசிக் கொண்டிருக்கிற அவர் தான். நான் அவரைக் குறித்துள்ள சத்தியத்தைக் கூறியிருக்கிறேன். அங்கே ஏதோவொன்று புதிதாக உடைத்துக் கொண்டு வெளிவருகிறது. கவனித்துப் பாருங்கள், அது ஏற்கனவே சம்பவித்துக் கொண்டிருக்கிறது. நான் இந்த மேடையில் நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அது உடைத்துக்கொண்டு புறப்படும். சரி, அதற்காக ஆயத்தமாயிருங்கள், மகத்தான ஆசீர்வாதங்களோடு தேவனாகிய கர்த்தரைப் பெற்றுக் கொள்ள ஆயத்தமாயிருங்கள். தேவனுடைய சபையாகிய நீங்கள், ஜீவனுள்ள தேவனுடைய சபையாகிய நீங்கள் ஒவ்வொருவரும், இப்பொழுது, இந்த இரவை இதற்காக எடுத்துக் கொள்ளுங்கள்: ஒரு பிரதிஷ்டைக்காக, தேவனுக்கு ஒரு பிரதிஷ்டைக்காக பயன்படுத்துவோம். நீங்கள்... எடுத்துக் கொள்ளுங்கள். வியாதிப்பட்டுள்ள ஜனங்களாகிய நீங்கள், உங்கள் வியாதிகளை மறந்து விடுங்கள். பரலோகத்தின் தேவன் இங்கே நிற்கிறார். அவர் எங்கேயிருக்கிறார்? பரலோகத்தின் தேவன்... எல்லாவிடங்களிலுமுள்ள உங்கள் மேலாகவும், உங்களினூடாகவும், உங்களுக்குள்ளும் இருக்கிறார். நிச்சயமாக அவர் இருக்கிறார். உங்கள் கரங்களை உயர்த்தி, உங்கள் சத்தங்களை உயர்த்துங்கள். உங்களை நீங்களே கர்த்தருக்கு பிரதிஷ்டை பண்ணுங்கள். 138. தேவனாகிய கர்த்தாவே, நான் என்னையே பிரதிஷ்டை பண்ணுகிறேன். கர்த்தாவே, இந்த புதிய ஊழியத்தில் எனக்கு ஒத்தாசை பண்ணும், உமது வல்லமையும், உமது வலிமையும், உமது இரக்கமும் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு என்னை அபிஷேகிக்கட்டும், நீர் இந்த சபையையும் இந்தக் காரியங்களையும் பிரதிஷ்டை பண்ணும், இந்த பிராணிகள் அங்கேயிருக்கும் என்று நீர் உரைத்த இந்தப் பிராணிகளைக் குறித்து நான் கூறியிருக்கிறேன். தேவனாகிய கர்த்தாவே, உமது சபையை வல்லமைக்குள்ளும், உமது பாதுகாப்புக்குள்ளும் கொண்டு சென்று, பரிசுத்த ஆவியால் நிறைத்தருளும். ஓ கர்த்தாவே, சபையின் பாவங்களை மன்னியும். கர்த்தாவே, எங்களுடைய வித்தியாச பேதங்களை மன்னித்து, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பரத்திலிருந்து புத்துணர்ச்சியாகவும் புதிதாகவும் உமது ஜனங்கள் மேல் ஊற்றும். இதை அருளும், கர்த்தாவே. 139. உங்கள் கரங்களை மேலே உயர்த்தி, அவரைத் துதியுங்கள். மகிமையான துதிகளைப் பாடுங்கள். உங்களையே அவருக்கு பிரதிஷ்டை பண்ணுங்கள். அந்த மனிதர் சக்கர நாற்காலியை விட்டு வெளியே வந்து தமது கரங்களை மேலே உயர்த்தி தேவனைத் துதித்துக் கொண்டிருக்கிறார். அந்த சக்கர நாற்காலியில் இருந்த மனிதர் வெளியே வந்து தேவனுக்கு துதி செலுத்திக் கொண்டிருக்கிறார். அல்லேலூயா! ஜனங்களே, நீங்கள் எல்லாரும் அவருக்கு மகிமை செலுத்துங்கள். பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து, அதை பிரதிஷ்டைக்குள்ளாக எடுத்துக் கொண்டு செல்வாராக. நீங்கள் எல்லாரும் உங்கள் இருதயங்களை ஆழமாகத் தோண்டி, எல்லா கசப்பான வேர்களையும் வெளியே எடுத்துப் போடுங்கள். நீங்கள் உங்கள் இருதயத்தில் வைத்திருக்கிற எல்லா பாவங்களையும், எல்லா அவிசுவாசத்தையும், எல்லா சந்தேகங்களையும் (skepticism) வெளியே எடுத்துப் போடுங்கள்; அதை வெளியே எறிந்து விடுங்கள். ஆயத்தமாகுங்கள், பரிசுத்த ஆவியானவர் உங்கள் மத்தியில் மகத்தான காரியங்களைச் செய்யப் போகிறார். 140. தேவனாகிய கர்த்தாவே, உம்மிடம் தங்களையே பிரதிஷ்டை பண்ணியுள்ள உம்முடைய பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்டருளும். நாங்கள் விசுவாசத்தோடு வருகிறோம். கர்த்தாவே, நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம்; எங்கள் முழு இருதயத்தோடும் நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம். எங்கள் பாவங்களுக்காக நாங்கள் மனஸ்தாபப்படுகிறோம். கர்த்தாவே, என்னுடைய எல்லா தப்பிதங்களையும் எனக்கு மன்னியும். என்னுடைய ஊழியக்கார சகோதரர்களின் தப்பிதங்களுக்காகவும் அவர்களை மன்னித்தருளும். சபையோருடைய தவறுகளுக்காகவும் அவர்களை மன்னியும். தேவனாகிய கர்த்தாவே, எங்கள் இருதயங்களை மிகவும் ஆழமாக அன்போடும் வல்லமையோடும் பிரதிஷ்டையோடும் பரிசுத்தப்படுத்தும். கர்த்தாவே, எங்கள் மேல் தயவாயிரும். உம்முடைய வல்லமையை ஊற்றும். நாங்கள் தவறான எதையும் செய்ய மாட்டோம். அந்த இரவில், அந்த இளைஞனிடம் தீமையானதைப் பேசும்படியாக கொடுக்கப்பட்டிருந்த அதே காரியத்தை இங்கிருக்கிற ஒவ்வொரு மனிதனும் செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் உமது வல்லமையை தீமையான காரியங்களுக்காக உபயோகப்படுத்த மாட்டோம். கர்த்தாவே, நாங்கள் அதை வியாதிப்பட்டுள்ள உமது பிள்ளைகளை சுகப்படுத்தும்படிக்கு உமது மகிமைக்காக மாத்திரமே உபயோகிப்போம். 141. ஓ, கர்த்தாவே, உமது வல்லமையை அனுப்பும், அதை எங்கள் மேல் அனுப்பும், கர்த்தாவே. எங்களுடைய விருப்பத்திற்காக அல்ல, தேவனுடைய மகிமைக்காகவே. ஜாதிகள் கொந்தளித்து, ‘அவர்கள் விருதா காரியங்களைச் சிந்திக்கிறார்கள்’ (சங்கீதம் 2:1, அப். 4:25) என்று அவர்கள் கூறுகின்றனர்... ஆனால் பரிசுத்த ஆவியானவர் நாங்கள் ஒன்றாகக் கூடி, தேவனாகிய கர்த்தரின் வல்லமையான சம்பவங்களைக் கூறிக்கொண்டிருக்கும் இந்த இடத்தை மீண்டுமாக அசைப்பாராக. இதை அளியும், கர்த்தாவே. வேகமாக அடிக்கும் பலத்த காற்று ஒவ்வொரு இருதயத்தினூடாகவும் வீசியடிப்பதாக, எல்லா பாவங்களையும், எல்லா அக்கிரமங்களையும், எல்லா சந்தேகங்களையும், எல்லா பயங்களையும் சுட்டெரித்துப் போடும், ஒவ்வொரு நபரும் உம்மிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு பரிசுத்தவானாக ஆவார்களாக. ஓ கர்த்தாவே, எங்கள் (ஜெபத்தைக்) கேட்டருளும். நாங்கள் இங்கிருந்து தைரியத்தோடு போவோமாக. நாங்கள் எங்கள் இருதயங்களில் ஆழமாக தங்கியிருக்கும் ஒரு சமாதானத்தோடும், நாங்கள் வேண்டிக் கொள்கிற மலைகளை அசைக்கும் ஒரு உண்மையான விசுவாசத்தோடும் போவோமாக. இதை அளியும், பிதாவே. 142. என்னுடைய ஊழியக்கார சகோதரர்களை ஆசீர்வதியும். இங்கே வந்திருக்கிற எல்லாரையும் ஆசீர்வதியும். வியாதியாயுள்ள ஜனங்களையும் ஆசீர்வதியும். இதோ நீர் வியாதியஸ்தரை சுகப்படுத்தியிருக்கிறீர். இதோ உபத்திரவப்பட்டவர்களாய் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்து நின்று கொண்டிருக்கிறார்கள். ஊன்று கோல்களைக் கொண்டிருந்தவர்கள் அவைகளைத் தரையிலே எறிந்து போட்டார்கள். வியாதியோடு உபத்திரவப்பட்டிருந்தவர்கள் தங்களுடைய கரங்களை மேலே உயர்த்தி உம்மைத் துதித்துக் கொண்டிருக்கிறார்கள். கர்த்தாவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம். நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம்; நீர் தேவன் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். வேண்டிக் கொள்ளப்பட்ட அந்தக் காரியங்களை நாங்கள் அறிவோம், நீர், ‘நீங்கள் ஜெபம் பண்ணும் போது, நீங்கள் கேட்பதைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அது உங்களுக்குக் கொடுக்கப்படும் (மாற்கு 11:24)’ என்று கூறினீர். அது உம்முடைய வார்த்தை, கர்த்தாவே; நாங்கள் அதை விசுவாசிக்கிறோம், எங்களுடைய ஜெபங்கள் - ஓ, கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய வாக்குத்தத்தங்களுக்காகவும், அவைகள் எல்லாம் சத்தியமாயுள்ளன என்பதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவைகள் ஒவ்வொன்றும் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கின்றன. எங்களைக் கேட்டருளும், கர்த்தாவே. எங்கள் மூலமாகப் பேசும், உம்முடைய மகிமைக்காக எங்களை உபயோகப்படுத்தும். நாங்கள் எங்களையே உமக்கு பிரதிஷ்டை பண்ணுகிறோம். நாங்கள் எங்களையே அர்ப்பணிக்கிறோம். 143. கர்த்தாவே, இன்றிரவு இந்த பிரசங்க மேடையில், நான் என்னைத்தானே புதிதாக அர்ப்பணிக்கிறேன். தேவனாகிய கர்த்தாவே, என்னை சோதித்துப் பாரும், என்னிடத்தில் தீமையான ஏதாவது இருக்குமானால், அதை எடுத்துப் போடும், கர்த்தாவே. உம்முடைய சபைக்கும் உம்முடைய ஜனங்களுக்கும் ஒத்தாசை புரியும்படியாக, சிறந்த ஒரு ஊழியம் செய்யும்படிக்கும், தேவனை சிறப்பாக புரிந்து கொள்ளும்படிக்கும், கூடுதலாக நீர் என்னை பயன்படுத்தக்கூடியது ஏதாவது இருக்குமானால், இதோ நான் இருக்கிறேன், கர்த்தாவே, பேசும், உமது ஊழியக்காரன் கேட்கிறேன். கர்த்தாவே, நான் மறுமொழி கூறுவேன், சற்று பேசும், நான் செய்ய வேண்டும் என்று நீர் கூறுகிற எதையும் நான் செய்வேன். தேவனாகிய கர்த்தாவே, எனக்கு உமது பார்வையில் தயவு கிடைப்பதாக. சுய மகிமைக்காக அல்ல. கர்த்தாவே, நீர் அந்த அக்கினிகளில் என்னை சோதித்திருக்கிறீர், ஆனால் உமது சபைக்கு உதவி செய்யவும், உமது ஜனங்களினிமித்தமாகவும், அது இப்பொழுது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அவர்கள் ஒரே சபையாகவும், ஒரே குழுவாகவும் ஒரே...ஆகவும் ஒன்றாகக் கூடி வருவார்களாக. நாங்கள் ஒரே நபராக உயிர்த்தெழுதலின் வல்லமையில் நிற்போமாக. நீர் உம்முடைய சபையின் மேல் உம்முடைய ஆவியையும் வரங்களையும் ஊற்றுவீராக. கர்த்தாவே, அது உலகத்திற்கு ஒரு முதன்மையான காரியமாக இருந்து, எல்லா மனிதரும் தாங்கள் கைவிடப்பட்டிருக்கிறது (left behind) என்ன என்பதை அறியக் காரணமாகும். இதை, அருளும், கர்த்தாவே. நீர் பதிலளிப்பீர் என்று விசுவாசித்து, நீர் பதிலளிக்கும்படியாக நாங்கள் இந்த ஜெபங்களை ஏறெடுக்கிறோம். உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால், (நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? உங்கள் கரங்களை இவ்விதமாக மேலே உயர்த்துங்கள், அப்படியே உங்கள் கரங்களை உயர்த்தி, முழு இருதயத்தோடும் அவரைத் துதியுங்கள். அப்படியே அவருக்கு துதியை செலுத்துங்கள்.) ...கல்வாரி மரத்தில். நான் அவரை நேசிக்கிறேன், (நீங்கள் உண்மையாகவே நேசிக்கிறீர்களா?ஆமென்.) (என்ன காரணத்தினால்?) அவர் முந்தி நேசித்ததால்... (நீங்கள் உண்மையாகவே அவரை நேசிக்கிறீர்களா? இப்பொழுது அப்படியே உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அவரைத் துதியுங்கள்.) ...இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 144. ஓ, அவர் அற்புதமானவர் அல்லவா? அவர் பெரியவர் அல்லவா? பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்துவின் இரத்தமானது உங்களுடைய இருதயத்தை பாவத்திலிருந்து கழுவி விடுதலையாக்கியிருக்கிறது போன்று நீங்கள் உணருகிறீர்களா? இப்பொழுது நீங்கள் நன்றாக உணருகிறீர்களா? எத்தனை பேர் தங்களுடைய ஜீவியங்களை புதிதாக தேவனுக்கு பிரதிஷ்டை பண்ணியிருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ‘ஓ கர்த்தாவே, நான் என்னைத்தானே உமக்கு பிரதிஷ்டை பண்ணுகிறேன். நீரே என் தேவன்; என்னுடைய இரட்சகர் இயேசு கிறிஸ்துவே. இப்பொழுது நான் என்னையே முழுவதுமாகவும், முற்றிலுமாகவும் உம்முடைய சேவைக்காக உமக்களிக்கிறேன்.’ உங்களுடைய இருதயத்தில் அவ்விதமாக இருக்கட்டும். தேவன் நம் மத்தியில் ஒரு மகத்தான காரியத்தைச் செய்யப் போகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அது ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. அது இவ்விதமாக ஆரம்பித்து விட்டிருந்தால், அது சிறிது நேரம் போன பிறகு அது என்னவாகப் இருக்கும்? கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம். 145. சரி, இப்பொழுது நாம் இங்கிருந்து புறப்பட்டு போவதற்கு முன்பு, ‘என் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது’ என்ற, சபையின் நல்ல பழைய இக்கீர்த்தனைப் பாடலை நாம் பாடுவோம். அங்கே தான் நாம் நிற்கிறோம்; ஒரு மலையைப் பெயர்க்கும் ஒரே காரியம் அதுதான். அப்போது தான் தேவன், அப்படிப்பட்ட தவறிப் போக முடியாத விசுவாசத்துக்கு உங்களை அபிஷேகம் பண்ண வேண்டியிருக்கிறது. ‘என் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது.’ நாம் இப்பொழுது நம்முடைய கண்களையும், நம்முடைய கரங்களையும், நம்முடைய இருதயங்களையும் தேவனை நோக்கி உயர்த்தினவர்களாய் இதைப் பாடுவோம். இப்பொழுது எல்லாரும் ஒன்றாகப் பாடுவோம். என் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியே, தெய்வீக இரட்சகரே; இப்போது, நான் ஜெபிக்கும்போது, எனக்குச் செவிகொடும், என் பாவம் அனைத்தையும் எடுத்துப்போடும், இந்த நாள் (முதல்) நான் முழுவதும் உம்முடையவனாயிருக்கட்டும்! நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம்... (சகோ. பிரன்ஹாம் தாழ்ந்த குரலில் பாடத் துவங்குகிறார் - ஆசிரியர்.) ...வாழ்க்கையின் இருள் சூழ்ந்த சிக்கலான பாதையில் நான் கால் வைத்து நடந்து, (இந்த ஊழியக்களங்களில்...) என்னைத் துயரம் சூழ்ந்து பரவும் போது, நீரே என் வழிகாட்டியாயிரும்; இருள் பகலாக மாறக் கட்டளையிடும், துயரத்தின் கவலைகளைத் துடைத்துவிடும், உம்மிலிருந்து நான் விலகாதபடிக்கு எப்பொழுதும் உம்பக்கமாக என்னை வைத்துக் கொள்ளும். (சகோ. பிரன்ஹாம் தாழ்ந்த குரலில் பாடத் துவங்குகிறார் - ஆசிரியர்.)...?... சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக.